தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்.... (18)

என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்.... (18)

என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்.... (18)


PUBLISHED ON : செப் 02, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 02, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கல்வி, விண்வெளி ஆராய்ச்சி, பொழுதுபோக்கு என, எல்லாவற்றிலும் ப்ளோரிடா மாகாணம் முன்னணியில் உள்ளது.

பசங்களுக்கு மட்டுமில்லை, குடும்பத்துடன் குதூகலிக்க, ப்­ளோரிடா மாகாணத்தில் உள்ள ஆர்லேன்டோ அன்புடன் அழைக்கிறது! உல்லாச நகரம். டூரிஸ்ட்களுக்காகவே உருவாக்கப்பட்டது போல, எங்கும் கோலாகலம்.

ஒண்ணேகால் டாலர் பஸ்களில் ஏறினால், டிஸ்னிலேண்ட், யுனிவர்சல் ஸ்டுடியோஸ், சீ வேர்ல்ட் என ஆரம்பித்து, கென்னடி ஸ்பேஸ் சென்டர், வென்ட் வைல்டு, ரெடிபைன் பேமிலி நைட், ப்ளூ மூன் கிராப், டைனோசர் வேர்ல்டு, டிஸ்கவரி கோன், வொன்டர் ஒர்க்ஸ், பாகி கிரீக் ஏர்போட் ரைடர் இப்படி நூற்றுக்கணக்கில்...

எல்லாவற்றின் வாசலிலேயே, மொத்தமாய் நம்மிடம் பிடுங்கிக் கொள்கின்றனர். நெட்டில் - 'இந்த ஆபர், அந்த ஆபர்' எனச் சொல்லி, எல்லா இடங்களுக்கும், நம்மை இழுத்துப் போட்டுவிடும் தந்திரம் தெரிகிறது.

வாசல் வசூலுக்கப்புறம் உள்ளே, அனைத்துக் காட்சிகளும், விளையாட்டுகளும் ப்ரீ!

டிஸ்னிலேண்ட்டை சுற்றி அனுபவிக்க, குறைந்தது ஒரு வாரமாவது வேண்டும். நாங்களெல்லாம் தெனாலிராமன், குதிரைக்குப் புல்லும், தண்ணீரும் காட்டின மாதிரி, பார்த்து வந்துவிட, நண்பர் லக்கி ”லைமானின் குடும்பம், பத்து நாட்கள் அங்கேயே தங்கிப் பரவசப்பட்டனர்.

உள்ளே உற்சவங்களுக்குப் பஞ்சமில்லை.

நாம் திரையில் பார்த்து மிரளும், அற்புதப்படும் சினிமா தயாராகும் கப்சாக்கள், ஹாலிவுட் ஸ்டுடியோவில் அம்பலப்படுத்தப்படுகிறது. ஆஹா, அற்புதமான கேமிரா, பயங்கர சேசிங் என, சீட் நுனியில் அமர்ந்து, பார்த்து த்ரில் பெற்றோம். எத்தனை நேர்த்தியாய் நம்மை ஏமாற்றுகின்றனர் என்பது, அங்கு பார்த்தால் புரிகிறது.

கட்டடங்கள், மலை, அருவி, ஆகாயம், கடல் எல்லாம் கட்-அவுட்களில்! இரவு முழுக்க, ஜகஜகவென அலங்கார அணிவகுப்புகள்.

யுனிவர்சல் ஸ்டுடியோ, சீ வேர்ல்டிலும் கூட அப்படித்தான்.

பறப்பது, பல்டி அடிப்பது, தாவுவது, மிதப்பது, மேலே சடாரென்று போய், தலைகீழாய் உருண்டு, புரண்டு, கோவென அலறிக்கொண்டு கீழே சரிவது, திரும்பப் பாய்வது, எகிறுவது, உருளுவது எல்லாம் நமக்கு ஆகறதில்லை.

இந்த உற்சாகத்தை, த்ரில்லை அனுபவிப்பவர் களை, 'அப்சர்வ்' செய்வதோடு சரி. அதற்கே, கட்டணமாக கொடுத்த காசு சரியாய் போன மாதிரி சந்தோஷம். ஐயோ... அத்தனை அழகு!

எந்தப் பக்கம் நுழைந்தோம், எங்கே போகிறோம், எப்படி திரும்பப் போகிறோம் என்று, இயல்பாகவே குழப்பம். என்னென்ன கேளிக்கைகள், எங்கெங்கு உள்ளன என, நோட்டீசில் படம் வரைந்து, பாகங்களைக் குறித்திருக்கின்றனர்.

நுழைவு வாயிலி­லே­யே நிறைய பறித்து விட்டார்களே... இலவசக் காட்சிகள் எதையும் மிஸ் செய்துவிடக் கூடாது... வாஸ்தவத்தில் சொல்வதானால், உள்ளே உள்ள அற்புதங்களை, பிரமாண்டங்களை ரசிப்பதற்கிடையில், 'இத்தனை டாலர் வாங்கிப்புட்டானே...' என்ற முணுமுணுப்பைத் தவிர்க்க முடியவில்லை.

மக்கள் எங்கும் நிறைந்திருக்கின்றனர். பொழுது இன்பமாய் செலவழிய, வேறு என்ன வேண்டும்?

உள்ளே நம்மூர் திருவிழா பலூன், பீப்பி, கண்ணாடி, பஞ்சு மிட்டாய், நொறுக்கு மற்றும் நொறுங்காத தீனி ஸ்டால்கள்... தள்ளுவண்டி களுக்கிடையே, விசேஷமாய் ஒன்றைப் பார்க்க முடிந்தது. அது, மொபைல் வேனில், பீர் கடை!

பாவம் - 25 டிகிரி செல்சியஸ், 30 டிகிரி செல்சியஸ், வெயிலைத் தாங்க முடியாமல் பெண்கள் அங்கே க்யூவில்!

அங்கேயும் நம்மூர் தெருக்கூத்து, கம்பிமேல் நடப்பது, போன்ற வித்தைகள் உண்டு. அதற்கும் கும்பல் சேர்கிறது. தெருக்கூத்தை அவர்கள் ரசிக்க, அவர்களை நாம் ரசிக்க என, அந்தக் கூத்தை ஏன் கேட்கிறீர்கள் போங்க!

சாலை ஓரத்தில் கிதார், வாத்தியக் கருவிகளை வைத்து இசைக்கின்றனர்; அதற்கு டாலர்கள். நம்மூரில் ரூபாய்; இங்கு டாலர். அவ்ளோதான் வித்தியாசம்.

விதம் விதமாய் டால்பின் ­­­­ஷோக்கள். திமிங்கிலம் திமிங்கிலமாய், அவை செய்யும் சேஷ்டைகள் அட்டகாசம். அவை ஒரு ரவுண்ட் போய் வந்தால், உடன் கவளம் கவளமாய் உணவைத் தூக்கிப் போடுகின்றனர். அவற்றைக் கவ்விக்கொண்டு, அவை அமைதியாகி விடுகின்றன.

உள்ளே அங்கங்கே அரங்குகள் அமைத்து, பிரமாண்டமாய் ­­­­ஷோக்கள். நாய், பூனை எலியில் ஆரம்பித்து, முயல், மான், சிங்கம், கரடி, புலி எனப் பயிற்சி கொடுத்து, நாடகம் போட்டு அசத்துகின்றனர்.

இன்னும் சில இடங்களில் நாட்டிய நாடகம். ஆர்.எஸ்.மனோகரை ஞாபகப்படுத்தும் விதமாய், பிரமாண்ட அரங்கங்கள், நடனங்கள். இது மாதிரி ­­­­ஷோ ஒன்றைப் பார்க்கப் போன போது, கைக்குக் கிடைத்து, வாய்க்குக் கிடைக்காத அனுபவம் ஒன்று ஏற்பட்டது.

மதியம் ஒரு மணிக்கு, ஒரு காட்சி.

அந்தக் காட்சிக்குக் காத்திருந்து உள்ளே போய் அமர்ந்து விட்டோம். அப்போது பார்த்து செல் அலறியது. உள்ளே சரியாய், 'சிக்னல்' எடுக்காத தால், மனைவியை அங்கு அமர வைத்து வெளியே வந்து, 'ஹலோ... ஹலோ...'

அப்படியும் எடுக்காததால், கீழே சாலையில் இறங்கி, குவைத்திலிருந்து அழைத்த நண்பருடன் பேசிவிட்டு, திரும்பிப் பார்க்கிறேன்... கதவை மூடி விட்டனர்.

­­­­ஷோ ஆரம்பித்தபின் திறக்க மாட்டார்களாம்; உள்ளே இருப்பவர்களுக்கு அது உபாதை தருமாம்; ­­­­ஷோவை ரசிக்க முடியாதாம்.

'அடப்பாவிகளா... உள்ளே மனைவி தனியாய்... நாம் வெளியில்... என்ன கொடுமை சரவணா?' என, ­­­­ஷோ முடியும் வரை, இரண்டு மணிநேரம் வெளியே காவல்காரனாய் அமர்ந்திருக்க நேர்ந்தது.

'இப்படி ஒரு பிரமாண்டத்தை என் வாழ்நாளில் பார்த்ததேயில்லை. என்ன ஒரு ஜாலம், நம்மை அப்படியே சொர்க்க லோகத்துக்கும், சந்திர மண்டலத்துக்கும் அழைத்துப் போய் விடுகின்றனர். நாம் வானில் மிதக்கிறோம்; பறக்கிறோம்; மேகத்தில் தவழ்கிறோம், மேடையில் நடப்பதெல்லாம் நமக்கே நடப்பதுபோல, வாழ்நாளில் இது மாதிரி இனி எப்போ பார்க்கப் போறோம்... உங்களை நினைத்தால், எனக்கு பரிதாபமாயிருக்கு!' என்றாள் என் மனைவி.

வெளியே வந்தவர்கள் அத்தனை பேர்களின் முகங்களிலும் ஆனந்தம். அத்தனை பேர்களுமா, தங்கள் கட்டினவர்களை, வெளியே அனுப்பிவிட்டு ­ஷோ பார்த்தனர்?

எனக்குத் தாங்கவில்லை. 'என்னடா இது பாண்டிய மன்னனுக்கு வந்த சோதனை?' என்று, அடுத்த ÷ஷா எப்போது என்று பார்த்தேன்; மாலை ஐந்து மணிக்கு; விடுவதாயில்லை! ஊரில் ரிலீஸ் படங்களுக்கு அடுத்தடுத்து இடித்துப் பிடித்து, வியர்த்து படம் பார்க்கும் பரம்பரையாயிற்றே... விடுவோமா?

அங்கேயே காத்திருந்து, மொபைல் @பானை, 'ஆப்' செய்து விட்டு, ­ஷோ பார்த்த பின்தான், ஜென்ம சாபல்யம் கிடைத்தது; நிஜமாலுமே அத்தனை அற்புதம்.

அப்புறம்... 28 - 30 டிகிரி வெயிலுக்கே, அமெரிக்கர்கள் அலறுகின்றனர். அவிழ்த்துப் போட்டுவிட்டு நடக்கின்றனர். அங்கே போனபின் தான் தெரிகிறது... நமக்குக் கூட அப்படித்தான்!

குவைத்தில், 50 டிகிரி வரை குப்பைக் கொட்டும் நமக்கு, அங்கே முப்பதையே தாங்க முடியவில்லை.

அங்கே, ஒவ்வொன்றாய் சுற்றிப் பார்த்து வரும்போது, ஓரிடத்தில் பெரிய, 'க்யூ!' வெயிலில் வியர்வை கசிந்து, வெளுப்பும், கறுப்புமாய் நிற்கின்றனர். என்ன விசேஷம் என்று கேட்டால், யாருக்கும் தெரியவில்லை. எதுவுமில்லாமலா, எல்லாரும் நிற்கின்றனர்? நாமும் நின்றுதான் பார்ப்போமே!

இரண்டு மணி நேரம் காத்திருந்து, உள்ளே போனால்...

— தொடரும்.

என்.சி. மோகன்தாஸ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us