/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
புல் சாப்பிட்டால் கடவுள் ஆசிர்வாதம் கிடைக்கும்!
/
புல் சாப்பிட்டால் கடவுள் ஆசிர்வாதம் கிடைக்கும்!
PUBLISHED ON : பிப் 23, 2014

தென் ஆப்பிரிக்காவில், லெசேகொ டேனியல் என்பவர், ஒரு அமைப்பை ஏற்படுத்தி, 'கடவுளின் ஆசிர்வாதம் கிடைக்க வேண்டும் என, ஆசை உள்ளவர்களும், நோய்கள் தீர ஆர்வம் உள்ளவர்களும், இந்த அமைப்பில் சேரலாம்...' என, அறிவித்தார். அவரின் அறிவிப்பை கேட்டு, ஏராளமானோர், அந்த அமைப்பில் சேர்ந்தனர். கடவுளின் ஆசிர்வாதம் கிடைப்பதற்கும், நோய்கள் குணமாவதற்கும், இவரின் சிகிச்சை முறை என்ன தெரியுமா? பச்சை புற்களை, ரசித்து, ருசித்து, சாப்பிடுவது தான். தன் அமைப்பில் உள்ளவர்களை, பரந்த புல் வெளிக்கு அழைத்துச் சென்று, ஆடு, மாடுகளைப் போல், அவற்றை சாப்பிட வைக்கிறார். இந்த புகைப்படங்கள், இணையதளங்களில் வெளியானதை அடுத்து, 'இதுபோன்ற மூட நம்பிக்கைகளை ஊக்குவிப்பவர்களை, சிறையில் அடைக்க வேண்டும்...' என, கடுமையான விமர்சனம் எழுந்துள்ளது. ஆனால், அவரின் ஆதரவாளர் ஒருவர் கூறுகையில்,'எனக்கு, நீண்ட நாட்களாக, தொண்டையில், புண் இருந்தது. புற்களை சாப்பிட்டதும், குணமாகி விட்டது...' என, அவருக்கு சிபாரிசு செய்துள்ளார்.
— ஜோல்னாபையன்.

