தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப

அந்துமணி பா.கே.ப

அந்துமணி பா.கே.ப


PUBLISHED ON : அக் 10, 2010

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 10, 2010


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'அரசு அலுவலகர்களிடம், இப்படி, அப்படி இல்லாம லஞ்சம் பெருத்துப் போச்சுப்பா...' என அலுத்துக் கொண்டார் அமீர் பாய்.

'ஏன் ஜி... என்ன விஷயம்?' எனக் கேட்டேன்.

'சேலத்துல ஒரு வேலை ஆக வேண்டி இருந்தது. டெபுடி தாசில்தார் தான் அந்த வேலய

முடிச்சுக் குடுக்கணும். அப்ளிக்கேஷனைக் குடுத்தேன். அதுல மனுதாரரின் பெயருக்குப் பக்கத்துல, பி.ஏ., என அவரது பட்டமும் போட்டுக் கொண்டிருந்தார்... அப்ளிக்கேஷன்ல பி.ஏ., என்ற பட்டத்தைப் பார்த்தவர், 'டிகிரி சர்ட்டிபிகேட் எங்கே?' எனக் கேட்டார்; அந்த சர்ட்டிபிகேட் இணைக்கத் தேவையே இல்லை. நான் உடனே, 'அந்த அப்ளிக்கேஷனை குடுங்க... பி.ஏ.,ன்ற பட்டத்தை அடிச்சுட்டுக் குடுக்கிறேன்...' என்றேன். என்னுடன் வந்தவர், என் கையை லேசாக அழுத்தி வெளியே வரும்படி சைகை செய்தார். அவருடன் வெளியே வந்தேன்.

'அவர், 'என்னய்யா புரியாத ஆளா இருக்கே... பார்ட்டி, 'விட்டமின் ப' எதிர்பார்க்குது...' என்றபடியே, ஒரு கவரை எடுத்து, நூறு ரூபாய் தாள் ஐந்தை உள்ளே வைத்து, அலுவலரிடம் சென்று, 'சார்... சர்ட்டிபிகேட் காப்பி அஞ்சு வச்சிருக்கேன், போதுமா?' எனக் கேட்டதும், கோழிக்குஞ்சை அமுக்கும் பருந்து போல கவரை வாங்கிக் கொண்டு, 'போதும்... போதும்...' என்றவர், அடுத்த ஒரு மணி நேரத்தில் வேலையை முடித்துக் கொடுத்தார். நாடு எங்கேயோ போய்க்கிட்டு இருக்கு...' என அலுத்துக் கொண்டார்.

இதைக் கேட்ட போது, ஒரு ஜோக் நினைவில் வந்தது... ஒரு சைக்கிளை மடக்கிய போலீஸ்காரர், சைக்கிள் ஓட்டியிடம் லஞ்சம் கேட்கிறார். சைக்கிள் ஓட்டியோ, 'எல்லாம் சரியாத் தானே இருக்கு! எதற்கு லஞ்சம்?' என எதிர் கேள்வி போட, 'டயர்ல காத்து கம்மியா இருக்கேப்பா... அதுக்குத் தான்!' என்பார் போலீஸ்காரர்!      — கேலிக்கூத்து!

'அப்பா பேப்பர் படிக்கிறார், அம்மா சமையல் செய்கிறார், தம்பி பாடம் படிக்கிறான், அம்மாவிற்கு தங்கை உதவுகிறாள்...' இது என்ன, தெரியவில்லையா? இரண்டாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இருந்த வாசகம் தான்.

இதே கருத்தை வலியுறுத்தி அமெரிக்காவில் ஒரு நாவல் வெளியாகியுள்ளது. பெண்கள் என்றால் ஆண்களுக்காக உழைக்க பிறந்தவர்கள் என்ற கருத்தை வலியுறுத்தி வெளியாகியுள்ள அந்த புத்தகம், அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் அமைப்பினர் அந்த புத்தகத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். அதே நேரத்தில் நடுத்தர வர்க்க பெண்கள் அந்த புத்தகத்தில் உள்ள கருத்தை ஆதரிக்கின்றனர்.

அந்த புத்தகத்தின் பெயர்: பிராப்பர் கேர் அண்ட் பீடிங் ஆப் ஹஸ்பெண்ட்ஸ்!

இதில் ஆச்சர்யம் என்ன தெரியுமா? புத்தகத்தை எழுதியவரும் ஒரு பெண் தான். அவர் பெயர் லாரா ஸ்கெஸ்சிங்கர். திருமண உறவு நீடித்து நிலைக்க வழி சொல்லும் அந்த புத்தகத்தில் இவர், கணவருக்கு, மனைவி பணிவிடை செய்து, அவரை கண்ணும், கருத்துமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

அவரின் அட்வைஸ்களில் சில:

* கணவர் விரும்பும் போதெல்லாம், அவருடன் செக்ஸ் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டும்.

* சமையல் செய்ய வேண்டும்; சாப்பாடு மேஜையில் இருவரும் பேசுவது நல்லது.

* அவர் விரும்பிய நிகழ்ச்சியை, 'டிவி'யில் பார்க்க அனுமதிக்க வேண்டும்.

* கணவர் பற்றி தோழிகளிடம் குறை கூறக் கூடாது.

இவ்வாறு எல்லாம் அந்த புத்தகத்தில் ஆலோசனை கூறியுள்ளார் லாரா. அமெரிக்காவில் இந்த புத்தகம் 7 லட்சத்து 50 ஆயிரம் பிரதிகள் விற்று தீர்ந்துள்ளதாம்!

ஏற்கனவே அமெரிக்காவில் பிரபலமானவர் லாரா. இவர் ரேடியோ நிகிழ்ச்சி தயாரிப்பாளர். இவரது நிகழ்ச்சியை கேட்பதற்கு என்றே ஒரு கோடியே 50 லட்சம் ரசிகர்கள் உள்ளனர். இவ்வளவு பிரபலமான பெண் இப்படி பெண்களை அடிமைப்படுத்தும் கருத்துடன் புத்தகம் வெளியிட்டுள்ளார் என, பெண் அமைப்பினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

அதே நேரத்தில் அமெரிக்காவில் நடுத்தர  வர்க்கத்தைச் சேர்ந்த பெண்கள் இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ள கருத்துக்களை வரவேற்றுள்ளனர். 'அமெரிக்காவில் சீரழிந்து வரும் குடும்ப உறவு மீண்டும் நிலைக்க வேண்டும் என்றால், பெண்கள் சில தியாகங்களை செய்ய வேண்டும்!' என்று அவர்கள் கருதுகின்றனர்.

***

உலக சாதனைகளை வெளியிடும் கின்னஸ் நிறுவனம், வியாபார சாதனைகள் பற்றியும் ஒரு புத்தகம், 'கின்னஸ் புக் ஆப் பிசினஸ் ரிக்கார்ட்' என்று வெளியிட்டிருக்கிறது. சாம்பிளுக்கு சில வியாபார சாதனைகள்:

* உலகில் மிகவும் அதிகமானவர்களை வேலையில் வைத்துக் கொண்டிருக்கும் நிறுவனம், 'இந்திய ரயில்வே!'

* அதிகமானவர்கள் பணிபுரியும் தொழிற்சாலை: அமெரிக்காவின் ஜெனரல் மோட்டார்ஸ். ஏழு லட்சம் பேர் இத்தொழிற்சாலையில் பணியாற்றுகின்றனர்.

* உலகில் மிகவும் பழைய நிறுவனம்:

'ஸ்டோரா கோப்பார்–பெர்க் பெர்க்ஸ்லாக்' என்ற நிறுவனம். மரம், உலோகப் பொருட்கள் விற்கும் நிறுவனம் இது. ஆயிரம் ஆண்டுகளாக நடந்து வருகிறது. ஸ்வீடன் நாட்டில் உள்ளது இந்த நிறுவனம்.

* உலகில் அதிகமான பொருட்கள் கண்டுபிடித்து, பேடண்ட் ரிஜிஸ்டர் செய்து இருப்பவர்; தாமஸ் ஆல்வா எடிசன்! 1069 பொருட்கள் ரிஜிஸ்டர் செய்துள்ளார். மின்சாரம், சினிமா புரொஜக்டர் போன்றவை இதில் அடங்கும்.

* அதிக சொத்துக்கள் உள்ள நிறுவனம்: ஜப்பானின்,  'ப்யூஜி பாங்க்!'

* உலகில் முதல் பில்லியனர்: அமெரிக்காவின் ஜான்.டி.ராக் பெல்லர். 1918ல் 1.25 பில்லியன் டாலர்கள்.

* இதுவரை உலகில் மனித இனத்தால் குடிக்கப்பட்ட கோக்கோ கோலா எவ்வளவு தெரியுமா? உலகின் மிகப் பெரிய நீர்வீழ்ச்சியான நயாகரா நீர்வீழ்ச்சியில் 38 மணி 2 நிமிடங்கள் தொடர்ந்து கொட்டிக் கொண்டிருக்கும் நீரின் அளவு.

* உலகிலேயே இதுவரை நடந்த மிகப் பெரிய பண்ட மாற்றுதல் என்ன தெரியுமா?

1984 ஜூலை மாதம், ராயல் சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ், 36 மில்லியன் பீப்பாய் பெட்ரோல் கொடுத்து, பத்து போயிங் 747 விமானங்களை பெற்றது தான்.                      

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us