தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : அக் 07, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 07, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

*க.வசந்தி, பண்ருட்டி: மனைவியை அடிமையாக நினைக்கும் கணவனை திருத்துவது எப்படி?

கணவன் கையை எதிர்பார்க்காத, பொருளாதர சுதந்திரம் அடையும் பெண், துணிச்சல் பெறுகிறாள். அவளை அடிமையாக நடத்த கணவன் துணிவதில்லை. அப்படியே நடத்த முயன்றாலும், 'பினான்ஷியல் இண்டிபெண்டன்ட்'டாக இருக்கும் பெண்கள், சுயபச்சாதாபம் கொள்வதில்லை.

***

** ஞா.அர்ஜுனன், பீளமேடு : சில இளம் பெண்களும், மாணவியரும், சினிமாக்காரங்களைத் தேடி, ஊரை விட்டு ஓடுவது, பெற்றோரின் கவனமின்மையாலா? சமுதாய சீர்கேட்டாலா?

சந்தேகம் இல்லாமல் பெற்றோரின் கவனக் குறைவுதான் காரணம். 'பெத்துப் போட்டாச்சு... இனி, அதுவே வளரும்!' என்ற போக்கில், பெற்றோர் இருந்து விடுகின்றனர். குழந்தைகளை அவர்களின் ஒவ்வொரு பருவத்திலும் கூர்ந்து கவனித்து, நல்வழிப்படுத்துவது பெற்றோர் கடமை!

***

*வே.தமிழரசு, பாண்டிச்சேரி: வி.ஆர். எஸ்., திட்டத்தால் வெளியேறியவர்கள் வாழ்வு வளமாக உள்ளதா? அதை, இனிவரும் காலங்களில் பெற்றுக் கொள்வது உசிதமா?

வளத்தில் குறைச்சல் இல்லை. ஆனால், தமக்கென ஒரு பொழுது போக்கு இல்லாதவர்கள், அதை வளர்த்துக் கொள்ள தெரியாதவர்கள் - பரபரப்பு உலகில் இருந்து விட்டு, இப்போது நேரத்தைப் போக்க தெரியாமல் அவதிப்படுகின்றனர்.

***

** வி.எடிசன், சூலூர்: இந்தியாவில் எப்படிப்பட்ட புரட்சி வர வேண்டும் என நினைக்கிறீர்கள்?

கியூபாவில், பிரான்சில் ஏற்பட்டது போன்ற மக்கள் புரட்சி வெடித்து, ஊழல் அரசியல் அதிகாரிகள், ஊரை விட்டு, நாட்டை விட்டே ஓடிப்போகும் விதத்தில் அமைய வேண்டும். இவ்வளவு புரட்சியில் ரத்தக்களறி ஏற்பட்டு, பல அப்பாவிகளும் உயிர் இழக்க வேண்டியது இருக்கும். ஆனாலும், ஒரு நாடே உருப்பட போவதால், இந்த இழப்புகளைத் தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும்.

***

*கே.ராமதாஸ், கொளத்தூர்: தன் தகுதிக்கு மீறிய ஒரு பெண்ணை காதலிக்கலாமா?

வலியச் சென்று, தகுதிக்கு மீறிய பெண்ணை காதலித்தால், 'டேஞ்சர்!' பின்னி எடுத்து விடுவர். அவர்களாகவே முன் வந்தால், 'கன்சிடர்' செய்யலாம்.

***

** டி.திருவேங்கடம், கூடல்நகர்: ஆண்களை விட , பெண்கள் படிப்பில் சிறந்து விளங்குவது ஏன்?

'சைட்'- 'தம்' கிடையாது; 'பீர்' கிடையாது; அதிகமாக, 'கட்' அடிக்க தியேட்டர் கிடையாது பெண்களுக்கு... ஏன் நல்லா படிக்க மாட்டாங்க! இதோ இன்னொரு தகவல்; கேரள பாலிடெக்னிக்கு களில் படிப்போரில், 60 சதவீதம் பேர் பெண்கள்.

***

*எஸ்.திருஞானம், கீழ்க்கட்டளை: வறுமையை விட கொடியது ஏதாவது இருக்கிறதா இப்பூவுலகில்?

இருக்கிறதே... வறுமையைக் கூட சமாளித்து விடலாம்; ஆனால், கடன் இருக்கிறதே... இது வறுமையை விட கொடிய துன்பத்தை தரும்.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us