தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/துணுக்கு மூட்டை - சினி செய்திகள்

துணுக்கு மூட்டை - சினி செய்திகள்

துணுக்கு மூட்டை - சினி செய்திகள்


PUBLISHED ON : ஜூலை 04, 2010

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 04, 2010


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* கமல் ஜோடியாக த்ரிஷா நடிக்கும், "மன்மதன் அம்பு' படத்தின் ரிகர்சல், கடந்த இரண்டு மாதங்களாக சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள கமலின் அலுவலகத்தில் நடந்தது. அப்போதெல்லாம் மும்பையிலிருந்து மாதவனுடன்தான் விமானத்தில் வந்திறங்கியுள்ளார் த்ரிஷா. இதன்பிறகு, மாதவன் தன் நெருங்கிய நண்பராகி விட்டதாக சொல்லும் த்ரிஷா, "மாதவன், தமிழ் சினிமாவின் சின்ன கமல்...' என்றும், புகழ்ந்து தள்ளுகிறார்.



* தெலுங்கு பேசும் தமிழ் படங்கள்

வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான, "அங்காடித் தெரு' படம், "ரியலிசம்' என்ற பெயரில், தெலுங்கில், "டப்'பாகியுள்ளது. இதேபோல், முதல்வர் கருணாநிதியின் கதை, வசனத்தில் திரைக்கு வந்துள்ள, "பெண்சிங்கம்' படம், "அல்லதிஸ்தா' என்ற பெயரில் தெலுங்குக்கு, "டப்'பாகி உள்ளது. — சினிமா பொன்னையா.



* சிம்ரன் அட்வைஸ்

"உனக்காக என் காதல்' படத்தில் நடித்து வரும் ஷ்ரதாவும், சிம்ரனும் மும்பையில் பேமிலி ப்ரண்ட்ஸ். அதனால், ஷ்ரதா நடிக்க வருவதை சொன்னதும், சினிமா தொழிலின் நெளிவு சுழிவுகளை ஷ்ரதாவுக்கு வாரி வழங்கிய சிம்ரன், "எக்காரணம் கொண்டும் கவர்ச்சியாக நடிக்காதே; அது உன்னை சீக்கிரமே வீட்டுக்கு அனுப்பிவிடும்...' என்று ஆலோசனை சொல்லி, ஷ்ரதாவை கோலிவுட்டில் களம் இறக்கியுள்ளார். சாக்கோ, நாக்கோ, அம்மையார் வாக்கோ!        — எலீசா.



* குத்தாட்ட கோதாவில் நிலா !

சினிமா கைவிரித்து விட்டதால், ஓட்டல் பிசினசை ஆரம்பித்த நிலாவுக்கு அதிலும் நஷ்டம்தான். அதனால், மீண்டும் சினிமாவில் தெறம காட்ட வந்திருக்கும் நிலா, முன்பு வேண்டாமென்று தவிர்த்த குத்தாட்ட வாய்ப்புகளை கைப்பற்ற, சில கமர்ஷியல் படாதிபதிகளை நாடியுள்ளார். அங்கே போனால் அப்படி; இங்கே வந்தால் இப்படி; ஆகிறது எப்படி?   — எலீசா.



* காஜலை ஃபீல் பண்ண  வைத்த விஜய் !

இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக, வேலாயுதம் படத்தில் விஜய்யுடன் நடிக்க காஜல் அகர்வாலை அழைத்தனர். ஆனால், தெலுங்கில் பிசியாக நடித்துவரும் அவரோ, ஹன்சிகா மோத்வானியின் பெயரை சிபாரிசு செய்து, அட்வான்சையும் கைமாற்றி விட்டார். காரணம், இந்த ஹன்சிகா, காஜல் அகர்வாலின் உயிர்த்தோழி. இருப்பினும், தன்னால் விஜய்யுடன் நடிக்க முடியாமல் போனதை எண்ணி, ரொம்பவே பீல் பண்ணுகிறார் காஜல். ஆசைப்பட்ட பண்டம் ஊசிப் போயிற்று!     — எலீசா.



* திருமண வதந்தி

"கற்றது களவு' படத்திற்கு பிறகு, "சுல்தான் தி வாரியர்' படத்தை எதிர்பார்த்திருக்கிறார் விஜயலட்சுமி. இந்த நேரத்தில், அவர் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருப்பதாக யாரோ வதந்தியை பரப்பி விட, அதிர்ச்சியடைந்திருக்கிறார். முன்னதாக, இச்செய்தியை கோடம்பாக்கம் நம்பாமல் இருக்க, தன் அபிமானிகள் அனைவருக்கும் எஸ்.எம்.எஸ்., அனுப்பி, தெளிவுபடுத்தி வருகிறார். ஆடு வைத்தவன் செய் விளையுமா? அங்கலாய்த்தவன் செய் விளையுமா?         — எலீசா.



* தனுஷ் பின்பற்றும்  காமெடி ஃபார்முலா !

யாரடி நீ மோகனி, குட்டி படங்களில் தனுஷின் ஆக்ஷன் மற்றும் காமெடி நடிப்புக்கு அவரது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதனால், அதே பாணியில், "உத்தமபுத்திரன்' படத்திலும் நடித்து வரும் தனுஷ், "இனி, தான் நடிக்கும் படங்கள் ஆக்ஷன், காதல், சென்டிமென்ட் என எந்த வகையில் இருந்தாலும், அதில் சரிக்கு சரி காமெடியும் இடம்பெற வேண்டும்...' என்று, புதிதாக கதை சொல்பவர்களிடம் கூறி வருகிறார்.                                                                                   — சி.பொ.,



* குழப்பத்தில் ஹீரோக்கள்

விஷாலுக்கு, டபுள் ஹீரோ கதைகளில் நடிப்பதில் ஆர்வம் இல்லை என்றபோதும், பாலா படம் என்பதற்காகவே,

"அவன் இவன்' படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார். ஆனால், இந்த நேரத்தில் அப்படத்தில் விஷாலின் வேடம் மட்டுமின்றி, ஆர்யாவின் வேடத்தையும் குறைத்துவிட்ட பாலா, இப்போது பிரகாஷ்ராஜின் கேரக்டருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். இதனால், விஷால், ஆர்யா இருவருமே குழப்ப மடைந்துள்ளனர்.      சினிமா பொன்னையா.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us