PUBLISHED ON : டிச 07, 2014

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரும்பாலான சினிமா நடிகர் - நடிகைகள், தங்களுடைய நல்ல பழக்க, வழக்கங்களை மட்டும் தான் வெளியே சொல்வர். தங்களுக்கு இருக்கும் குடிப்பழக்கம் போன்ற பழக்கங்களை வெளியே சொல்வதில்லை. ஆனால், பாலிவுட் நடிகை அலியா பட், யாருக்கும் பயப்படாமல், 'நான் சரக்கு போடுவேன்...' என்று துணிச்சலாக கூறியுள்ளார். 'குபி ஹோ சக்தா ஹே' என்ற, 'டிவி' நிகழ்ச்சியை முன்னாள் இந்தி நடிகர் அனுபம் கேர், தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அலியா பட், 'நான் சரக்கு போடுவேன்; இரவு பார்ட்டிகளில் கலந்து கொள்வது மிகவும் சந்தோஷம் அளிக்கிறது. 16வயதிலேயே தந்தையிடம் பொய் சொல்லி, பார்ட்டிக்கு போயிருக்கிறேன்...' என்று கூறியுள்ளார்.
— ஜோல்னாபையன்.

