தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்

அந்துமணி பதில்கள்

அந்துமணி பதில்கள்


PUBLISHED ON : டிச 28, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 28, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

க.கிருஷ்ணமூர்த்தி, அம்பத்தூர்: படித்தவர்களுக்கு மட்டுமே ஓட்டுரிமை எனச் சட்டம் கொண்டு வந்தால் என்ன ஆகும்?

அரசியலுக்கு வரும் நடிகர்களுக்கு,'டெபாசிட்' காலியாகி விடும்!

பெ.காஞ்சனா, அருப்புக்கோட்டை: வீட்டு செலவுக்கு தேவையான பணத்தை மட்டும் கொடுத்து விட்டு, உம்மணா மூஞ்சியாக சில ஆண்கள் இருக்கின்றனரே...

குடும்பத்தைத் தவிர, தம்பதியருக்குள், 'காமன் சப்ஜெக்ட்' ஏதும் இல்லாமல் போவதுதான் இதற்கு காரணம். இப்படி இருக்கும் கணவனையோ, மனைவியையோ ஆன்மிகம், சினிமா, பத்திரிகை என, ஏதாவது ஒரு சப்ஜெக்டுக்கு இழுத்து, பேச, விவாதிக்க ஆரம்பித்தால் இக்குறை தீர்ந்து விடும்.

வி.வேங்கடரமணன், திருவந்திபுரம்: நடிகன் - அரசியல்வாதி ஒப்பிடுங்களேன்!

இருவருமே நடிகர் தான். பணத்தை வாங்கிக் கொண்டு நடிக்கிறான் நடிகன்; பணம் கிடைக்கும் என்று நடிக்கிறான் அரசியல்வாதி. ஆக, இருவருமே பணம் பண்ணி விடுகின்றனர்.

எஸ்.நெல்லையப்பன், கண்டமங்கலம்: பெண்ணின் ஜாதகத்தைப் பார்த்த பின், பெண் பார்க்க செல்வதா அல்லது முதலில் பெண்ணைப் பார்த்து விட்டு ஜாதகம் பார்ப்பது நல்லதா?

தயவு செய்து ஜாதகப் பேச்சை எடுக்காதீர்கள். இந்த ஜாதகம் என்ற காகிதம் எத்தனை பெண்களை இன்னும் கன்னியாகவே வைத்திருக்கிறது என்பதை அறிவீர்களா? ஓரம் கட்டுங்கள் ஜாதகத்தை. பொருத்தம் மனதில் இருக்கிறதா பாருங்கள்... ஜாம் ஜாம் என்று மேளம் கொட்ட ஏற்பாடு செய்யுங்கள்!

க.தேவகி, ஈரோடு: 'திண்ணை' பகுதியில், ஈ.வெ.ரா.,வைப் பற்றிய நல்ல செய்திகள் பல வந்துகொண்டுள்ளனவே... இது, உங்கள் தூண்டுதலாலா அல்லது பொறுப்பாசிரியரின் செயலா?

ஈ.வெ.ரா., மிகப் பெரிய அறிஞர்... நான், ஒரு ஆபிஸ் பையன்! ஈ.வெ.ரா.,வின் கடைசி காலத்தில், நான் மிகச் சிறியவனாக இருந்த போது, என் தந்தை, ஈ.வெ.ரா.,வின் திருச்சி இல்லத்திற்கு அழைத்து சென்று இருந்தார்! அப்போது, அவரது படுக்கையில் அவர் அருகே அமர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் என்னிடம் இன்னமும் உள்ளது! அன்று, அவர்களின், 'விடுதலை' என்ற நாளிதழை பார்க்கும் சந்தர்ப்பம் அமைந்தது... அப்போது முதல், அப்பத்திரிக்கையை படிக்கும் ஆர்வம் எழுந்தது... இப்போது வரை, விடாமல் படித்து வருகிறேன்! அப்பத்திரிகையில் வெளிவரும் கருத்துக்கள் அனைத்திலும் எனக்கு ஒப்புதல் இல்லை என்றாலும், அவர்களின் கருத்துக்களை ஆர்வமுடன் படித்துக் கொள்வேன்!

எம்.சுலைமான், ராமநாதபுரம்: சுயதொழில் மூலம் போதுமான அளவு சம்பாதிக்கிறேன். கை நிறைய சம்பளமும், பதவியும் தருவதாக தனியார் நிறுவனம் ஒன்றில் அழைக்கின்றனர்; போகலாமா?

வேண்டாம்; இப்போதே போதுமான அளவு சம்பாதிப்பதாக கூறுகிறீர்கள். 'கை நிறைய' வேண்டும் என்பதற்காக தங்க முட்டை போடத் தயாராகி வரும் பொன் வாத்தை இன்றே கொன்று விடாதீர்கள்!

ஆர்.சரளா, திருப்பூர்: உங்களது பெஸ்ட் பிரண்ட் எத்தனை பேர்?

இருவர்! முதலாமவர், கடிகாரனார்; இரண்டா மவர், நாள்காட்டியார். இவர்கள்தான் என் சிறந்த நண்பர்கள். 'நேரமும், நாளும் ஓடிக் கொண்டே இருக்கிறது... முன்னேறு முன்னேறு' என ஒவ்வொரு நொடியும் உணர்வு கொள்ள வைக்கும் ஊக்க, 'டானிக்' இவர்கள் தான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us