தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/வாழைப்பழத் தோலின் மகிமை!

வாழைப்பழத் தோலின் மகிமை!

வாழைப்பழத் தோலின் மகிமை!


PUBLISHED ON : ஜன 21, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 21, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எல்லாருக்கும் விருப்ப மானது தான் வாழைப்பழம். அதே சமயம், அதன் தோலின் பலன்களை தெரிந்து கொண்டால், அதை, வீசி எறிய மாட்டீர்கள்.

முள்ளை எடுக்க வேண்டுமா?

கைகளிலோ, பாதத்திலோ மரச்சில்லு அல்லது முள் குத்தினால், அந்த இடத்தில் வாழைப் பழத்தோலை மெல்ல தடவுங்கள்; பின், அந்த இடத்தை சுற்றி அழுத்தம் கொடுத்தால், எளிதில், முள் வெளி வந்துவிடும்.

சொரியாசிஸ் பிரச்னையா...

சொரியாசிஸ் போன்ற சரும நோய்களுக்கும், சருமம் சிவந்தும், தடித்தும், எரிச்சலை ஏற்படுத்தும் சரும நோய்களுக்கும், பாதித்த இடங்களில் வாழைப் பழத் தோலை தேய்த்து வாருங்கள்; அரிப்பும், எரிச்சலும் நீங்கும்.

மருக்கள் நீங்க...

மருக்கள் நீங்க, அதன் மீது வாழைப் பழத் தோலை தேய்த்து, பின், மருக்கள் மீது வாழைப் பழத் தோலை வைத்து ஒரு துணியால் கட்டி, இரவு முழுவதும் வைத்திருங்கள்; நாளடைவில் மருக்கள் மறைந்து விடும்.

சரும அலர்ஜியா?

ஏதாவது பூச்சி கடித்தாலோ அல்லது வேறு பிரச்னைகளாலோ சருமம் தடித்து, அரிப்பு மற்றும் எரிச்சல் ஏற்பட்டால், முதலுதவியாய், வாழைப் பழத் தோலை பிரிஜ்ஜில் வைத்து, அதை, எரிச்சல் மற்றும் அரிப்பு இருக்கும் இடத்தில் தொடர்ந்து தேய்த்து வந்தால், நிவாரணம் கிடைக்கும்.

முகப்பரு நீக்க...

முகப்பரு இருக்கும் இடத்தில் வாழைப்பழத் தோலை தேய்த்தால், அதில் இருக்கும் என்சைம், சருமத்தின் துவாரங்களில் சென்று செயல் புரிந்து, முகப்பருக்களையும், அதனால் ஏற்படும் தழும்புகளையும் நீக்கி விடும்.

வெண்மையான பற்கள் பெற...

மஞ்சள் கறை இல்லாமல், பற்கள் வெண்மையாக இருக்க, இயற்கையான, 'ப்ளீச்' வாழைப் பழத் தோல்! தினமும் பல் விளக்கிய பின், காலையிலும், இரவிலும் வாழைப் பழத் தோலை வைத்து, பற்களை தேயுங்கள்; பற்கள் மின்னும்!

காயங்கள் ஏற்பட்டுள்ளதா?

பட்ட காலிலேயே படும் என்பது பழமொழி. காயம் வந்து, அது ஆறுவதற்குள் அங்கேயே திரும்ப அடிபடும். இதற்கு, தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுங்க; அதன் தோலை காயத்துக்கு பூசுங்க. உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லது; காயமும் விரைவில் ஆறிவிடும்.

இனி, வாழைப் பழத் தோலை வீசியெறியும் முன், மேலே சொன்ன எதற்காவது உபயோகப்படுமா என யோசித்து, பின் வீசிறியெறியுங்கள்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us