PUBLISHED ON : ஆக 23, 2020

அ நிறம் | அளவு
கேதார்நாத் நகரில், கங்கை நதி ஓரம், மனித உடல்களை எரியூட்டும் இடத்தில் உட்கார்ந்திருக்கிறார், இந்த அகோரி சாமியார். இவர் அருகே வருபவர்களிடம், மிரட்டல் தோரணையில் பணம் கேட்டு பெற்றுக் கொள்வார். யாரேனும் பணம் கொடுக்காவிட்டால், சாமியார், சாபமிடுவார் என்று எச்சரிப்பர், அங்கிருப்பவர்கள்.
உடல்கள் எரிந்து துர்நாற்றம் வீசும் இந்த இடத்தில் உட்கார்ந்து, பண வசூல் செய்யும் அகோரிகள், இந்த பணத்தை வைத்து என்ன செய்வர் என்று தெரியவில்லை. இவர்களுக்கு தான் குடும்பமோ, சொந்த பந்தங்களோ கிடையாதே!
— ஜோல்னாபையன்
