sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

இதப்படிங்க முதல்ல!

/

இதப்படிங்க முதல்ல!

இதப்படிங்க முதல்ல!

இதப்படிங்க முதல்ல!


PUBLISHED ON : ஜூலை 26, 2015

Google News

PUBLISHED ON : ஜூலை 26, 2015


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடல் தானம் செய்யும் இயக்குனர் சங்கம்!

கடந்த இரு ஆண்டுகளாக, தமிழ்த்திரைப்பட இயக்குனர் சங்கத்தில், தலைவராக இருந்த விக்ரமனும், மற்ற நிர்வாகிகளும் போட்டியின்றி மீண்டும் தேர்வாகி உள்ளனர். இதை, சமீபத்தில் தெரிவித்த விக்ரமன், 'அரசு வழங்கும், காஸ் மானியத்தை, நான் திருப்பிக் கொடுத்திருப்பது போன்று, இயக்குனர் சங்கத்தின் மற்ற, 200 நிர்வாகிகளும் திருப்பி கொடுக்க உள்ளனர்; மேலும், என்னைப்போலவே சங்க உறுப்பினர்கள், 200 பேரும் உடல் தானம் செய்யவும் முன்வந்துள்ளனர்...' என்றும் தகவல் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, 'மறைந்த இயக்குனர் கே.பாலசந்தருக்கு, சென்னை மயிலாப்பூரில் சிலை வைக்க வேண்டும்...' என்றும், தமிழக அரசுக்கு, இயக்குனர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

சி.பொ.,

விக்ரமை கை விட்ட நயன்தாரா!

எஸ்.ஜே.சூர்யாவுடன், கள்வனின் காதலி படத்தில் நயன்தாரா நடித்து வந்த போது, விக்ரம் நடிக்கயிருந்த ஒரு படத்திலும் அவரை நடிக்க அழைத்தனர். ஆனால், நயன்தாராவோ, 'கள்வனின் காதலி படத்துக்கு முன்பணம் வாங்கி விட்டதால், அதை முடித்துக் கொடுத்து விட்டுத் தான் வருவேன்...' என்றார். இதனால், விக்ரமே நேரடியாக நயன்தாராவை தொடர்பு கொண்டு பேசிய போது, அவர்களுக்கிடையே, வாக்குவாதம் ஏற்பட்டு, அது மனக்கசப்பில் முடிந்தது. ஆனால், அந்த மனக்கசப்பை விக்ரமே மறந்து விட்டபோதும், நயன்தாரா இன்னும் மறக்கவில்லை. அதனால், தற்போது, விக்ரம் நடிக்கயிருக்கும், மர்மமனிதன் படத்தில், நாயகியாக நடிக்க, நயன்தாராவை அணுகியபோது, பழைய கதைகளை நினைத்து, 'கால்ஷீட் இல்லை...' என்று கைவிரித்து விட்டார். தீயினால் சுட்ட புண் ஆறும்; வாயினால் சுட்ட புண் ஆறாது!

எலீசா.

எமியை தேடி லண்டன் செல்லும் அனிருத்!

நடிகை ஆண்ட்ரியாவை தன் இசையில் பாட வைத்து, 'லிப்லாக்' முத்த சர்ச்சைகளில் சிக்கியவர் அனிருத். அதன்பின், அவரது இசையில் ஆண்ட்ரியா பாடவில்லை. இந்நிலையில், ஆண்ட்ரியாவை மனதில் வைத்து, 'எனக்கென யாரும் இல்லையே...' என்ற இசை ஆல்பத்தை வெளியிட்டிருந்தார் அனிருத். தற்போது, அந்த ஆல்பத்தை வீடியோவாக வெளியிட இருப்பதால், அதில் தன்னுடன், 'ரொமான்ஸ்' செய்தபடி ஆடுவதற்கு, ஐ பட நாயகி எமிஜாக்சனை கேட்டுக் கொண்டுள்ளவர், அதற்கான படப்பிடிப்பை நடத்த, விரைவில் லண்டன் பயணிக்கிறார்.

சி.பொ.,

ஆர்யாவின், 25வது படம்!

பிரியாணி நடிகர் என்று அனைவராலும் அழைக்கப்படும் ஆர்யாவின், 25வது படம், வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க. இப்படத்தை தன் திரையுலக பயணத்தில் மைல்கல்லாக கருதும் ஆர்யா, இப்படத்தின் ஆடியோ விழாவை, பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார். அத்துடன், தன் அபிமான தோழர் - தோழிகள் அனைவரும் வந்து, தன்னை வாழ்த்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

— சி.பொ.,

கறுப்புப் பூனை!

பால் நடிகை திருமணம் செய்து கொண்ட பின்பும், சில படங்களில் நடித்து வருவதால், பழைய சினிமா நண்பர்களுடன் நட்பு வளர்க்கிறார். இது அவரது கணவருக்கு பிடிக்கவில்லை. அதனால், இப்போது, பழகினவர்களை பார்த்தாலும், பார்க்காதவர் போன்று, முகத்தை திருப்பி, ஓடி ஒளிகிறார் நடிகை.

தனக்கு சிபாரிசு செய்ய சில கதாநாயகர்கள் வேண்டும் என்பதால், மேல்தட்டு கதாநாயகர்களை தன் பக்கம் இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் அங்காடித் தெரு நடிகை. அவரது பட்டியலில், தளபதி நடிகரின் பெயர் தான் முதலிடம் பிடித்துள்ளது. ஆனால், அவரோ, 'கழுவுற மீனில் நழுவுற மீன் ரகம்' என்பது தெரிந்தும், 'நான் அவரை வீழ்த்திக் காட்டுகிறேன்...' என்று, 'சொடக்' போடுகிறார் நடிகை.

தாரா நடிகைக்கு ஒப்பனை செய்து வந்த ஒருவர், அவரது ரகசிய நண்பர்கள் பற்றிய தகவல்களை, 'லீக் - அவுட்' செய்து விட்டார். இதனால், கடும் டென்ஷனான நடிகை, அந்நபரை ஏறக்கட்டி, தற்போது புதிய நபரை நியமித்திருக்கிறார். ஆனபோதும், 'இனிமேல் யாரையும் நம்பக் கூடாது...' என்று தன் பர்சனல் விஷயங்களை ரகசியமாக வைக்க முடிவெடுத்துள்ளார்.

துளிகள்!

* ஹைகூ என்ற படத்தில், கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் அமலாபால்.

* இறைவி படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக நடிக்கிறார் அஞ்சலி.

* தன் மகன் துருவை, ஷங்கர் படத்தில் அறிமுகம் செய்ய முயற்சித்து வருகிறார் விக்ரம்.

அவ்ளோதான்!






      Dinamalar
      Follow us