PUBLISHED ON : ஆக 24, 2014

சீனாவின், சென்யான் நகரத்தை சேர்ந்த வாங் மேன் என்ற ஓட்டல்காரரின் வியாபார தந்திரத்தை கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள்... இவரின் ஓட்டலில், கட்டுமஸ்தான உடற்கட்டு உடைய ஜான் என்பவரை பீட்சா, பர்கர் தயாரிக்கும் வேலைக்கு அமர்த்தியுள்ளார். கடையின் முன் பகுதியில், சட்டையில்லாமல் அவரை நிறுத்தி, உணவுப் பொருட்களை தயாரிக்கும்படி கூறியுள்ளார். கட்டுமஸ்தான அந்த சமையல்காரரை பார்ப்பதற்கும், அவர் தயாரிக்கும் உணவை சாப்பிடுவதற்கும் ஏராளமான பெண்கள் குவிகின்றனர். கல்லாப் பெட்டி நிரம்பி வழிவதால் சந்தோஷத்தில் திளைக்கிறார் வாங் மேன். அவர் கூறுகையில்,'பீட்சா, பர்கர் போன்ற உணவுகளை பெண்கள் தான் அதிகம் விரும்பிச் சாப்பிடுகின்றனர். இதனால், பெண்களை கவர்ந்து இழுப்பதற்காக, கட்டுமஸ்தான ஜானை வேலைக்கு அமர்த்தினேன்; என் தந்திரம் பலித்து விட்டது. இப்போது என் ஓட்டலில், பெண்கள் கூட்டம் அலைமோதுகிறது...' என்கிறார்.
— ஜோல்னாபையன்.
