தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : ஜன 10, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 10, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வி.திருமலைச்சாமி, மேட்டூர்: நான் ஒரு ஓட்டுனர். கஷ்டப்பட்டு உழைக்கிறேன்; எந்த கெட்ட பழக்கமும் இல்லை. இருந்தும், 10 ரூபாய் கூட மிஞ்சவில்லை. இதற்கு ஒரு வழி சொல்லுங்களேன்...

தொழிலை மாற்றுங்கள்... சொந்தமாக வண்டி வாங்கி ஓட்ட, வங்கியை நாடுங்கள்!

ஹெச்.சத்தியவாணி, கோவை: கொலை, கொள்ளையால் பாதிக்கப்பட்டோர், 'இழந்தது இழந்தாச்சு... ஆளை விடுங்க சாமி...' என, போலீசிடம் கெஞ்சி கூத்தாடும் நிலைக்கு வந்து விடுகின்றனரே...

உண்மை தான்; மக்களின் தோழனாக, அவனுக்கும், அவன் உடைமைக்கும் காவலனாக இருக்க வேண்டியவர்களிடம், நேர்மாறாக செயல்படும் கலாசாரத்தை வளர்த்து விட்டுள்ளனர், அரசியல்வாதிகள். எந்த குற்றமும் செய்யாமல், பெல், பிரேக், லைட் எல்லாம் சைக்கிளில் இருந்தால் கூட, 'காத்து கம்மியா இருக்கே... துட்டு வெட்டு...' என்ற இழிநிலை அல்லவா உள்ளது!

என்.சுப்புராம், கோம்பை: தேக்கு, பாக்கு மற்றும் ஆடு வளர்ப்பு போன்ற, 'பிளேடு' நிறுவனங்கள் வெளிநாடுகளிலும் உள்ளதா?

ஓ... இங்கிலாந்தில், தீக்கோழி வளர்ப்பு திட்டம் அமோகமாக உள்ளதே! மற்ற இறைச்சிகளை விட தீக்கோழி இறைச்சியில், 90 சதவீதம் கொழுப்பு குறைவு. தீக்கோழி, எதை வேண்டுமானாலும் உண்ணும்; உஷ்ணமான சூழ்நிலையிலும், பாலைவனத்திலும் கூட வசிக்கும்!

டி.ஆர்.சிதம்பரம், வத்தலக்குண்டு: விலைவாசியை யாரால் கட்டுப்படுத்த முடியும்?

எதற்கெடுத்தாலும் லைசன்ஸ், கட்டுப்பாடு, லெவி என்பது தூக்கி எறியப்பட்டு, தொழில், வியாபாரத்தை யாரால் ஊக்குவிக்க முடியுமோ அவர்களால் விலைவாசியைக் குறைக்க முடியும்!

ம.காவ்யா, திருவான்மியூர்: எனக்கு இரு அன்பு தோழிகள்; ஒரு தோழியிடம் பேசினால், மற்றொரு தோழிக்கு பிடிப்பதில்லை. நான் எப்படி நடந்து கொள்வது?

உங்களிடம் கூறிய அந்தரங்க ரகசியங்கள் எதையும் மற்ற தோழியிடம் நீங்கள் கூறி விடுவீர்களோ என்ற பயம் காரணமாக இவ்வாறு நடந்து கொள்ளலாம். இல்லையெனில், 'பொசசிவ்னஸ்' - ஈகோ பிரச்னை காரணமாகவும் இருக்கலாம். இவ்விரண்டையுமே, 'லாஜிக்'கலாக பேசுவதன் மூலம் தீர்த்து வைக்க முடியும். முயன்று பாருங்கள்!

சி.அந்தோணிச்சாமி, மடிப்பாக்கம்: சினிமா பார்த்து ஒரு பெண் கெட்டுப் போவாள் என்பது உண்மையா?

'கெட்டு போனவள் - கெட்டுப் போவாள்' என்பதை நிர்ணயிப்பதற்கான அளவுகோல் எதுவுமே கிடையாது. ஊருக்கு ஊர், நாட்டுக்கு நாடு, இனத்துக்கு இனம், மொழிக்கு மொழி இதன் அளவு மாறுபடுகிறது. 'சினிமா பார்த்து கெட்டுப் போனாள், புத்தகம் படித்து கெட்டுப் போனாள்' என்பதெல்லாம் நம்ப முடியாத கட்டுக் கதைகள்!

ஜெ.சந்தானலட்சுமி, அருப்புக்கோட்டை: யாரை நினைத்தால், சிரிப்பு வரும்?

காசு கொடுத்து அடைமொழி, பட்டங்களை வாங்கிக் கொள்வோரை!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us