PUBLISHED ON : ஆக 23, 2020

அ நிறம் | அளவு
ஆட்டோவுடன், போஸ் கொடுப்பவர், பெயர், மஞ்சு. கேரளாவை சேர்ந்தவர். வயது, 36. முழு நேர ஆட்டோ ஓட்டுனர் அல்ல. கே.பி.ஏ.சி., என்ற பிரபல மலையாள நாடக குழுவில் முக்கிய நடிகையாக இருக்கிறார்.
கடந்த, 15 ஆண்டுகளாக, முன்னணி நடிகையாக இருந்த இவர், 'லாக் - டவுன்' காலத்தில் வருமானமின்றி தவித்தார். ஏற்கனவே ஆட்டோ வாங்கி, அதை பயன்படுத்தி வந்தார். 'லாக் - டவுனில்' வருவாய் இழந்தபோது, ஆட்டோ ஓட்டுனராக சாலையில் வலம் வந்தார். நடிகையும், சாதாரண பெண் தான் என்று நிரூபித்திருக்கிறார், மஞ்சு.
- ஜோல்னாபையன்
