sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்துமணி பா.கே.ப.

/

அந்துமணி பா.கே.ப.

அந்துமணி பா.கே.ப.

அந்துமணி பா.கே.ப.


PUBLISHED ON : பிப் 20, 2011

Google News

PUBLISHED ON : பிப் 20, 2011


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிரபல சிரிப்பு நடிகர் ஒருவர் , லென்ஸ் மாமாவின் தோழர். சமீபத்தில் ஒரு நாள், மாமாவுக்கு போன் செய்து, 'லென்ஸ்... வேண்டப்பட்ட குட்டி நடிகை ஒருவரை உம்ம கேமரா உதவியுடன் படம் புடிச்சு, பத்திரிகைகளிலே வெளியிட்டு, விளம்பரம் தேடித் தரணும். பொண்ணு இப்போ சின்ன வேஷத்திலே இரண்டு படத்திலே நடிக்குது... எப்படியாவது ஹெல்ப் பண்ணணுமே...' எனக் கேட்டுக் கொண்டார்.

நடிகைகளை படம் எடுப்பது என்றால், லென்ஸ் மாமாவிற்கு பிறக்கும் உற்சாகத்தை சொல்லவும் வேண்டுமா?

'ஓ... எஸ்... ஐ அம் ரெடி... எப்போ எடுக்கணும் சொல்லுங்க...' எனக் கேட்டு, முகூர்த்த நாள் ஒன்றையும் குறித்து, என்னிடம் வந்தார்.

'அந்து... நீயும் கண்டிப்பா வரணும்... நடிகைகளை நான் போட்டோ பிடிக்கும் கலையையும் நீ தெரிஞ்சுக்க வேணும்...' என்றார்.

'ஏதுடா இது வம்பாப் போச்சே...' என மனதினுள் நினைத்து, மறுதலிக்கவும், விடவில்லை மாமா... படம் பிடிக்கும்

தினத்தில் வம்படியாய் என்னை இழுத்துக் கொண்டே ஸ்டுடியோ சென்று விட்டார்.

குறிப்பிட்ட நேரத்தில் நடிகையும், அவருடன் வேலைக்காரி போன்ற தோற்றத்தில் ஒரு பெண்மணியும் வந்து சேர்ந்தனர். 'வணக்கம் சார்... நான் தான் மம்தா...

(நடிகர் பெயர்) சார் அனுப்பி வச்சார்...' என்றார் நடிகை.

குழைந்தபடி லென்ஸ் மாமாவும் வணக்கம் சொல்லி, 'என்ன குழந்தே(!) மேக்கப்போட வந்துட்டே?' எனச் சலித்துக் கொண்டார்.

'மேக்கப்பை அழித்து விடவா சார்?''

'இப்போ வேண்டாம்... மேக்கப்புடன் இரண்டு, மூன்று டிரஸ்சில் படம் எடுத்து விடுவோம்... அப்புறம் மேக்கப் கலைத்து விட்டு படம் எடுக்கலாம்!' என்றார்.

ராட்சதக் குடைகளின், 'பிளாஷ் லைட்'டுகள் பொருத்தப்பட்டு இருந்தன. தலைக்கு மேலே ஒரு, 'பிளாஷ் லைட்' இருந்தது. அவற்றை, 'லைட் ரீடிங் மீட்டரில்' சோதனை செய்து பார்த்தார் மாமா.

'என்னப்பா... 17 தானே காட்டுது... 18 வேண்டுமே...' என உதவியாளரிடம் கூறியபடி, லைட்டிங் இடங்களை மாற்றி அமைத்தார். பின்னர் சோதனை செய்து, 18 வருகிறது என உறுதி செய்து, கொண்டார். (இந்த 17-18 விவகாரங்கள் உங்களைப் போலவே எனக்கும் என்னவென்று புரியவில்லை!)

நடிகை அணிந்துள்ள ஆடையின் வண்ணத்திற்கு, 'மேட்ச்' ஆகும், 'பேக் டிராப்' திரைச்சீலையை தொங்க விடப் பணித்தார்.

பின்னர், 'போஸ்' கொடுக்க நடிகையை அழைத்தார்.

'இப்படி நில்லும்மா... இப்படித் தலையைத் திருப்பும்மா... லேசா சிரிம்மா...' என உத்தரவுகளைப் பிறப்பித்து, தான் நினைத்த, 'போஸ்' கிடைத்ததும், தட்ஸ் இட்! அப்படித்தான், அப்படித்தான்!' எனக் கூறியபடியே படம் பிடித்துத் தள்ளினார்.

அடுத்த உடை சல்வார் கம்மீஸ்... அதை அணிந்து வந்ததும், 'இடது புற தோள் தெரிவது போல படம் எடுக்க போறேம்மா... அப்படியே மேலாடையை ஒதுக்கிக்கம்மா...' என்றார், நடிகையும் அதே போல செய்தார்.

நான் நைசாக வெளியே வந்தேன்... ஆனால், உள்ளே நடக்கும் பேச்சு காதில் விழும்படி நின்று கொண்டேன்.

'பாப்பா... பிரா நாடா தெரியுது பாரு... வல்கரா இருக்கும் படத்திலே, அதையும் ஒதுக்கி விடும்மா...' என்றார்.

அதையும் நடிகை செய்தார் என்பது, படங்கள், 'பிரின்ட்' போட்டு வந்தபின் பார்த்த போது தெரிந்தது.

அடுத்து, முகத்தில் தண்ணீரை, 'ஸ்ப்ரே' செய்து, முகமெல்லாம் அரும்பாக வியர்த்து இருப்பது போல ஒரு, 'எபக்ட்' கொண்டு வந்தார். பின்னர் நடிகையிடம், 'பாப்பா... இப்போ கொடுக்க வேண்டிய போஸ் என்னான்னா... உன் காதலனை எதிர் நோக்கி தாபமா காத்திருப்பது போல இருக்கணும். கண்கள் செருகியது போல, உதடுகள் இரண்டும் பிரிந்து, லேசாக வாய் திறந்து இருப்பது போல, அத்துடன் இடது கையால் கேசத்தை லேசாக சுருட்டிக் கொண்டிருக்க வேண்டும்...' என்றார்.

'சரி... சரி...' என தலையாட்டிய நடிகைக்கு, மாமா சொன்னது போன்ற, 'எக்ஸ்பிரஷனை' முகத்தில் கொண்டு வர முடியவில்லை. சிரிப்பும், வெட்கமும் தான் வந்தது. காரணம், நடிகையுடன் வந்தவர் வேலைக்காரி இல்லையாம் - தாயாராம். பின்னர் தெரிந்து கொண்டேன்!

அதென்னவோ தெரியவில்லை, சில நடிகைகளின் தாயார் மட்டும் தான் டீசன்டான தோற்றத்தில் உள்ளனர். மற்ற நடிகைகளுடன் வரும் தாய்குலங்கள் அனைவருக்கும், வீடு கூட்டி, பாத்திரம் விளக்கும் பெண்மணிகளின், 'லுக்' தான் அடிக்கிறது. கொஞ்சம் மேக்கப் போட்டு வரக் கூடாதோ?

— தாய்குலங்களை பத்திரிகை புகைப்படங்களில் கண்டு தான் இந்த கமென்ட்!

கம்மிங் பேக் டு த பாயின்ட்... நடிகையுடன் வந்தவர், படம் எடுப்பதைப் பார்த்துக் கொண்டிருந்ததால், நடிகை வெட்கப்படுகிறார் என்பதைப் புரிந்து கொண்ட மாமா, அவரை வெளியேறச் சொன்னார்.

கடுகடுப்புடன் வெளியேறினார் நடிகையின் தாயார்!

அடுத்த படம், ஆண்களின் நீளமான சட்டையை, முட்டி வரை அணிந்து, வேறு ஆடை ஏதும் இல்லாமல் இருப்பது போல எடுக்க வேண்டும். நடிகை அதே போன்ற சட்டை எடுத்து வந்திருந்தார்.

ஆனால், கோபத்தில் இருந்த தாயார், 'கிளாமர் போஸ் எல்லாம் வேண்டாம் சார்!' என லென்ஸ் மாமாவிடம் கூற, ஷூட்-அப் ஆன லென்ஸ் மாமா, 'என்னாங்க... இன்னிக்கு டாப் ரேஞ்சுல இருக்கிற நடிகைகள் எல்லாம், 'கிளாமர் போஸ்' குடுக்குறாங்க...' எனவும், தாயார், 'பாபுலரான பிறகு அதுபோல போஸ் கொடுக்கலாம்!' என, தன் தத்துவத்தை உதிர்க்கவும், 'பேக்-அப்' சொல்லி திரும்பிப் பார்க்காமல் வெளியேறினார் லென்ஸ் மாமா!

— வித்தியாசமான அனுபவம் தான்! ***






      Dinamalar
      Follow us