PUBLISHED ON : ஏப் 15, 2018

அ நிறம் | அளவு
கேரள மாநிலம், திரிச்சூரை சேர்ந்தவர், 32 வயதான, ரம்யா; மூன்று குழந்தைகளுக்கு தாயான இவர், ஆஸ்திரேலியா ராணுவத்தில் அதிகாரியாக அசத்துகிறார்.
திருச்சூரில் கல்லுாரி படிப்பை முடித்து, அரபு நாட்டில் எண்ணெய் நிறுவனத்தில் பணியாற்றியபோது தான், இவருக்கு ராணுவத்தில் பணியாற்றும் ஆசை ஏற்பட்டது. உடனே, தன் கணவரின் அனுமதியுடன், ராணுவத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றார். 'ப்ராவோ 15' என்ற படைப் பிரிவில், 40 ஆண் சிப்பாய்களுடன் பணியாற்றும், 10 பெண்களில் ரம்யா மட்டும் தான் இந்தியர்!
- ஜோல்னாபையன்.
