sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்

அந்துமணி பதில்கள்

அந்துமணி பதில்கள்


PUBLISHED ON : நவ 09, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 09, 2014


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எஸ்.மாணிக்க விநாயகம், ஆரப்பாளையம்: மனைவியின் பெருமித செயல்களை அடிக்கடி பாராட்டுவது அல்லது மனதுக்குள்ளே வைத்து மவுனம் சாதிப்பது - எது நல்லது ஒரு கணவனுக்கு?

மனைவி மட்டுமல்ல, பெருமிதம் கொள்ளச் செய்யும் செயலைச் செய்யும் எவரையும் அவர், உடன் பணியாற்றுபவர், பக்கத்து வீட்டுக்காரர், வீட்டு வேலைக்காராக இருந்தாலும், மனம் விட்டு பாராட்ட வேண்டும். அதற்குக் கிடைக்கும் பலன் மிகப் பெரியதாக இருக்கும்!

எம்.எஸ்.மோகன்ராஜ், பல்லாவரம்: மற்றவர்களை கவர்ந்திழுக்க நான் என்ன செய்ய வேண்டும்?

ஒரே ஒரு வேலைதான் செய்ய வேண்டும்; அது, முகஸ்துதி! இன்றைய உலகில் முகஸ்துதிக்கு மயங்காத மனிதர்கள் யாராவது உண்டா? 'ஆஹா... உங்களைப் போல் உண்டா... உங்கள் அறிவுக் கூர்மையை எப்படி பாராட்டுவது! உங்கள் தயாள சிந்தையை எப்படி மெச்சுவது...' என, அவிழ்த்து விடுங்கள்; மற்றவர்களை சுலபமாக கவர்ந்து விடலாம்!

எம்.மல்லிகா, மதுரை: எந்த மொழி மீது உங்களுக்கு பற்று அதிகம்?

மழலை மொழி மீது! மழலைக்கு எந்த பேதமும் கிடையாதே!

எம்.பால்பாண்டி, போடிநாயக்கனூர்: சில நேரங்களில் கோபம் பொத்துக் கொண்டு வருகிறதே... என்ன செய்ய?

இருக்கும் இடத்தில் இருந்து நகர்ந்து, வேறு இடத்திற்கு செல்லுங்கள்; கோபமூட்டும் விஷயத்தை வலுக்கட்டாயமாக மனதில் இருந்து அகற்றி, பிடித்த பாடல், நிகழ்ச்சியை அசை போடுங்கள். கோபம் ஓடியே போய்விடும்!

ஆர்.ஜாபர்கான், நீலகிரி: இக்கால இளைஞர்களுக்கு சமூகத்தின் மீதான சிந்தனை இருக்கிறதா?

இருக்கிறது; ஆனால், அது, 'நெகடிவ்' ஆக உள்ளது. 'இந்த சமுதாயத்தை திருத்த முடியாது, நாடு உருப்படாது...' போன்ற கருத்துக்களையே கொண்டுள்ளனர். கண்ணெதிரே நடக்கும் அக்கிரமத்தை தட்டிக் கேட்கக் கூட துணிவில்லை.'நமக்கேன் வம்பு...' என்ற கோணத்தில் ஒதுங்கிச் செல்லவே முற்படுகின்றனர்.

டி.கனகவேல், புதுச்சேரி: குற்றம் செய்யும் அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் மக்களே தண்டிக்க ஆரம்பித்து விட்டால்...

நாடு உருப்படுவதில் நம் மக்களுக்கு அவ்வளவு சீக்கிரம் ஆர்வம் உண்டாகும் என்று பகல் கனவு காண நான் தயார் இல்லை!

என்.சிதம்பரம், பொள்ளாச்சி: திருப்பதி மொட்டை, திருத்தணி மொட்டை இதில், எது தலை சிறந்த மொட்டை?

நம்பி வந்தவனை - வளை மொட்டை அடிக்காமல் இருப்பதே சிறந்தது!

வி.எஸ்.இளங்கோவன், காரியாபட்டி: மாமியாரை, குழந்தையைப் பார்த்துக் கொள்ளும் வெறும் ஆயாவாகவும், மாமனாரை, வீட்டுக் காவல்காரனாகவும் மட்டுமே மதிக்கும் இன்றைய இளம் தலைமுறை பெண்கள் பற்றி...

'இதில் என்ன... அரை டம்ளர் தானே நீர் இருக்கிறது...' என எண்ணுவதைவிட, 'ஆஹா... டம்ளர் காலியாக இல்லாமல் இருக்கிறதே...' என்று எண்ணும்படியான மனப்போக்குடன், 'இந்த சிறு குழந்தைக்கு அறிவூட்டும் பொறுப்பு, உடல் நலத்தைப் பேணும் பொறுப்பு என, எவ்வளவு பொறுப்புகளை நம்மை நம்பி ஒப்படைத்திருக்கின்றனர்...' என்று சிந்தித்தால், மனிதனின் கண்ணோட்டம் மாறிப் போகும். 'காவல்காரன், ஆயா' போன்ற ஆயாசங்கள் தொற்றிக் கொள்ளாது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us