தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்

அந்துமணி பதில்கள்

அந்துமணி பதில்கள்


PUBLISHED ON : ஜூன் 15, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 15, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எம்.கணபதி, காஞ்சிபுரம்: நடைமுறையில் இருக்கும் சீர்திருத்த எழுத்தை பயன்படுத்தாமல், பழைய முறையிலேயே எழுதுவதால், தவறு இல்லையே...

தவறு இல்லைதான்; நீங்கள் எழுதுவது இளைய தலைமுறைக்கு புரியாது போகும் பரவாயில்லையா? இப்போது, ப்ளஸ் 2 படிக்கும் மாணவனுக்கு, பழைய எழுத்தின் பரிச்சயமே இருக்காது; சோதனை செய்து பாருங்களேன்!

வி.மாணிக்கவல்லி, ரெட்டியார்பாளையம்: எங்கள் பக்கத்து வீட்டில் இரவு, பகல் என, நேரம் காலம் இல்லாமல், 'ஓ'வென, 'சிடி'யில் பாடல்களை போட்டு, 'டிஸ்டர்ப்' செய்கின்றனர். கல்லூரி மாணவியான என் படிப்பு, இதனால் கெடுகிறது. இச்சிக்கலில் இருந்து மீள வழி சொல்லுங்களேன்...

பக்கத்து வீட்டுக்காரர்களிடம், 'ரிக்வஸ்ட்' தான், செய்து கொள்ள முடியும். வேண்டுதலுக்கு அவர்கள் செவி மடுக்கவில்லை என்றால், வீட்டை மாற்றிக் கொள்ளவா முடியும்? 'சிடி' பாடுவதை, 'இக்னோர்' செய்யுங்கள்!

எம்.பாலசுப்பிரமணியன், சிவகாசி: எழுத்தாளருக்கு கற்பனை ஊற்று எப்போது அதிகமாகும்...

'பர்ஸ் காலி' என்று தெரிந்த மறுகணமே, நாவலுக்கான கரு உருவாகி விடும்; வெள்ளமென உருவெடுத்து விடும் கற்பனை!

எஸ்.கோபாலன், திருப்பூர்: என் வயது,33; இன்னும் திருமணமாகவில்லை. இது வரையிலும் யாரையும் காதலித்ததும் இல்லை; இப்போது, ஒரு பெண்ணை காதலிக்கிறேன். என் காதலை அந்தப்  பெண்ணிடம் எப்படி தெரிவிப்பது?

இன்னும் திருமணமாகவில்லை என்று கூறுகிறீர்கள்; அதனால், தைரியமாக அப்பெண்ணின் பெற்றோரை அணுகி, பெண் கேட்டு, திருமணம் செய்து, பின் காதலியுங்களேன்!

ஆர்.சோமசுந்தரம், விருகம்பாக்கம்: மனைவிக்கு பயப்படாதவன் வீடு, நிதி நிலைமையில் முன்னேறுமா?

நிதி நிலையைப் பொறுத்தவரை, சந்தேகம்தான்; குடும்பத்தின் நிதி அமைச்சர் பொறுப்பு பெண்கள் கையில் உள்ள இல்லங்கள் அனைத்தும், செழிப்புடன் இருப்பதென்னவோ உண்மைதான்!

டி.விருமாண்டி, ஆலங்குளம்: 'இளைஞர்' என, ஒரு ஆணை எந்த வயது வரை, குறிப்பிடலாம்? அதே போல பெண்ணை, எந்த வயது வரை, 'இளம் பெண்' என, குறிப்பிடலாம்?

16 வயது வரை சிறுவன் - சிறுமி; 17 முதல், 30 வயது வரை, இளம் பெண் - வாலிபன், இளைஞன் என, குறிப்பிடலாம்!

பி.மாரியப்பன், பரமக்குடி: திராவிடம் - ஆரியம் இவற்றில் நம்பிக்கை உண்டா?

மனிதம் - இதில் மட்டுமே நம்பிக்கை உண்டு!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us