PUBLISHED ON : ஜன 21, 2018

அ நிறம் | அளவு
ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோவில், மிகவும் பிரபலமான தெரு, கப்பாபாஷி தோகு சாலை. இத்தெருவின் இருபுறங்களிலும், 170க்கும் அதிகமான கடைகள் உள்ளன.
சமையலுக்கு தேவையான, தேக்கரண்டி முதல் அண்டா, குண்டா, பிரியாணி டபரா செட்டிலிருந்து, பிளாஸ்டிக், பீங்கான் பாத்திரங்கள் வரை, அனைத்து சமையல் பாத்திரங்களும், உபகரணங்களும் இக்கடைகளில் விற்கப்படுகின்றன. ஒரே தெருவில் உள்ளதால், நம்மூர், சென்னை, தி.நகரிலுள்ள ரங்கநாதன் தெரு போன்று எப்போதும் கூட்டம் அலைமோதுகிறது.
— ஜோல்னாபையன்.
