தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்

அந்துமணி பதில்கள்

அந்துமணி பதில்கள்


PUBLISHED ON : செப் 08, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 08, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

** எ.ரவிச்சந்திரன், திருக்கோயிலூர்: என்னதான் கடுமையாக உழைத்தாலும், பற்றாக்குறை தொடர்கிறதே...

தேவைகளைக் குறைத்துக் கொண்டால் போதுமே... அடுத்தவர் மதிக்க வேண்டும் என்பதற்காக செய்யும் செலவுகளை நிறுத்தினால் போதுமே... பர்சை திறக்கு முன், 'இது தேவையா...' என எண்ணினால் போதுமே... பற்றாக்குறை மறந்து, சேமிப்பு வந்து சேருமே!

***

*என்.சிவப்பிரகாசம், தெ.புதுப்பாளையம்: தன்னை விட படித்த மனைவியுடன் வாழ்க்கை நடத்துவது, முள் மீது நடப்பது போலுள்ளதே... ஏன்?

'இன்பீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ்' என்னும் தாழ்வு மனப்பான்மையில் சிக்கி விடுவதால்தான், இந்த உணர்வு வந்து விடுகிறது. தம்மைவிட, எல்லாவற்றிலும், மனைவி ஒரு படி தாழ்ந்தே இருக்க வேண்டும் என்ற குணம் கொண்டவன் ஆண்... பெண்டாட்டி அதிகம் படித்துள்ளதை எப்படி தாங்கிக் கொள்வான்!

***

** எ.முருகேசன், திண்டிவனம்: பள்ளி இறுதிவரை படித்தவரின் கீழ் வேலை செய்ய பிடிக்கவில்லை, எம்.ஏ., வரை படித்த என் நண்பருக்கு. அவரைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

எம்.ஏ.,க்கு வேலை கொடுக்கும் அளவுக்கு பள்ளி இறுதிவரை படித்தவரின் நிலை இருக்கிறதென்றால், அதன் பின், எவ்வளவு உழைப்பும், அனுபவமும் இருக்கிறது என கொஞ்சமேனும் யோசிக்க வேண்டாமா? உங்கள் நண்பர் கவுரவம் பார்த்தே அழிந்து போகப் போகிறார்!

***

*ஜெ.ஜெயக்குமார், கோயம்புத்தூர்: துன்பம் வந்தால் ஆறுதல் தேடுவது எப்படி?

ஏதோ... இதோடு போயிற்றே என்று எண்ணி ஆறுதல் அடைந்து கொள்ள வேண்டியதுதான்!

***

*ம.சுப்ரமணியன், திருப்பூர்: 'அட்வைஸ்' என்ற பெயரில் என் போன்ற இளைஞர்களுக்கு, 'பெரிசு'கள் ரம்பம் போடுகின்றனரே...

அது, 'ரம்பம்' இல்லீங்க... தங்கம்! காசு செலவே இல்லாமல் கிடைக்கும் பாடம். 'தம்பி... அந்தப் பக்கம் போகாதே கண்ணுக்குத் தெரியாத படுபாதாளம் இருக்குது...' என விபரம் அறிந்த ஒரு பெரியவர் சொல்கிறார். 'இல்லே... நான் பாதாளத்தில் விழுந்து தான் தெரிந்து கொள்வேன்...' என்பது எவ்வளவு ஆபத்தானது... பெரியவங்க, அனுபவப்பட்டவங்களின் ஆலோசனையை, 'ரம்பம்' என இனி சொல்லாதீங்க!

***

*எம்.ஆனந்தகுமார், ஆரப்பாளையம்: வயதான பெற்றோர், தம் பிள்ளைகளிடம் செலவுக்கு பணம் எதிர்பார்ப்பது சரியா, தவறா?

யோவ் அல்பம்... இப்படி அல்பமா கேள்வி கேட்பதே தப்பப்பா... ரத்தத்தைச் சிந்தி, உம்மை ஆளாக்கியதற்கு கணக்கே பார்க்காமல் கொடுக்க வேண்டுமப்பா!

***



*க.ஆறுமுகம், வீராணம்: காதலிக்கும் பெண்கள், தன் காதலன் செய்யும் தவறுகளைக் கூட, பெருமையாக நினைக்கின்றனரே...


எல்லாம் கல்யாணம் வரை இழுத்துச் செல்லத்தான். அப்புறம், கரண்டியைக் கையில் தூக்கிவிட மாட்டார்களா... என்ன?

***

** டி.சீதாராமன், செஞ்சி: ஒரு மனிதன், தன், வாழ்க்கையில் எவ்வளவு காலம் வரை, குடும்பக் கவலைகளை, பொறுப்புகளை தன் தோளில் சுமக்கலாம்?

அதிகபட்சம் 60 வயது வரை... 30 களிலேயே இதற்கு அவர் திட்டமிட ஆரம்பிக்க வேண்டும். இப்படி திட்டமிடாத பலர், 70களிலும், 80களிலும் கூட அவதியுற்று நிம்மதி இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us