PUBLISHED ON : ஜூன் 19, 2016

ஹாலிவுட்டின் பிரமாண்ட இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன், சினிமாத் துறையில் அடி எடுத்து வைத்து, 38 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டாலும். இதுவரை, 11 படங்களை மட்டுமே இயக்கியுள்ளார். 'காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ள வேண்டும்' என்ற எண்ணம் எல்லாம், அவரிடம் இல்லை. 'ஒரு சில படங்களை இயக்கினாலும், நீண்ட காலத்துக்கு ரசிகர்களால் பேசப்படும் படமாக இருக்க வேண்டும்...' என்பதே, அவரது பாலிசி!
கடந்த, 2009ல் வெளியான கேமரூனின் புகழுக்கு மணி மகுடம் சூட்டிய, அவதார் படத்தை யாராலும் மறக்க முடியாது. தற்போது, அவர், அப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். 'இந்த படம், 2018 கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகும்...' என, சமீபத்தில் அறிவித்துள்ளவர், இப்படத்தின் மூன்று, நான்கு, ஐந்தாம் பாகங்களையும், அடுத்தடுத்து தயாரித்து, மிகப் பிரமாண்டமான முறையில் வெளியிடப் போவதாக கூறியுள்ளதுடன், அந்த படங்கள் வெளியாகும் தேதிகளையும் அறிவித்து, தன் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.
— ஜோல்னாபையன்.

