/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
ஏஞ்சலினா புகைப்படம் 20 லட்சம் ரூபாய்க்கு ஏலம்?
/
ஏஞ்சலினா புகைப்படம் 20 லட்சம் ரூபாய்க்கு ஏலம்?
PUBLISHED ON : மே 05, 2013

ஹாலிவுட் வட்டாரத்தில், ஏஞ்சலினா ஜோலிக்கென, தனி மரியாதை உள்ளது. தான், சம்பாதிக்கும் பணத்தின் கணிசமான பகுதியை, உலகின் பல பகுதிகளிலும் உள்ள, அகதிகளின் மறு வாழ்வுக்காக, தானமாக அளித்து விடுவார். மனிதாபிமான செயல்களுக்கு, முதலில் உதவிக் கரம் நீட்டுவது, ஏஞ்சலினாவாகத் தான் இருக்கும்.
இவருக்கு, தற்போது, 37 வயதாகிறது. ஆனாலும், ஹாலிவுட்டில், இன்னும் பிசியான நடிகையாகவே, வலம் வருகிறார். இந்நிலையில், 12 ஆண்டுகளுக்கு முன், மேலாடை அணியாமல், ஏஞ்சலினா குதிரையுடன் கொஞ்சி விளையாடுவது போல் எடுக்கப்பட்ட புகைப்படம், தற்போது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த படம், ஏஞ்சலினாவுக்கு 25 வயதாக இருக்கும்போது. எடுக்கப்பட்டது. இதனால், அந்த படத்தில், தற்போது உள்ளதை விட, அழகாகவும், இளமையாகவும் காணப்படுகிறார். டேவிட் லாச்செப்பல் என்ற புகைப்படக்காரர் எடுத்த, இந்த புகைப்படத்தை, விரைவில் ஏலம் விட திட்டமிட்டுள்ளனர். இந்த அரிய (?) புகைப்படம், 20 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
— ஜோல்னா பையன்.