
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரிப்பன் பகோடாவிற்கு, 2 கப் கடலை மாவிற்கு, 1 கப் அரிசி மாவு சேர்ப்பது சரியான அளவு. ரிப்பன் பகோடாவை, சிவக்க வேக வைத்து எடுத்தால் நன்றாக இருக்கும்
* மைதா மாவில் ரிப்பன் பக்கோடா செய்யும்போது, மாவை நன்றாக சலித்து, தண்ணீர் சேர்த்து பிசறி, மஸ்லின் துணியில் மூட்டையாக கட்டி, ஆவியில் வேக வைத்து செய்யலாம்
* முறுக்கு, வடை செய்யும் போது, மாவுடன் சிறிது தேங்காய் எண்ணெய் விட்டு பிசைந்து சுட்டால், சாப்பிட ருசியாகவும், மணமாகவும் இருக்கும்
* தேன் குழலுக்கு, அரிசி மாவு, 2 கப் என்றால், ஒரு கரண்டி உளுந்து மாவு தேவை.