தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்

அந்துமணி பதில்கள்

அந்துமணி பதில்கள்


PUBLISHED ON : அக் 27, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 27, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

*ம.ராஜாமணி, கோவை: வாழ்வில் வெற்றி பெற தேவை, பட்டறிவா, படிப்பறிவா?

இரண்டாவது ஓரளவக்கு உதவும்; முதலாவது ரொம்ப முக்கியம். ஏற்கனவே, பட்டறிவு பெற்றவர்களிடம், அதைப் பெற்றுக் கொள்வது லாபகரமானது!

***

*டி.சுகுமாறன், பசுமலை: ஆண்களை விட, படிப்பில் வேகமாக, பெண்கள் முன்னேறி வருவதன் பின் விளைவு, எப்படி இருக்கும்?

வாங்கிக் கொண்டு இருக்கும் ஆண்கள், கொடுக்க வேண்டி இருக்கும் வரதட்சணை!

***

** கே.மகுடபதி, காஞ்சிபுரம்: காவிரி நீர் பிரச்னை தீர்வது யார் கையில் இருக்கிறது?

மத்தியில் ஆளும் கட்சியின் தலைமையிடம்! ஒரே ஒரு சட்டம் போட்டு, காவிரி மட்டுமல்ல, எல்லா நதிப் பிரச்னைகளையும் தீர்த்து விடலாம்! ஆற்றை வைத்து, அரசியல் செய்கின்றனர்; பிழைப்பு அவர்களுக்கு!

***

*ச.ஜெகநாதன், காரைக்குடி: ஒரு பெண்ணின் கண்ணை நேருக்கு நேர் பார்த்துப் பேசும் போது, உங்களால் பொய் சொல்ல முடியுமா?

பெண்களுடன் சாதாரணமாக பேசுவதென்றாலே, வெட வெட நடுக்கம்... இதில், கண்ணை நேருக்கு நேர் நோக்குவதா? அதிலும் பொய்யா? விட்ருங்கய்யா...

***

*கே.கனகவேல், நரசீபுரம்: என்னிடமே மற்ற பெண்களைப் பற்றி வர்ணிக்கிறார் என் கணவர், என்ன செய்யலாம்?

மனைவியரை சீண்டி, வேடிக்கை பார்க்க நினைக்கும் சில கணவர்களின் குணம் இது; கண்டு கொள்ளாதீர். மீண்டும் மீண்டும் வர்ணித்தால், 'ஆமாம்' போட்டு ஆமோதியுங்கள். கணவர், 'ஸ்போர்டிவ் டைப்' என்றால், நீங்களும் நாலு ஆண்களை வர்ணியுங்கள்.

***

** மு.சுல்தானா பேகம், தண்டையார்பேட்டை: சுதந்திரம் முழுமையாக கிட்டியுள்ளதா?

ஆளும் கட்சியை விமர்சித்து, தாக்கி, நடுத்தெருவில் பேச முடிகிறது; மக்கள் மன்றத்தில், நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர முடிகிறது. சாலை மறியல், பந்த், உண்ணாவிரதம் நடத்த முடிகிறது... இவ்வளவு ஏன்... சாலை ஓரத்தில், இயற்கை உந்துதலை தணித்துக் கொள்ளக் கூட முடிகிறது. இன்னுமா, சுதந்திரத்தின் மீது சந்தேகம்?

***

*எஸ்.பாலசுப்ரமணியன், விழுப்புரம்: 'டைரி' எழுதும் பழக்கம் நல்லதா?

அன்று நடந்த உண்மைகளை, உள்ள உணர்வுகளை, உள்ளது உள்ளபடியே, எந்தவித முலாம் பூச்சும் இன்றி எழுதுவதுதான், 'டைரி!' இது, வேண்டாதவர்கள் கையில் சிக்கும்போது, பலருக்கு பல சந்தர்ப்பங்களில் இடையூறாகவும் அமைந்து விடுகிறது!

***

** ஆர்.சுகுணா, புளியம்பட்டி: பிறருக்கு,'ஜால்ரா' போடுவதையே, முக்கிய குறிக்கோளாகக் கொண்டவர்கள் எளிதில், முன்னேறி விடுகின்றனரே...

ஒவ்வொரு தனி மனிதருக்கும், வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற, குறிக்கோள் இருக்கும் தானே... வாழ்வின் முன்னேற்றத்திற்கு பல பாதைகள் இருக்கின்றன. அதில், 'ஜால்ரா' பாதையை, சிலர் தேர்ந்தெடுக்கின்றனர்! பிறருக்கு கேடு நினைக்காத வரையில், 'ஜால்ரா' பாதையில் தவறு இருப்பதாக தெரியவில்லை!

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us