தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : ஜூலை 19, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 19, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எம்.சீதாலட்சுமி, கம்பம்: நல்ல கணவர் - மேற்படிப்பு... இரண்டில் ஒன்றை தேர்வு செய்தாக வேண்டிய நிலை. ஒரு பெண் எதைத் தேர்வு செய்வது நலம்?

இரண்டாவதைத்தான்! கல்வி அறிவு, உயர் பதவியைப் பெற்றுத்தரும்; அது, வாழ்வை எதிர்கொள்ள தைரியத்தைக் கொடுக்கும். நல்ல பணி இருப்பதால், வரன்கள், 'க்யூ'வில் நிற்கும்!

எஸ்.ஜார்ஜ் ஸ்டீபன், விருத்தாசலம்: சில அரசியல் பொது கூட்டங்கள் நடக்கும் போது, கல் வீசப்படுகிறதே...

கல் விழுந்தது என்றால், பேசியவர் ஏதோ உண்மையை கூறினார் என்று பொருள்! உண்மையைத் தவிர்த்து, செமையா அவிழ்த்து விட்டுக் கொண்டிருப்போரின் பேச்சுக்களைத் தான் நம் மக்கள் இப்போதெல்லாம் ரசிக்கின்றனர்; 'பிகில்' கொடுப்பதோ, கல் எறிவதோ இல்லை!

எல்.செல்வம், முனிசிபாளையம்: எப்போதும் பணத்தின் பின் அலைபவர்களைப் பார்த்தால், உங்களுக்கு என்ன தோன்றும்?

பரிதாபம் தோன்றும். வாழ்வில் அனுபவிக்க வேண்டிய நல்ல விஷயங்கள் ஆயிரம் உள்ளது. இவர்களுக்குத் தெரியாமல் போய் விட்டதே என, எண்ணிக் கொள்வேன்!

என்.ராஜாமுகம்மது, பரவை: அரசியலில் இருக்கும் பெரும் புள்ளிகள் பலருக்கு, 'ஜெனரல் நாலெட்ஜ்' கொஞ்சம் கூட இல்லையே...

அதனால் அவர்களுக்கு என்ன இழப்பு? அவர்களிடம் காசு பண்ணும், 'நாலெட்ஜ்' இருக்கிறதே... இவர்களிடம் சிக்கி இழந்து கொண்டிருப்பதெல்லாம் நாம் தான்!

எம்.சந்தோஷ்குமார், மூணாறு: தனியார் பள்ளிகளில் பணி இடங்களை நிரப்ப பெண்களையே நியமிக்கின்றனரே...

'ஓபி' அடிக்க மாட்டார்கள்...'சின்சியராக' வேலை செய்வர்; மாணவ, மாணவியரிடம் அன்பாக நடந்து கொள்வர் போன்ற அடிப்படையான, 'எக்ஸ்ட்ரா' குணங்கள் பெண்களிடம் இருப்பதால், பெண்களையே வேலைக்கு எடுக்கின்றனர். ஆண்கள், தனியார் பள்ளி ஆசிரியப் பணியை மறந்து விட வேண்டியது தான்!

எஸ்.மரியபுஷ்பம், சூளைமேடு: எப்பேர்பட்ட ஆளையும் ஒரு பெண் நினைத்தால், 'வீழ்த்த' முடியும் எனும் கூற்று, எந்த அளவிற்கு உண்மை?

'வீழ்த்த' எனும் பதத்தை படிக்கும் போதே, 'நெகடிவ்' சைடை நீங்கள் குறிப்பிடுவது போல தோன்றுகிறது. இருந்தாலும், ஒரு பெண் நினைத்தால், 'வீழ்த்த' முடியும் என்பதில் உண்மை இல்லாமல் இல்லை. எனினும், ஒரு ஆளை, 'திருத்த வேண்டும், நல்வழிப்படுத்த வேண்டும்!' என்று பெண் நினைத்தால், அன்றும், இன்றும், ஆண்களை கவரும் - திரும்ப படிக்கவும், 'வீழ்த்தியும்' அல்ல - திறமை பெண்களிடம் உண்டு என்பது நூற்றுக்கு நூறு உண்மையே!

எஸ்.வேணுகோபாலன், கல்வீரம்பாளையம்: பெயர், நிம்மதி... இதில் மனிதனுக்கு எது தேவை?

பெயர் எப்படி வேண்டுமானலும் எடுத்து விடலாம்; நிம்மதி, இதுதான் மனிதனுக்கு தேவை. இரவு, 10 மணிக்கு தலையணையில் தலையைச் சாய்த்தால், உடனே, தூக்கம் வர வேண்டும். அது இல்லாத வாழ்க்கை நரகம்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us