/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
தண்டனை பெற்றார்; ஓட்டப்பந்தய வீராங்கனையானார்!
/
தண்டனை பெற்றார்; ஓட்டப்பந்தய வீராங்கனையானார்!
PUBLISHED ON : டிச 07, 2014

கேரளாவில் உள்ள இத்தித்தானம் என்ற கிராம பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த அஞ்சு மர்க்கோஸ் என்ற சிறுமி, வகுப்பில் பாடத்தை கவனிக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த தலைமை ஆசிரியர், இதைக் கவனித்து, வகுப்பை கவனிக்காமல் வேடிக்கை பார்த்ததற்கு தண்டனையாக அஞ்சுவை பள்ளி மைதானத்தை சுற்றி இரண்டு முறை ஓடச் சொன்னார். அஞ்சுவும் அவ்வாறே செய்து முடித்தார்.
ஆண்டுகள் பல ஓடி விட்டன. அஞ்சு மர்க்கோஸ், அஞ்சு பேபி ஜார்ஜ் என்ற பெயரில் விளையாட்டு வீராங்கனை ஆகி, பரிசுகள் பல பெற்றார். சமீபத்தில், அவர் படித்த பள்ளியில் அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. அன்று, அஞ்சுவை மைதானத்தில் ஓட வைத்த ஆசிரியர், அது குறித்து வருத்தம் தெரிவித்த போது, 'அன்று நீங்கள் அளித்த தண்டனை தான், இன்று என்னை விளையாட்டு வீராங்கனை ஆக்கியுள்ளது...' என்று கூறி, அவருக்கு நன்றி தெரிவித்தார்.
— ஜோல்னாபையன்.

