PUBLISHED ON : ஆக 19, 2018

அ நிறம் | அளவு
தேசிய அளவிலான பைக் ரேஸிங் ராலியில், அசத்தி வருகிறார், 27 வயது, பசீலா. ஆண்களின் கூடாரமான பைக் ரேஸ்களில், ஒரு பெண்ணை பார்க்கும்போது, வியப்பாக உள்ளது. சாதாரண குடும்பத்தை சேர்ந்த இவர், எப்படி பைக் ரேஸர் ஆனார்.
கேரள மாநிலம், பாலக்காடு, தடுக்கசேரியை சேர்ந்த இவர், ஒருநாள், சாலையில், இரு இளைஞர்கள், பைக்கின் முன் சக்கரத்தை உயர்த்தி, வித்தை காட்டிக் கொண்டிருந்ததை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.
அந்த வாலிபர்கள், 'இதெல்லாம் பெண்களால் செய்ய முடியாது...' என, கேலி செய்யவே, 'என்னாலும் சாதிக்க முடியும்...' என்ற சபதத்துடன் செயல்பட துவங்கி, வெற்றியும் பெற்றார். இவரின் முயற்சிக்கு, பக்கபலமாக இருப்பது, இவரது அம்மா.
— ஜோல்னாபையன்.
