தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்

அந்துமணி பதில்கள்

அந்துமணி பதில்கள்


PUBLISHED ON : செப் 15, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 15, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

** எஸ்.மனோகரன், பரமக்குடி: சேமிக்கும் பழக்கம், ஆண்களை விட பெண்களிடம் அதிகம் உள்ளதே... என்ன காரணம்?

பெண்களுக்கு பொறுப்புணர்ச்சி அதிகம்; எதிர்காலத்தை நினைத்து பயமும் அதிகம்... அதனால் தான், சேமிப்பில் கெட்டியாக உள்ளனர்!

***

*எம்.சண்முகம், சென்னை: பாடங்களை மனப்பாடம் செய்யும் போது, கவனம் சிதறாமல் இருக்க வழி சொல்லுங்களேன்?

அடிப்படையே தவறு. பாடங்களைப் புரிந்து கொள்ள பழக வேண்டும்! மனப்பாடம் செய்தால், பரீட்சையுடன் மறந்து விடும்; வாழ்க்கைக்கு பயன்படாது!

***

*பி.வேளாங்கன்னி, திருவாரூர்: இந்தக் காலத்தில், நல்ல குணங்களுக்காக மட்டும் ஒரு ஏழைப் பையனைத் திருமணம் செய்து கொள்ள முடியுமா?

முடியாதுங்க... வாழ்க்கை நடத்த, 'டப்பு' ரொம்ப அவசியம் தேவை. பையன் ஏழையாக இருக்கலாம்; ஆனா, சம்பாத்தியம் கண்டிப்பா இருக்கணும்!

***

** கே.ஸ்ரீனிவாசன், ஆலங்குளம்: ஒருவன் முட்டாள் என்பதை எப்படி அறிவது?

சுற்றி இருப்பவர் பேசுவதற்கு முன்பே எல்லாம் தெரிந்தது போல முணுக்கென்று முந்தி முந்தி பேசுவான். இப்படி பேசுபவன் யாராக இருந்தாலும் அவன் முட்டாள் என, கண்டு கொள்ளலாம்!

***

*கே.சிந்தாமணி, சிவகங்கை: தமிழனிடமுள்ள மன்னிக்க முடியாத கெட்ட குணம் எதுவென்று கணிக்கிறீர்கள்?

கொடுக்க வேண்டிய கடனை தானே ஈட்டிக் கொடுக்காமல், இன்னொருவரிடம் வாங்கி அடைத்து, அவர் நெருக்கும் போது, மூன்றாம் நபரை நாடி... இப்படியே ஆளை மாற்றி மாற்றி கடன் வாங்குகிறானே, இது தான் மன்னிக்க முடியாத குணம்!

***

* சி.முத்துராஜ், எட்டையாபுரம்: நம் நாடு முன்னேறாததற்குக் காரணம் என்ன?

மக்களைப் புரிந்து கொண்டு விட்டனர் அரசியல்வாதிகள். இன்னும் அரசியல், 'வியாதிகளை' புரிந்து கொள்ளவில்லை மக்கள்; இதுவே நாடு பின் தங்கி இருப்பதற்குக் காரணம்!

***

*பெ.வத்சலா, சுருளிப்பட்டி: நான் கறுப்பாக இருப்பதால், என்னை ஒருவருக்கும் பிடிக்கவில்லையோ என்ற நினைப்பு அடிக்கடி எனக்கு ஏற்படுகிறது. இதைத் தவிர்ப்பதற்கு ஒரு சூப்பர் கருத்தை வெளியிடுங்களேன்...

'கறுப்பே அழகு... காந்தலே ருசி...' என்ற பழமொழியைக் கேட்டதில்லையா? கறுப்பு எனக்கு விருப்பு... கறுப்பு நிறம் பிடிச்சவங்களும் இருக்கத்தான் செய்கின்றனர் மேடம்!

***

*ஆர்.பரமசிவம், அனுப்பானடி: ஒரு குறிப்பிட்ட வகை மோதிரத்தை அணிந்து கொள்வதன் மூலம் நினைத்த காரியத்தை முடிக்கலாம் என்று டி.விகளில் விளம்பரம் வருகிறதே... நம்பலாமா?

காசுக்கு வந்த கேடு; ஏமாளிகள் நிறைந்த நம் நாட்டில் எப்படி எல்லாம் பிழைக்க வழி வைத்திருக்கிறார்கள் பாருங்கள்!

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us