PUBLISHED ON : ஜூன் 09, 2013

* த.நல்லதம்பி: உத்தமபாளையம்:கன்னித்தன்மை யோடு உள்ள பெண்ணை, ஆங்கிலத்தில், 'வெர்ஜின்' என்று சொல்கிறோம். அதே போலுள்ள ஆணை, எவ்விதம் அழைப்பது? கல்யாணமாகாத, ஆனால், கன்னித்தன்மை இழந்த ஆணை அழைப்பது எப்படி? (உமக்குத் தெரியவில்லை என்றால், லென்ஸ் மாமாவிடம் கேட்டுச் சொல்லும்!)
கன்னித்தன்மை உள்ள ஆளை, 'பிரம்மச்சாரி' என அழைக் கலாமாம்; (ஆனால், இது வட மொழி; தமிழில் என்னவோ?) இரண்டாவது வகை ஆண்களை, 'அன்மேரீட்' - கல்யாணமா காதவர் என்றும் அழைக்க வேண்டுமென்கிறார் லென்ஸ் மாமா!
***
*டி.இளமாறன், கோவை: உம்மைப் பார்த்து ஒரு பெண், அழகாக உதடுகளைக் குவித்து, 'ஐ லவ் யூ' என்று கூறியபடியே, கண்ணடித்தால் என்ன செய்வீர்?
'நடைபெறாது' எனத் தீர்மானித்த விஷயங்கள் பற்றி, அதிகம் சிந்திப்பது கிடையாது!
***
**யூ.மீராஜாஸ்மின், மதுரை: மின்சாரக் கட்டணங்கள் உயர்ந்து கொண்டே போகிறதே...
இலவசங்களை, அரசு அள்ளி வீச, வீச எல்லாமே விலை உயர்ந்துதான் போகும்!
ஓட்டுகளுக்காக வழங் கப்படும் இலவசங்கள் தொடரும் வரை, விலை உயர்ந்து கொண்டேதான் இருக்கும்!
***
*எம்.சத்தியசீலன், விருதுநகர்: கணவனைப் பிரிந்து வாழும் பெண், கணவனோடு வாழும் பெண்.... என, இரு பெண்கள் என்னை விரும்பு கின்றனர். திருமணமான நான், என்ன செய்வது?
சம்சாரம் வூட்ல தானே இருக்காங்க.. அவங்க கிட்டக் கேளுங்க இந்தக் கேள்விய!
***
*எஸ்.கோப்பெருந்தேவி, திருநகர்:அங்கங்களை அம்பலப்படுத்தி நடிக்கும் சினிமா நடிகைகளால், பெண் களான எங்களுக்கு கேவலம் ஏற்படுகிறதே...
சென்னையைப் பாருங்கள்... நடிகைகளின் உடைகளைத் தூக்கிச் சாப்பிடும் வகையில் உடை அணிகின்றனர் சென்னைப் பெண்கள்! இதெல்லாம், 'பார்ட் அண்ட் பார்சல் ஆப் லைப்' ஆகிக் கொண்டு வருகிறது... தடித்த தோலுடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டியதுதான்!
***
**ஆர்.காளைராஜன், கொரட்டூர் : உண்மையே பேசி கஷ்டப்படுவதை விட, சமயத் திற்கு தகுந்தாற் போல பொய் பேசி, மிக வசதியாக வாழலாமே!
வசதியாக வேண்டுமானால் வாழலாம்; ஆனால், மன நிம்மதியோடு வாழவே முடியாதே! மன நிம்மதி இல்லாமல், பொருள் இருந்து என்ன பயன்? இரவில் உறக்கம் கூட வராதே... நிம்மதியான தூக்கம் இல்லாத வாழ்வு ஒருவனுக்கு தேவையா?
***
* ஏ.ஜார்ஜ், தேனி: 'பேச்சுலர் லைப்' எனக்கு பிடித்திருக்கிறது... 'பட்' திருமணம் செய்தே ஆக வேண்டுமென, வீட்டில் கூறுகின்றனர். என்ன செய்வது?
பிடித்ததை, கட்டாயக் காரணமாக விட்டுக் கொடுத்து விட்டால், வருந்த வேண்டியது வரும் தானே!
***
** ம.குணசெல்வி, வீரபாண்டி: இன்று மக்களிடையே சேமிப்பு பழக்கம் வளர்ந்துள்ளதா?
வளர்ந்திருக்கிறது. கஷ்டப்பட்டு சம்பாதித்து மிச்சம் பிடித்த பணத்தை முதலீடு செய்வது எப்படி என்ற கலைதான் வளரவில்லை. அதிக வட்டி தருகிறோம் என, விளம்பரம் செய்யும் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து, ஏமாந்து போகின்றனர்; படித்தவர்கள் கூட!
***
