தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்

அந்துமணி பதில்கள்

அந்துமணி பதில்கள்


PUBLISHED ON : செப் 02, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 02, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* வி.ரத்தின சபாபதி, சிவகாசி: எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், லஞ்சம், ஊழல் நடக்கிறது... அதனால், எந்த கட்சிக்கு ஓட்டுப் போடுவது? ஓட்டே போடாமல் விட்டு விடலாமா?

அந்தத் தவறை செய்யவே கூடாது; ஓட்டுப் போட்டே ஆக வேண்டும். ஊரில் தீவட்டி கொள்ளையன், கன்னம் வைத்து திருடுபவன், 'பிக்-பாக்கெட்' ஆகியோர் இருக்கின்றனர்... இவர்களில் யாரால் பாதிப்பு அதிகம் இருக்கிறது என எண்ணிப் பாருங்கள்... அதன்படி செயல்படுங்கள்!

***

* கே.ஏகாம்பரம், திருப்பூர்: குறைகளை சுட்டி காட்டுவதால், நட்பை இழக்க நேரிடும் நிலை வந்தால், என்ன செய்வது?

இழப்பு நல்லதற்கு தான்! புகழ் பாட மட்டுமல்லவே நட்பு; குறை இருப்பின், அதையும் எடுத்துச் சொல்லி, நல்வழிப்படுத்தத்தான் நட்பு. இதை விரும்பாதவர் சினேகம் வேண்டவே வேண்டாம்!

***

* ஆர்.புருஷோத்தம்மன், புதுச்சேரி: தற்போது, கோவில்களில் கூட்டம் அலை மோதுகிறதே... காரணம் என்ன?

தப்பு செய்பவர்கள் பெருகி விட்டனரோ என்னவோ! செய்யும் தப்புக்கு பரிகாரம் தேட, நியாயம் கற்பித்துக் கொள்ள கோவிலை நாடுகின்றனர் போலும்!

***

** பி.யோகலெட்சுமி, வில்லிவாக்கம்: நட்புடன், சகோதர பாசத்துடன் ஒரு ஆணிடம் பேசும், பழகும் பெண்களை, அந்த நபரோடு முடிச்சுப் போட்டு, அவலம் பேசுவது, நம் நாட்டில் மட்டும் தானா? மேலை நாடுகளிலும் உண்டா?

முன்னேறாத, சமூகப் பார்வை விரியாத, சில ஆசிய நாடுகளில் தொடர்கிறது; மேற்கத்திய நாடுகளில், இது ஒரு விஷயமே அல்ல!

***

*ஆ.ராமசாமி, குலமங்கலம்: பணக்காரனாக விரும்புகிறேன்... கஷ்டமா?

முதல் லட்சம் சம்பாதிப்பதுதான் கஷ்டம். அப்புறம், கோடிகள் சம்பாதிப்பது கஷ்டமே இல்லாமல் கொட்ட ஆரம்பித்து விடும்!

***

*ஆர்.அஞ்சுகம், அவனியாபுரம்: யார் பொய் பேசக் கூடாது?

சாமர்த்தியம் இல்லாதவர்கள்! இவர்கள் பொய் பேசினால், மானம் போய் விடும். சாமர்த்தியம் இல்லாதவர்கள், எப்போதும் உண்மையே பேசி விடுவது நல்லது!

***

*கி.மணியரசு, ஆலங்குளம்: எதையும் சாதிக்க தேவை பணமா, மனமா?

மனம்! மனமிருந்தால் மார்க்கம் உண்டு. சாதனை செய்ய திடமாக தீர்மானம் செய்து கொண்டபின், பணத்தைத் திரட்டுவது மிக எளிது. சாதனை படைத்த பலரது வாழ்க்கை சரித்திரம் உணர்த்தும் உண்மை இது!

***

** எஸ்.பாபுகுமார், பரமக்குடி: குடும்பம் நடத்த, இக்காலத்தில் எவ்வளவு சம்பாதிக்க வேண்டும்?

எவ்வளவு சம்பாதித்தாலும், செலவு செய்து விடும் பழக்கம் இல்லாமல் இருந்தாலே, அவரவர் இப்போது சம்பாதிக்கும் பணமே போதுமானதாக இருக்கும். சம்பாதிக்கும் பணத்திற்குள், வாழ்க்கையை செம்மையாக அமைத்துக் கொள்பவனே அறிவாளி!

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us