PUBLISHED ON : செப் 23, 2012

** கே.மீனலோசினி, புதுப்பாளையம்: வரதட்சணையின் கோரப்பிடியில் இருந்து தப்பி, மனதுக்கு பிடித்த மணாளனுடன் வாழ நினைக்கும் ஒரு பெண்ணுக்கு, 'ஓடு காலி' என்ற பட்டத்தை இந்த சமூகம் எளிதாக வழங்கி விடுகிறதே...
மனதைப் புண்படுத்தும் செயல்தான் இது. இனிமேல், இதுபோன்ற வார்த்தையை பயன்படுத்தாமல், 'மனதுக்கு பிடித்தவனுடன் வாழ சென்று விட்டாள்...' என்று இந்த சமூகம் கூறலாமே!
***
*வி.ரமேஷ்குமார் முத்தியால்பேட்டை: அழகான பெண்களைக் கண்டால், உமக்கு என்ன நினைக்கத் தோன்றும்?
ஓரக்கண்ணால் ரசிக்கத் தோன்றும் தான்... ஆனால், சங்கோஜம் தடுத்து விடுகிறதே!
***
** டி.ராமலிங்கம், பம்மல்: சோர்வுறும் போது, என்ன புத்தகங்கள் படிக்கலாம்?
ராமகிருஷ்ண பரமஹம்சர் அருளியது... மூன்று தடி, தடி தொகுப்புகள்... உங்கள் ஊரில் உள்ள புத்தகக் கடையிலே கிடைக்கும்... தினமும் கொஞ்ச நேரமாவது படியுங்கள்... வாழ்க்கை தத்துவம் புரியும்; எப்படி வாழ வேண்டும் என தெரியவரும். மன அமைதி நிச்சயம் கிடைக்கும்.
***
*பா.சுடலையாண்டி, சிட்லபாக்கம்: எதிலும் எனக்கு சந்தேகம் வருகிறதே...
நீங்கள் உருப்பட போவதில்லை என்பதன் முதல் அறிகுறிதான் இது! சந்தேக குணத்தோடு ஒருவன் நீண்ட நாள் வாழ்வானா என்பதும் சந்தேகமே!
***
* எஸ்.சங்கீதா, பாப்பநாயக்கன் பாளையம்: கொஞ்சங்ககூட மனசாட்சியே இல்லாமல், இளசுகளை இரண்டாம் கல்யாணம் செய்யும், 'பெரிசு'கள் பற்றி...
இன்னொரு கோணத் தில் பாருங்களேன்... இளசுகளை, இளசுகளுக்கு கல்யாணம் செ#து வைக்க முடியாமல் இருக்கிறது... அதற்காக காலம் முழுவதும் கன்னியாக, வயதான பின் ஆதரவில்லாமல், ஏக்கம் மேலிட வாழ்வதை விட, 'பெரிசு' ஆதரவு கொடுக்கிறது என எண்ணுங்களேன்; உடல் தேவை மட்டுமே இளசு களுக்கு பிரதானம் அல்ல!
***
** சே.முருகேசன், கோவை: தற்போதைய சூழ்நிலையில் ரசிகர்கள், சிறப்பான கதையோட்டமுள்ள படங்களை விரும்புகின்றனரா, கவர்ச்சி ஆட்டத்தை விரும்புகின்றனரா?
இடை, தொடையை கவர்ச்சி ஆட்டங்களில் பார்த்து, அவற்றை ரசிக்க பழகிக் கொண்ட ரசிகர்களுக்கு, அவற்றை முற்றிலும் துறக்க விருப்பமில்லை; அதே நேரம், நல்ல கதையம்சத்தையும் எதிர்பார்ப்பவர்களும் இருக்கின்றனர்.
***
* க.அழகிரிசாமி, தேனி: மனிதர்கள் எதை விரும்புவதில்லை?
வாங்கிய கடனை திரும்பக் கேட்பதை சுத்தமாக விரும்புவதில்லை!
***
* ஆர்.வெற்றிவேல் குமரன், குன்னூர்: உலகிலேயே மிகவும் எளிதானது எது?
மிக, மிக எளிதானது, அடுத்தவருக்கு, 'அட்வைஸ்' கொடுப்பது!
***
