/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
டயர்களுக்கு மூக்கால் காற்றடிக்கும் முதியவர்!
/
டயர்களுக்கு மூக்கால் காற்றடிக்கும் முதியவர்!
PUBLISHED ON : பிப் 23, 2014

இரு சக்கர வாகனங்கள், கார்களின் டயர்களுக்கு, மூக்கால் காற்றடிக்கும் வித்தையை கற்று வைத்துள்ளார், சீனாவைச் சேர்ந்த, பொய்பிங், என்ற, 63 வயது முதியவர். சமீபத்தில், நான்கு டயர்களுக்கு, 21 நிமிடங்களில், தன் மூக்கின் மூலம், காற்றடித்து நிரப்பியுள்ளார். இதற்கான நிகழ்ச்சியின்போது, ரப்பர் குழாயை, தன் மூக்கில் பொருத்தி, நான்கு டயர்களின் மீதும், தலா இரண்டு பேரை நிற்க வைத்து, இந்த சாதனையை நிகழ்த்திக் காட்டியுள்ளார். அவர் கூறுகையில், 'இதுவரை, பலூன்களை மட்டுமே, மூக்கால் காற்றடித்து நிரப்பியுள்ளனர். முதல் முறையாக, நான் தான், கார் டயர்களுக்கு, மூக்கால் காற்றடிக்கிறேன். இதைப் பார்த்து, காருக்கு பஞ்சர் ஒட்டுபவர்கள், என்னை வேலைக்கு கூப்பிடுகின்றனர்...' என, நகைச்சுவையாக கூறுகிறார்.
— ஜோல்னாபையன்.

