sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்துமணி பதில்கள்!

/

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : டிச 20, 2015

Google News

PUBLISHED ON : டிச 20, 2015


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.ஆர்.சுந்தரமூர்த்தி, திருவல்லிக்கேணி: சில அரசு ஊழியர்கள் அலுவலக நேரத்திலேயே மது அருந்துகின்றனராமே... உண்மையா?

அங்குள்ள கழிவறைகளில், மினி மற்றும் குவாட்டர் பாட்டில்களை சகஜமாக காணலாம். இதாவது பரவாயில்லை... சில அலுவலக கழிவறைகளில், 'காண்டம்' கூட கிடக்கின்றன என்றால், இவ்வலுவலகங்களின் லட்சணம் எப்படி என்று பார்த்துக் கொள்ளுங்கள்!

எஸ்.முகைதீன் பாவா, நெய்வேலி: பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா இன்னும் தூங்கிக் கொண்டுள்ளதே... காரணம் என்ன?

ஆணாதிக்க மனப்பான்மை கொண்ட அரசியல்வாதிகளின் சுயநலம் தான் காரணம்! பெண் உரிமை, பெண் சுதந்திரம், பெண் விடுதலை என வாய் கிழிய பேசுவதெல்லம் மேடை பேச்சுக்கும், ஓட்டு வாங்க மட்டுமே! உண்மையில் உரிமை கொடுக்க மனமில்லை இவர்களிடம்!

சி.ஜெயராமன், புதுச்சேரி: பட்டப் படிப்பெல்லாம் இனி வேலைவாய்ப்பிற்கு உதவாது என்கின்றனரே... அப்படியா?

உண்மைதான்; புரொபஷனல் கோர்ஸ் படித்தவர்கள் கூட வேலை கிடைக்காமல் திண்டாடுகின்றனர். ப்ளஸ் 2 முடித்த கையோடு, ஏதாவது தொழில் கற்று, ஒவ்வொருவரும் சொந்த காலில் நின்றால் தான் இனி பிழைக்க முடியும்!

எஸ். மயில்வாகனன், முகலிவாக்கம்: வாழ்க்கை தரம் நம் வசதியால் அமைவதா, பண்பால் வருவதா?

எவ்வளவோ பண வசதி இருந்தும் கோமாளித்தனமாக வாழ்வை அமைத்துக் கொண்டு, மன நிம்மதி இல்லாமல் அல்லல்படுகின்றனர் பலர்! பண வசதி இல்லாவிடினும் பண்பு என்ற சிறந்த குணம் இருப்பின், வாழ்க்கை தரம் சூப்பரோ சூப்பர்!

ஆர்.அசோக்குமார், பெங்களூரு: பொதுவாக அனைத்து வகை காய்கறிகளுமே,'போர்' அடிக்கிறதே...

உண்மைதான். தினம் தினம் கத்திரிக்காய், வாழைக்காய், முட்டைக்கோஸ், உருளைக் கிழங்கையே உண்ணுகிறோம். சுமார், 20, 25 வகை லாபம் தரும் காய்கறிகள் இன்று காணாமல் போய் விட்டதாகவே விவசாய அறிஞர்கள் கூறுகின்றனர். ஆனால், சீனாவில் இன்னும், 40 வகையான காய்கறிகள் பயிரிடுகின்றனர்!

கா.பாலசுப்ரமணியன், கோவை: எவருடைய நட்பை பெற்றால், நல்ல நிலையை அடைய முடியும்?

தானம் கொடுக்கும் மனம் கொண்டவர்கள், அகிம்சா வாதிகள், நன்கு படித்த அறிஞர்களின் நட்பை தேடி பெற்றால், உயர்ந்த நிலையை அடையலாம். இக்குணம் கொண்டோர் இன்னும் இருக்கத்தான் செய்கின்றனர்!

அ.வெற்றிவேல், திண்டுக்கல்: யாரிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்?

பொய்யான முகஸ்துதி செய்வோரிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். கொடிய விஷம் நிறைந்த மாயை தான் முகஸ்துதி; இதில் அகப்படாதவர்கள் என்று யாருமே இருக்க முடியாது. எனவே தான், இவர்களிடம் ஜாக்கிரதை என்கிறேன்!






      Dinamalar
      Follow us