தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள் !

அந்துமணி பதில்கள் !

அந்துமணி பதில்கள் !


PUBLISHED ON : அக் 10, 2010

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 10, 2010


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

** ஆர்.மனோகர், குன்னூர்: எனக்கு முன் கோபம் அதிகம். இதனால், சில சமயங்களில் பொருட்களை கூட உடைத்து விடுகிறேன். கோபம் தெளிந்த பின் அதற்காக வருந்துகிறேன். முன் கோபத்தை தவிர்க்க ஒரு வழி கூறுங்களேன்!

கோபம் வரும்போது, சட்டென உங்கள் முகத்தை கண்ணாடியில் பாருங்கள். அதன் விகாரத்தை உங்களாலேயே சகிக்க முடியாது. கோபம் பறந்து போகும் என ஏதோ ஒரு அறிஞர், எப்போதோ கூறியதை, எங்கோ படித்த நினைவு!                        ***


*எல்.கவுதம், விழுப்புரம்: அடி, உதை, அஹிம்சை - எதன் மூலம் மனைவியை நம்ம வழிக்குக் கொண்டு வரலாம்?

முதல் இரண்டையும் நம்மகிட்டே திருப்பினால் என்ன செய்ய முடியும்? மூன்றாவது வழிதான் சிறந்தது: அதையே நான் கடைப்பிடிக்கிறேன் என்கிறார் அனுபவமிக்க உதவி ஆசிரியர் ஒருவர்! (ஆரம்ப காலத்தில் முதலிரண்டை, 'டிரை' செய்து பார்த்த அனுபவம் ஆசாமிக்கு இருக்கும் என்ற சந்தேகம் உள்ளது என்னிடம்!)                                                         ***

** கே.கபில், முத்தியால்பேட்டை: ஜாதிப் பிரச்னை ஒழியாததற்கு காரணம் என்ன?

சுய லாபம் தேடும் அரசியல் கட்சிகளும், அதன் தலைவர்களும்தான் காரணம்!                             ***

*ரா.மங்கையர்க்கரசி, திருப்பூர்: தங்கம் விலை குறையுமா?

உங்கள் வாழ்நாளில் ஏறிய எந்தப் பொருளின் விலை இறங்கியுள்ளது என யோசித்துப் பாருங்கள். கையில் காசு இருந்தா, நழுவ விடாதிங்க சந்தர்ப்பத்தை. வாங்கி, 'ஸ்டாக்' பண்ணிடுங்க; குறையவே குறையாது தங்கம் விலை!                                   ***

** டி.சாரதா, கம்பம்: தன்னிடம் அதிக குறைகளை வைத்துக் கொண்டு, பிறர் குறையை ஆராய்ந்து பேசுபவர்கள் பற்றி...

இவர்களைப் பற்றி ரொம்ப அலட்டிக் கொள்ள தேவையில்லை. ஆனால், அவர்களின் கூற்றில் நல்லது இருக்கலாம். அதை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.                                                                 

***

*இ.பிரவின், உடுமலைப்பேட்டை: வீதியில் செல்லும் பெண்களைப் பார்க்கும் பழக்கம் மட்டும் ஆண்களுக்கு விட முடியாத பழக்கமாக உள்ளதே... என்ன செய்து இப்பழக்கத்தைப் போக்கலாம்?

ஏதோ கொலை பாதகம் போலல்லவா இப்பழக்கத்தை கருதுகிறீர்கள்... ஒரு தவறும் இல்லை; பெண்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தாதவரை!

***

*ஆர்.துரைசாமி, ஜோதிபுரம்: ஓர் இளம் பெண் லென்ஸ் மாமாவை மட்டும் சந்திக்க விரும்பினால், உங்களுக்கு பொறாமையாகத்தானே இருக்கும்?

ஆங்... லென்ஸ் மாமாவை தனியே எதுக்கு சந்திக்க போவாங்கன்னு எனக்குத் தெரியாதா?

'முகமூடி அணியாத அந்துமணி போட்டோ ஒண்ணு கொடுங்க... வெளியே யாருகிட்டேயும் சொல்ல மாட்டேன், காண்பிக்க மாட்டேன்!' எனக் கேட்கத்தானே சந்திப்பாங்க!                               ***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us