PUBLISHED ON : ஏப் 07, 2013

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
லண்டனைச் சேர்ந்த, பிரபலமான உடை வடிவமைப்பாளர், ஹென்றி ஹோண்ட், உலகிலேயே, மிக நீளமான உடையை தயாரித்து, சாதனை படைத்துள்ளார். பெண்கள் அணியும், கவுன் வடிவிலான இந்த உடை, 1,500 சதுர அடி அகலமும், 150 அடி உயரமும் உடையது. லண்டனில் உள்ள, பிரபலமான ஷாப்பிங் மாலில், இந்த பிரமாண்ட உடையை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. மாடல் அழகி, கோலெட் மார்ரெ, இந்த உடையை அணிந்து வந்தபோது, அங்கு கூடியிருந்தவர்கள், தங்கள் விழிகளை, ஆச்சரியத்தில் விரிய விட்டனர். முழுக்க முழுக்க, பட்டு துணியால் வடிவமைக்கப்பட்ட இந்த உடையை தயாரிப்பதற்கு, ஒரு மாதம் ஆனதாம்.
— ஜோல்னா பையன்.

