தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்

அந்துமணி பதில்கள்

அந்துமணி பதில்கள்


PUBLISHED ON : ஆக 18, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 18, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

** எ.தர்ஷினி, காளையார்கோவில்: மதுபானங்கள் அருந்தினால், கவலை ஒழியும் என்கின்றனரே... நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களா?

ஒப்புக் கொள்ளவே முடியாத, 'ஸ்டேட்மென்ட்!' கொழுப்பெடுத்தவர்கள் அடிக்கும் கூத்து இது! உடம்புக்கும், காசுக்கும் பிடித்த கேடு மதுபானம்!

***

*எஸ்.நடராஜன், மதுரை: பட்டப்படிப்பு இறுதியாண்டு படிக்கிறேன். வளமான வாழ்விற்கு எந்த மேற்படிப்பை அடுத்து படிக்கலாம்?

மேற்படிப்பு ஆசையை மூட்டை கட்டுங்கள்... மூட்டை கட்டும் இடங்களுக்கெல்லாம், 'விசிட்' அடிக்க ஆரம்பியுங்கள்... தொழில் கற்றுக் கொள்ள முடியும்... வளமான வாழ்வு அமையும்!

***

*ஆர்.அங்குலட்சுமி, அம்பத்தூர்: வயதில் மூத்த பெண்ணை திருமணம் செய்து கொள்வது தவறா? திருமணம் செய்து கொண்டால், வாழ்க்கையில் பிரச்னைகள் உண்டாகுமா?

காந்திஜி கூட தம்மை விட வயதில் மூத்த பெண்ணைத் தான் திருமணம் செய்தாராம்!

***

** ஆ.எஸ்.ஜெகநாதன், கோயம்புத்தூர்: இந்துக்களும், முஸ்லிம்களும் தங்களை பரம்பரை விரோதியாகக் கருதி சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றனரே... இவர்கள் சண்டையிடுவதை நிறுத்தி, எப்பொழுது தேச ஒற்றுமைக்கு பாடுபடுவார்கள்...

சாதாரண ஜனங்களிடம் இந்த விரோத மனப்பான்மை இல்லவே இல்லை; இரு மதத்தவரும் ஒற்றுமையுடனேயே பல பகுதிகளிலும் பழகி வருகின்றனர். மதத்தின் பெயரால் வயிறு வளர்க்கும் கும்பல்கள், வேற்றுமைத் தீயை சில நேரங்களில் மூட்டி விட்டு விடுகின்றனர். இந்த சமூக விரோதிகளின் தீய எண்ணத்தை நாம் புரிந்து கொண்டால், என்றுமே இணக்கமாக வாழ லாம்!

***

*ஆர்.லாசர், பசுமலை: அண்ணன், தம்பி பாசம் உறவு எது வரை?

'டப்பு' துட்டு, பணம் - 'இன்வால்வ்' ஆகாமல் இருக்கும் வரை; காலம் அப்படியாகி விட்டது!

***

*கே.ரகுநந்தன், பாபநாசம்: ஒரு குடும்பத்தில் எட்டு, பத்து குழந்தைகள் இருந்தால் தான், அன்பு, ரத்த பாசம், விட்டுக் கொடுத்தல் போன்ற குணங்கள் இருப்பதாகக் கூறுகின்றனரே...

அடிதடியும், பகையும் தான் மிஞ்சும்; அத்தோடு பூமித் தாய்க்கு பாரமும் ஏறும்!

***

*சி.கண்மணி, மயிலாப்பூர்: சிற்றிதழ்களில் வரும் படைப்புகள் ஒன்றுமே புரியாமல், இரண்டுங்கெட்டான்களாக இருக்கின்றனவே...

அதுதாங்க உண்மையான, 'இலக்கிய'மாம்!

***

*ஆர்.சுந்தரி, காமயன்கவுண்டன்பட்டி: அடைக்கு சரியான ஜோடி அவியலா... வெண்ணையும், வெல்லமுமா?

இரண்டு, 'காம்பினேஷன்'களுமே சூப்பர் தான். ஆனால், ஓட்டல்களில் பால் எடுத்த தேங்காயை அல்லவா அவியலில் போட்டுக் கொடுக்கின்றனர்... (அடையுடன் கத்திரிக்காய் கொத்சு சேர்த்து சாப்பிட்டதில்லையா?)

***

** டி.ஆரோக்கியமேரி, தேவனாம்பாளையம்: காதலித்து விட்டு மறந்து விடுவதற்கு ஒரு காதல் தேவை தானா? மறந்து விடுவோம் என்று தெரிந்தால் ஏன் காதலிக்க வேண் டும்?

'காதலுக்கு கண் இல்லை!' என்பது இது தானோ?

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us