தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்

அந்துமணி பதில்கள்

அந்துமணி பதில்கள்


PUBLISHED ON : நவ 11, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 11, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

*எம்.சங்கரபாண்டியன், காரைக்குடி: அழகான இளம் பெண்களிடம் சந்தர்ப்பம் கிடைக்கும் போது, அனேக ஆண்கள், தகுந்த வார்த்தைகள் கிடைக்காமல் தடுமாறுவது ஏன்?

இதே, 'பிராப்ளம்' தான் எனக்கும்; பலரிடம் கேட்டுப் பார்த்து, இந்த சிக்கலில் இருந்து விடுபட முயல்கிறேன்; இன்று வரை முடியவில்லை.

***

* என்.சரவணன், திருமங்கலம்: திட்டம் போடுவதில் இருக்கும் தீவிரம், அதை செயல்படுத்தும் போது இல்லையே... ஏன்?

திட்டம் தீட்டுவது கற்பனையில் - பேப்பர் ஒர்க்... செயல்படுத்தும் போது, 'தோற்று விடுவோமோ' என்ற பயம் கவ்வி, தீவிரத்தை தடுத்து விடுகிறது... தன்னம்பிக்கைஇன்மையே இதன் அடிப்படைக் காரணம்.

***

*ஆர்.கணேஷ், அழகரடி: தந்தையின் கோபத்தைக் கண்டு, மகன் அஞ்சுவதில்லை; மவுனத்தைக் கண்டு அஞ்சுகிறான்... எதனால்?

வார்த்தைகளைக் கொட்டி தீர்த்து விட்டால், விஷயம் புரிந்து போகும். 'ப்பூ... இவ்வளவுதான்' என்றாகி விடும். மவுனமோ... எதெதெல்லாம் தெரியுமோ? எப்போது, எந்நேரம் இதற்கு, 'ரீ - ஆக்ஷன்' இருக்குமோ என்ற டென்ஷனை தரும் - பயத்தைக் கொடுக்கும்!

***

** என்.முருகப்பன், திருவள்ளூர்: 'கைத்தூக்கி விட ஆளில்லையே...' என புலம்புகின்றனரே சிலர்...

இவர்கள் சுய முயற்சி இல்லாதவர்கள், சோம்பேறிகள். துணிச்சல், தன்னம்பிக்கை அற்றவர்கள்; கடைசி வரை, புலம்பிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.

***

*பி.சண்முகப் பிரபாகர், தேவக்கோட்டை: ஆண் - பெண் இருவரும் வேலை பார்த்து, இருவரும் டென்ஷன் ஆகும் சந்தர்ப்பங்கள் நிறைய இருக்கும் இக்காலத்தில், ஆணை விட பெண்ணுக்குத்தான் அதிகம் பொறுமை இருக்கும் என்று, இன்னமும் உறுதியாக கூற இயலுமா?

பெண்களுடைய மரபணுவில் கலந்துள்ளது பொறுமை எனும் அம்சம். அவர்களால், எந்த சந்தர்ப்பத்திலும், நிதானமாக செயல்பட முடியும். வேலையிடங்களில் டென்ஷன் இருந்தாலும், எதனால் டென்ஷன் என்பதை ஆராய்ந்து, அதை நிவர்த்தி செய்யும் பொறுமை, அவர்களிடம் இன்னும் இருக்கத்தான் செய்கிறது.

***

*எல்.சின்னதுரை, விருதுநகர் : ஒரு மாதத்தில், நீங்கள் படிக்கும் கேள்விகளின் எண்ணிக்கை எவ்வளவு? பதில் எழுத வேண்டியது எவ்வளவு?

மாதத்துக்கு ஐந்து வாரமானால், ஐம்பது பதிலும், நான்கு வாரமென்றால், நாற்பது பதிலும் எழுத வேண்டியிருக்கும். அவற்றிலும் சில வெளியாகாமல், இடப் பற்றாக்குறையில் தேங்கி விடும். படிக்க வேண்டிய கேள்விகள் என எடுத்துக் கொண்டால், சராசரியாக, நூறு அஞ்சல் அட்டைகளும், 30 - 40 அஞ்சல் உறைகளும், தினசரி வாசகர்களிடமிருந்து வந்து விடுகின்றன. ஒவ்வொன்றிலும் குறைந்தது, ஐந்து கேள்விகள் இருக்கும். மாதம், 26 நாள்... கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள்.

***

** என்.ராமானுஜம், பண்ருட்டி: பொதுத்துறை நிறுவனங்கள் லாப நோக்குடன் செயல்பட வேண்டியது அவசியமா?

சில பொதுத்துறை நிறுவனங்கள், லாப நோக்குடன் செயல்பட வேண்டாம் தான்... ஆனால், தனக்குத் தானே தீனி போட்டுக் கொள்ளும் அளவிலாவது செயல்பட வேண்டுமல்லவா? எவ்வளவு ஆண்டுகளுக்குத்தான் பொது மக்களின் வரிப்பணத்தை, புளி ஏப்பங்களாக விட்டுக் கொண்டிருக்க அனுமதிக்க முடியும்?

***

*இ.ஜெயக்குமார், கோவை: 'ஆண்கள் தினம்' ஏன் கொண்டாடப்படுவதில்லை?

வருடத்தில், மற்ற, 364 நாட்களும் ஆண்களுடையது தான் என்பதால், அவர்கள் தினம் இல்லை போலும்.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us