எல்லாப் பூக்களும் எனக்கே ! - மதுனிகா ராணி- தொடர்கதை
எல்லாப் பூக்களும் எனக்கே ! - மதுனிகா ராணி- தொடர்கதை
PUBLISHED ON : ஜூலை 04, 2010

முன்கதைச் சுருக்கம்!
காடு சம்பந்தமாக ஆவணப் படம் எடுக்க சந்தியமங்கலம் காட்டுக்குச் சென்றான் யாத்ரா. அவனுடன், வீடியோகிராபர் அகராதி, பியூலா என்ற செக்ஸ் தொழிலாளி, நேசிகாவின் சகோ தரிகளான நீலக்கடல், செண்பக குழல்வாய்மொழி மற்றும் யாத்ரா வின் நண்பன் ஆசைதம்பியும் சென்றிருந்தனர். "ஆவணப்படம் எடுக்க, இத்தனை பெண்கள் தேவையா?' என, யாத்ராவிடம் கடிந்து கொண்டாள் நேசிகா—
(பகுதி-26)
திடுக்கிட்டு எழுந் தான் யாத்ரா. தன் மீது கிடந்த காலை எடுத்துப் போட்டான். உருண்டு விழுந்த மொழி, மீண்டும் வேறொரு வார்த்தையை உளறியபடி படுத்தாள். மேற்சட்டை விலகி, உடம்பை இறுக்கிச் சுற்றியிருந்த பேண்டேஜ் தெரிந்தது.
""செண்பகராமா!'' எழுப்பினான் யாத்ரா.
இருமுறை தட்டியபின் எழுந்தாள் மொழி. பெண் குரலில், ""என்ன... என்ன?''
யாத்ராவை பார்த்தவுடன், ""பேபே!'' என்றாள்.
""என்ன என்னவா... பேபே வா?''
எச்சில் விழுங்கினாள்.
கூடாரத்துக்கு வெளியே அழைத்துச் சென்று, ""இதென்ன வேஷம்... நேசிகாவின் தம்பி ஒப்பனையில் ஏன் இருக்கிறாய்?''
""பேபே...''
""இதற்குமேல் நீ நடித்தால், நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது... உன் உண்மையான பெயர் என்ன?''
இருந்த கொஞ்ச நஞ்ச தயக்கத்தையும் உதறி விட்டு, ""என் பெயர் செண்பக குழல்வாய் மொழி!'' என்றாள்.
""இப்ப எனக்கு ஓரளவு புரியுது... நீ நேசிகாவின் தங்கை... நான் காதலிக்கும் பெண்ணுக்கு, அக்கா, தங் கச்சி இருக்கக் கூடாதுன்னு நான் கண்டிஷன் போட் டேன்... அதனால், நேசிகா உன்னை ஆண் வேஷம் போடச் சொல்லி விட் டாள்... ஆண் குரல் உனக்கு வராது என்பதற்காக, உன்னை பிறவி ஊமை யாக்கி விட்டாள்.''
""ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மூளை உனக்கு... கண்டு பிடிச்சிட்டியே...''
""நேசிகாவுக்கு நீ ஒருத்திதான் தங்கச்சியா... இன்னும் ஏழெட்டு பேர் இருக் காங்களா?''
ஒரு வீட்டுக்குள் இரு திருடர்கள் திருடப் போனோம். ஒரு திருடன் மாட்டிக் கொண் டான். மாட்டிக் கொண் டவன், எதற்கு இன்னொரு திருடனை காட்டிக் கொடுக்க வேண்டும். மாட்டும் வரை அவனாவது திருடட்டுமே...
""இந்த காலத்துல, ஏழெட்டு பொண்ணுக பெற எவனுக்கு மஸ்த் இருக்கு... நான் ஒருத்திதான் நேசியின் தங்கச்சி!''
மீண்டும் யோசித்தான் யாத்ரா.
""உன்னை வேற எங்கேயோ பார்த் திருக்கேனே... அது, அது...''
அவனே சொல்லட்டும் என காத்திருந்தாள்.
""ஆஹா... டென்மார்க் ரீனாவும் நீ தானா?''
""சபாஷ்... கண்டுபிடிச்சிட்ட!'' கையை பிடித்து முத்தம் கொடுத்தாள்.
உதறினான்.
""குட்டு வெளிப்பட்டாலும், மென்மேலும் முன்னேறுறியே...''
""நான் உன் பணத்தை, வீட்டை, உடைமை... இதில் எதை திருடினேன்? என் அக்கா நேசிகாவின் ப்ரண்ட் நீ. உன்னை பார்த்ததும் நேசிகாவுக்கு எப்படி காதல் வந்துச்சோ, அப்படித்தான் எனக்கும் வந்துச்சு. என்ன, எனக்கு மட்டும் வீரியமா வந்துச்சு.
""அக்காவை திருப்திப் படுத்த, ஊமை ஆண் வேஷம் போட்டேன்; என்னை திருப்திப் படுத்திக்க, ரீனா வேஷம் போட்டேன்.
""கொஞ்சம் யோசிச்சு பாரு கண்ணாளா... உன் மேல எவ்வளவு காதல் இருந்தா, இப்படி டபுள் ஆக்ஷன் வேஷம்கட்டு வேன்? ஆம்பிளை வேஷம்ன்னா சும்மா நினைச்சியா? நரக வேதனை...''
அவள் மேலிருந்த கோபம் போய், செல்ல மாய், "மண்டு' எனக் கூறி, தட்டி சிரித்தான்.
""சிரிச்சிட்ட... அப்பாடா...''
""உன்னுடைய வேஷம், நீலக்கடலுக்கு தெரியுமா?''
""தெரியும்!''
""உன்னை என்ன பண்ணலாம்?''
""எது வேணாலும் செய் மன்னவனே... முல்லைக்கொடிக்கு தேர் கொடுத்தான் பாரி; உன் மேல் படர்ந்த மல்லிகை பந்தலுக்கு, உன் இதயத்தைக் கொடு. மெடிக்கல் இன்ஜினியரிங் அட்மிஷனுக்கு கட்-ஆப் மார்க் பாக்ற மாதிரி, உன் தோழிகளின் பெர்பாமன்ஸ் கட்-ஆப் மார்க் பார். என்னுடைய கட்-ஆப் மார்க்கை, எவளும் நெருங்க முடியாது. இன்னிக்கி நீ கண்டு பிடிக்கலைன்னா, பியூச்சர்ல மூணாவது, நாலாவது ரோல் போட்டாலும் போட்டிருப் பேன்... நானொரு கமல்ஹாசினி!''
விழுந்து, விழுந்து சிரித்தான் யாத்ரா.
""ரொம்ப பெனடிக்கா இருக்க... ஐ அப்ரிஷியேட் யூ!''
""இத... இதத்தான் நான் எதிர்பார்த்தேன்!''
""மொழி... ஒரு விஷயம் புரியாம இருக்கு. ஒண்ணு, எங்கப்பாவின் நிபந்தனைக்கு உங்க குடும்பம் ஒத்து வரல; ரெண்டு, நீயும், உன் அக்காவும் எனக்கு நம்பிக்கை துரோகம் பண்ணியிருக்கீங்க... இனி, நேசிக்கும், எனக்கும் கல்யாணம்ன்றது பகல் கனவு. நான் எப்பவும், எங்கப்பா கிழிச்ச கோட்டை தாண்ட மாட்டேன். அதிலும், இது ஒரு சீரியசான இஷ்யூ. இதில், கவனமில்லாம முடி வெடுப்பேனா?''
""யாத்ரா... நாங்க நம்பிக்கை துரோகம் பண்ணல... உங்கப்பாவின் தியரி அபத்தம். நாலஞ்சு அழகான கொளுந்தியாக்கள் இருக்கிற வீட்ல பொண்ணு கட்டி, சந்தோஷமா இருக்கிற ஆண்கள் பல பேரை நான் காட்டட்டுமா? உங்கப்பா பலவீனத்தை, உன்கிட்ட எதிர்ப்பார்க்கிறாரா?''
""தயவுசெஞ்சு வாதம் பண்ணாதே... அதுவும் இங்கே, காட்டுல. விடிந்ததும், உன் ஒரிஜினல் தோற்றத்துக்கு மாறிவிடு. இனி எங்க கூடாரத்துல படுக்காத... என் மீது உப்புமூட்டை ஏறாத... ஏதாவது சாக்கு, போக்கு வச்சு, "பச்பச்'னு கையில முத்தம் கொடுக்காத...''
""மீறி குடுத்தா?''
""வாய்ல சூடு போடுவேன்!''
""உன் மச்சினி பாவம்பா!''
""குட்டு வெளிப்பட்டதும், உன் அக்காவுக்கு என்னை விட்டு குடுத்திட்டியா?''
""குழந்தை இடது இடுப்புல இருந்தா என்ன... வலது இடுப்புல இருந்தா என்ன? குழந்தை நம்ம கன்ட்ரோல்ல தானே!''
""பக்கத்ல வா!'' வந்தாள்.
""இன்னும் பக்கத்துல வா!''
""பதினஞ்சு வயசு வரைக்கும் பேசாம இருக்கீங்க... ஆண் வாசனை பட்டதும், "லொட லொட'ன்னு பேசுறீங்க... ஆயிரம் கிருத்துவம் பண்றீங்க... எந்த ஹார்மோன்டி உங்களுக்கு இந்த வேலையெல்லாம் பண்ணுது?''
""மத்தவங்களுக்கு எப்படீன்னு தெரியல... இங்க, யாத்ரா ஹார்மோன்!''
""சரி கழுதை, போய் படு!''
""எங்க?''
""வேஷத்தை அவிழ்த்து போட்டுட்டு, லேடீசோட படு.''
""உன்னை பாராட்டணும் போல இருக்கு... கையை குடு!''
""இந்த ஜாலக்கு வேலையெல்லாம் இனி நடக்காது... போ!''
மொழி போனாள்; அவள் போனதும், இதுவரை நடந்ததை அசை போட்டான்.
ஒவ்வொரு பிரேமிலும், நேசிகாவின் காதல்தான் வழிந்தது.
அவள் இடத்தில் நாமிருந்தால் என்ன செய்திருப்போம்! இதே தான். இந்த விஷயம், வீட்டில் பூகம்பம் கிளப்புமே... அப்பா, ருத்ர தாண்டவம் ஆடுவாரே... என்ன செய்வது? குழப்பத்தில் யோசிக்காதே... விஷயத்தை பெண்டிங்கில் வை. ஊர் திரும்பியதும் தீர்வை யோசிப்போம்.
எனக்கு தெரிந்து விட்டதை, நேசி எப்படி எடுத்துக் கொள்வாள்? நாளை பேசி பார்ப்போம்.
படுக்கப் போனான் யாத்ரா. தன்னருகில் வந்து படுக்கும் மொழியை, நீலக்கடல் பார்த்து விட்டாள்.
""என்ன ஆச்சு?''
""கண்டுபிடிச்சிட்டான்!''
""என்ன செஞ்சான்?''
""இம்... முத்தம் கொஞ்சினான்!''
""என்னையும் காட்டிக்குடுத்திட்டியா?''
""இல்லை!''
""ஏன்?''
""ஒரு வியாபாரிக்கு, ஒரே நேரத்தில் இரு நஷ்டங்களை ஏற்படுத்தக்கூடாது என்பதற் காகத்தான். என் குட்டு வெளிப்பட்டதனால, யாத்ரா, நேசி மேல கூடுதலா காதலா யிட்டான்!''
""அப்படிச் சொல்ல முடியாது; நிலைமை எனக்கு சாதகம்!''
""எப்படி?''
""போர் யுக்திகளை, எதிராளிடம் விவாதிப்பதில்லை நான். போர்த்திக்கிட்டு படு!''
படுத்தாள் மொழி.
காட்டுக்குள் தன் கிரணக் கைகளை பாய்ச்சினான் பகலவன். காரட் விடியல். செண்பக குழல்வாய்மொழியின் வேஷமறிந்து, எல்லாரும் அவளை கிண்டலும், கேலியும் செய்தனர்.
""பேபே... செம்பா பேபே...''
""ஆசைத்தம்பியை, உன் ஊமை பாஷைல எப்படி கூப்பிடுவ?''
""ஆய்ஆய் தம்பீய்!''
""இது யாரு தைச்ச சட்டை... எங்க தாத்தா தச்ச சட்டை... இத எப்படி உன் பாஷைல சொல்லுவ மொழி?''
""இய்யா தை சை... தா தை சை...''
""வாழைப்பழம் வழுக்கி, வாய்க்குள் விழுந்தது?''
""வய்யா வாவா விய்!''
அனைவரையும் அடக்கினான் யாத்ரா.
""போதும்பா... ஒருத்திய இவ்வளவா கேலி பண்றது?''
காலை உணவுக்குப்பின், யாத்ராவும், அகராதியும் படமெடுக்க கிளம்பினர்.
ஓட்டுக்குள் தலையை இழுத்துக் கொள்ளும் ஆமைகள், புதர்களிலிருந்து வெளிப்பட்டு ஓடும் கீரிப்பிள்ளைகள், கூட்டமாய் காட்டெருமை கள், இரை பொறுக்கும் காட்டுக் கோழிகள், மரப்பட்டை நிறத்தில் இருந்து, பச்சை நிறத்துக்கு சடுதியில் மாறும் பச்சோந்திகள், குறிப்பிட்ட எல்லை வகுத்து, அதற்குள் பறக்கும் பட்டாம்பூச்சிகள்... என்று, காட்டின் எந்த ஜீவராசியையும் யாத்ரா விடவில்லை. அகராதியும் சிறப்பாக செயல்பட்டாள். எடுக்க, எடுக்க, மானிட்டரில் காட்டினாள்.
இருவரும் காட்டில் வெகுதூரம் வந்து விட்டனர். இருவருக்கும் துணையாக வந்த இருளாண்டியைக் காணவில்லை. குரல் கொடுத்து பார்த்தனர்; பதில் இல்லை.
""புறப்பட்ட இடத்துக்கு திரும்பி போக நம்மிடம் ஜி.பி.ஆர்.எஸ்., கருவி இருக்கு... பயப்படாதே அகராதி!''
""நீ இருக்க எனக்கென்ன பயம்?''
ஒரு மரத்தடியில், மானையோ, ஆட்டையோ விழுங்கிவிட்ட மலைபாம்பு, வளைந்து, நெளிந்து கொண்டிருந்தது. அதை படமெடுக்க ஆரம்பித்தனர். நேரம் கரைந்து கொண்டே இருந்தது.
ஒரு உயரமான கிளைகள் விரித்த மரத்தின் மேல், ஒரு உருவம் ஏற ஆரம்பித்தது. கிளைகள் விரியும் இடத்தில், வாகாய் நின்று கொண்டது... முதுகில் கோர்த்திருந்த அம்பறாவில் இருந்து ஒரு அம்பை எடுத்து, அதன் கூர்ப்பை விரலால் சோதித்து பார்த்து... பின் ஒரு குப்பியில் இருந்த விஷத்தை எடுத்து, அம்பு நுனியில் தடவியது; தடவியதும், காலிகுப்பியை விட்டெறிந்தது; அம்பை எடுத்து வில்லில் கோர்த்தது; வில் விடைத்தது; காட்டு கடவுளை வேண்டிக் கொண்டது.
காற்று மண்டலத்தை உய்க்கி, புய்க்கி கீறியபடி, மணிக்கு நூறு கிலோமீட்டர் வேகத்தில் சீறியது விஷ அம்பு.
— தொடர்ந்து பூக்கும்
