தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்

அந்துமணி பதில்கள்

அந்துமணி பதில்கள்


PUBLISHED ON : மே 11, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 11, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வி.ராஜமாணிக்கம், கன்னணேந்தல்: யாராவது ஒரு பெண்ணை காதலிக்கலாமென்று இருக்கிறேன்; தங்களது அறிவுரை என்ன?

நான் கூட அறிவுரை கேட்க ஆள் தேடிகிட்டு இருக்கிறேன்... 'பார்ட்டி' சிக்கட்டும்; தபால் போடுகிறேன்!

கோ.முத்துச்செல்வம், தல்லாகுளம்: சிறுகதை எழுத, 'டிப்ஸ்' தாருங்களேன்...

கதையின் கரு மனதில் உதித்த உடனேயே, அதற்கான முடிவை, பெரும்பாலான வாசகர்கள் மற்றும் பத்திரிகை ஆசிரியர்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக யோசித்துக் கொள்ளுங்கள். நாலு பாத்திரத்திற்கு மேல் அறிமுகப்படுத்தாதீர்கள். சிறுகதையின் ஆரம்ப பாராவையும், அதன்பின் வரும் சம்பவங்களையும் மனதில் சில நாட்கள் அசை போடுங்கள். காகிதத்தில் எழுதிப் பாருங்கள். திருப்தி வரும் வரை, திரும்ப திரும்ப எழுதிப் பாருங்கள். சிறுகதை எழுதுவது வசப்படும்!

பி.ஜார்ஜ், மன்னார்குடி: நம் மக்களுக்கு, 'செக்ஸ் கல்வி' அவசியமா?

''அவசியம்தான்' என, அடித்துச் சொல்கிறார் அந்துமணி வாசகியாக உள்ள பெண் டாக்டர் ஒருவர். 'திருமணமாகி குழந்தை பெற்ற பெண்களுக்குக் கூட, 'ஆர்கசம்' என்றால் என்ன என்று தெரியவில்லை; முறையான,'செக்ஸ்' பற்றிய அறிவும் இல்லை...' என்று, கூறுகிறார்.

ம.இஸ்மாயில், துலுக்கபட்டி: யாரிடமும் பயிற்சி பெறாமல், புத்தகம் மூலம் நாமே தியானத்தை கற்க முடியுமா?

குருவின் உதவி, ஆலோசனை இல்லாமல் ஆசனம், தியானம், உடற் பயிற்சி போன்றவற்றில் ஈடுபடவே கூடாது. எதிர் விளைவுகள் நிகழ வாய்ப்புகள் அதிகம்!

எஸ்.நாகேந்திரன், தாம்பரம்: மனைவி சொல்லுக்கு கட்டுப்பட்டு நடக்கும் கணவன்மார்கள் புத்திசாலிகள் தானே?

பிழைக்கத் தெரிந்தவன். மீனாட்சி ஆட்சி நடைபெறும் வீடுகளில், மனைவியின் சொல்லை ஆமோதித்து நடக்கும் கணவன், குடும்ப நிம்மதியை எண்ணுபவன். எனவே, அவன் புத்திசாலியும் கூட!

என்.லிங்கேஸ்வரன், சென்னை: ஒன்பதாம் வகுப்பு மாணவி, தன் காதலனுடன் வெளியூர் ஓடி விட்டாள் என்ற செய்தியில் வரும் காதல், உண்மையான காதலா?

அதை விடுங்கள். ஓடிப் போன அந்தச் சிறுமியின் பெற்றோரைத் தான் நொந்து கொள்ளணும். 'டிவி'யிலும் சினிமாவிலும் தேவையில்லாததைப் பார்க்க அனுமதித்து, அச்சிறுமியின் மனதைக் கெட வைத்தவர்கள் அவர்கள் தானே!

ச.சுமதி, சுருளிபட்டி: பெண் தனித்து, சுயமாக வாழ, இந்த சமூகம் அனுமதிப்பதில்லையே... ஏன்?

உங்கள் கூற்று முற்றிலும் உண்மை இல்லை; சந்தர்ப்ப சூழ்நிலைகள் அவளை நெருக்கும் போது, சுயமாகிறாள்; சமூகத்தின் அங்கீகாரத்தையும் பெறுகிறாள்.

எஸ்.டி.ஜெயசீலன், விழுப்புரம்: தங்கத்திற்கு நம் நாட்டுப் பெண்களிடையே உள்ள மோகத்தைப் போல, வெளிநாட்டுப் பெண்களிடம் உண்டா?

கிழக்காசியா, அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில், நான் பார்த்தவரை, மெலிதாக ஒரே ஒரு செயின்... அதுவும், 18 காரட் தங்கத்தில் அணிந்து உள்ளனர். இங்கே அந்த நிலை எப்போது வருமோ! தங்கத்தால், தாலி தடைபட்டுக் கொண்டிருக்கும் தாரகைகளுக்கு எப்போது விமோசனம் கிட்டுமோ?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us