sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 06, 2025 ,கார்த்திகை 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்துமணி பதில்கள்

/

அந்துமணி பதில்கள்

அந்துமணி பதில்கள்

அந்துமணி பதில்கள்


PUBLISHED ON : மார் 24, 2013

Google News

PUBLISHED ON : மார் 24, 2013


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* சி.திருப்பாற்கடல், முறையூர்: இரவு 10:00 மணியுடன், தொலைக் காட்சிகளின் ஒளிபரப்பை நிறுத்திக் கொண்டால் என்ன அந்துமணி?

நல்ல யோசனை தான்! காலை நான்கு மணி நேரமும், மாலை நான்கு மணி நேரமும் மட்டுமே ஒளிபரப்பு இருக்க வேண்டும் என சட்டம் இயற்றினால், விலை மதிப்பில்லாத மனித ஆற்றல், ஆக்கப்பூர்வமாக செலவு செய்யப்படும்! மாணவச் செல்வங்களின் கவனம், திசை திரும்பாமல், படித்து முன்னேறவும் முடியும்!

***

** வே.ஜோதிமணி, சிதம்பரம்: யாரை நம்புவது என்றே தெரியவில்லையே எனக்கு?

அனைவரையும் இகழ்ந்து பேசுகிறவன் - உங்களைப் புகழ்ந்து பேசுகிறவனையும் நம்பக் கூடாது! இந்த இரு வகையினரிடமும் பழகினால், அறிவு கெடுவதுடன், நாமும் கெட்டுப் போவோம்!

***

* ஏ.முருகன், தாம்பரம்: சீக்கிரம் பணக்காரனாக ஆசைப்படுகிறேன்... என்ன தொழில் செய்யலாம்?

வழுக்கைத் தலையில் முடி வளர தைலம் கண்டுபிடியுங்கள் அல்லது உள்ள முடியை கருப்பாக்கும், 'டை' தயாரித்து விற்பனை செய்யுங்கள்! நரைத்த முடியை கருப்பாக்கும், 'டை' ஆண்டுக்கு, 7,000 கோடி ரூபாய்க்கு விற்பனையாகிறது இந்தியாவில்!

***

*பே.லட்சுமி கண்ணன், கோவை: என் பர்சையே குறி வைத்து என்னுடன் பழகும் நண்பர்களை எப்படி கழற்றி விடலாம்?

அவர்களிடம் கடன் கேட்க ஆரம்பியுங்கள்... காக்காய் கூட்டம் காணாமல் போகும்!

***

** என்.பாரதி, மதுரை: பருவமழை பொய்த்து விட்டது; காவிரியும் ஏமாற்றி விட்டாள்... தஞ்சை டெல்டா விவசாயக் கூலிகள் என்ன செய்கின்றனர்?

மிகவும் கஷ்டம் தான் படுகின்றனர்; சிலர், பிற கூலி வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்; மற்றவர் பஞ்சம் பிழைக்க மற்ற மாவட்டங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். இந்தியாவில் உள்ள, 39 கோடியே, 70 லட்சம் விவசாய கூலிகளில், 31 கோடி பேருக்கு, வருடத்தில், 183 நாட்கள் தான் வேலை கிடைக்கிறது என, 'நேஷனல் சாம்பிள் சர்வே' கூறுகிறது!

***

** சா.கார்த்திகேயன், விருதுநகர்: கலப்பு திருமணத்தில் ஒப்புதல் உண்டா உமக்கு?

கலப்பு மணத்தில் பிறக்கும் குழந்தைகள், ரொம்ப புத்திசாலிகளாக இருக்கின்றனர் என ஆராய்ச்சிகள் கூறுகின்றன... ஆரோக்கியமான, புத்திசாலி சமுதாயம் உருவாவதில் ஆட்சேபனை ஏதும் உண்டா?

***

*இ.ரஞ்சனி, கும்பகோணம்: சாமுத்திரிகா லட்சணப்படி, மீசையுடன் தாடியும் வளர்ப்பவர்கள், அர்த்தப்பூர்வமான வாழ்க்கையை விரும்புகிறவர்களாகவும், சாதனை விரும்பிகளாகவும் இருப்பராம்! இதன்படி, நீங்கள் நடத்தும், அர்த்த பூர்வமான வாழ்க்கையில் எதை சாதிக்க விரும்புகிறீர்கள்?

நம்ம தாடி - மீசை விஷயம், உங்களுக்கு எப்படி தெரியும், மேடம்?

***






      Dinamalar
      Follow us