sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : ஜன 20, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 20, 2013


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* கி.வேல்முருகன், வாலிபாளையம்: 'பயிர்களுக்கு பூச்சி மருந்து அடித்தாலும், இப்போது பலன் இருப்பதில்லையே...' என, என் தந்தை புலம்புகிறார்... வீரியம் குறைந்த மருந்துகளை சந்தையில் விடுகின்ற னவா பூச்சி மருந்து நிறுவனங்கள்!

அப்படியில்லை சமாச்சாரம்... பூச்சிகள் இப்போது விஷத்தை தாங்கி, உயிர் வாழும் சக்தியைப் பெற்று விட்டன என்பதே உண்மை. 1950களில், மருந்துக்கு கட்டுப்படாத பூச்சி இனம், ஏழே ஏழு தான் இருந்தன. இன்றோ, இதன் எண்ணிக்கை பல மடங்கு பெருகி விட்டன. இந்த அழகில், உலகின் பல நாடுகளிலும் தடை செய்யப்பட்ட பூச்சி மருந்துகளை நாம் உபயோகிக்கிறோம். பூச்சி மருந்து விஷத்தால் வருடத்துக்கு, 15 லட்சம் பேர் பாதிக்கப்படுகின் றனர்... 35 ஆயிரம் பேர் டிக்கெட் வாங்கி விடுகின்றனர்!

***

** எஸ்.ரேவதி, பாளை: ஹை கிளாஸ், மிடில் கிளாஸ், லோ கிளாஸ் - இவர்களில் யாருக்கு கனவுகள் அதிகம்?

எப்பவுமே நடுவில் சிக்கித் தவிப்பது மிடில் கிளாஸ் வர்க்கத்தினர் தான்... 'ஆசை இருக்கு தாசில் பண்ண... அதிர்ஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க...' - எந்த பாட்டியோ சொன்ன பழமொழி இது!

***

*எல்.கனகவேல், கோட்டூர்: நான் விரைவில் ஓய்வு பெற இருக்கிறேன். கிடைக்கப் போகும் பணத்தை வைத்து என்ன செய்யலாம்?

இவ்வளவு காலம் உழைத்தாகி விட்டதே... இனி ஓய்வு எடுங்கள்! அதற்காக மொத்தமாக முடங்கி விட சொல்லவில்லை... உங்கள் இல்லத்தைச் சுற்றி எழுதப் படிக்கத் தெரியாத சிறுவர் - சிறுமியருக்கு அறிவு கண்ணை திறந்து வைக்கும் புனிதப் பணியில் ஈடுபடலாம். கிடைக்கும் பணத்தை பிரித்து, நாலு வங்கிகளில், 'டிபாசிட்' பண்ணி நிம்மதியாக இருங்கள்!

***

** டி.வி.ஜெயராமன், மதுரை : ஒயிட் காலர் ஜாப் தேடுவது நம் நாட்டு இளைஞர்கள் மத்தியில் மட்டும் தான் உள்ளதா? அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளிலும் இதே நிலை தானா?

அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில், சாதாரண வேலைக்கும், பெரிய பதவிகளுக்கும் சம்பள வித்தியாசம் பெரிய அளவில் கிடையாது... அங்குள்ளவர்கள் பெரும்பாலும் பள்ளி இறுதிக்கு மேல் படிப்பது கிடையாது... இதனால், டிகிரி படித்திருக்கிறேனே, எனக்கு கலெக்டர் வேலை கிடைக்கலியே என்ற ஏக்கம் கிடையாது... வாழ்வின் அடிப்படை வசதி அனைவருக்கும் கிடைத்து விடுவதால், 'ஒயிட் காலர் ஜாப்' மோகம் அதிகம் கிடையாது!

***

*ஆர்.சந்திரசேகரன், செய்யாறு: 'நான் பணக்காரன், என்னால் எதையும் சாதிக்க முடியும்... முடியாதது என்பது என் அகராதியில் கிடையாது!' என்கிறானே என் நண்பன்...

பணம் தரும் போதையால், மமதையால் வெளியான, 'ஸ்டேட்மென்ட்' இது! ஓடும் நாட்களையோ, உதிக்கும் சூரியனையோ பணத்தைக் கொண்டு உங்கள் நண்பரால் நிறுத்தச் சொல்லிப் பாருங்களேன்... பல நூறு கோடிகளின் அதிபதிகளான அம்பானிகளாலும், பிர்லாக் களினாலும் கூட முடியாது!

***

*எஸ்.வெங்கடரமணன், வந்தவாசி: படித்து, பட்டம் பெற்றவர்கள் கையில் ஆட்சி இருந்தால், நாடு எப்படி இருக்கும்?

இதோ, இன்று, இப்போது எப்படி இருக்கிறதோ அதே லட்சணத்தில் தான் இருக்கும்! இப்போது ஆட்சி பொறுப்பில் இருக்கும் அமைச்சர்களில், 90 சதவீதம் டபுள் டிகிரியும், அதற்கு மேல் சட்டமும் பயின்றவர்கள் தானே! படிக்காத ஒருவர், 50 வருடங்களுக்கு முன், ஆட்சியின் தலைமைப் பொறுப்பில் இங்கு இருந்த போது, லஞ்ச லாவண்யம் தலைவிரித்து ஆடாமல் மக்களுக்காக ஆட்சி செய்ததாக பெரியவர்கள் கூற கேட்டுள்ளேன்!

***

*டி.முத்துராஜ், ராமநாதபுரம்: காதலிப்பது... காதலிக்கப்படு வது... இரண்டில் எது அதிக சுவை?

முதலாவதே சுவை என்கிறார் ஆண் உதவி ஆசிரியர் ஒருவர்; இரண்டாவதே இனிமை என்கிறார் பெண் உதவி ஆசிரியர் ஒருவர்! (இந்த விஷயத்தில் அனுபவப் படாமல் நான் பதில் சொன்னால் யதார்த்தம் இருக்காதல்லவா? அதனால்தான் உதவியை உ.ஆ.,களிடம் பெற்றேன்.)

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us