தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : ஜன 17, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 17, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எம்.நவீன்குமார், சென்னை: முடிவுகள் எடுப்பதில், பிரச்னையை எதிர்கொள்ள தயங்குவதில், முதலிடம் ஆண்களுக்கா, பெண்களுக்கா?

ஆண்களுக்குத் தான்! சைக்கிள், கார் மற்றும் பஸ் ஓட்டுவதையே உதாரணமாக எடுத்துக் கொள்வோம். சீரான வேகத்தில், சடக், படக் பிரேக் போடாமல், 'பாம் பாம்' என காது பிளக்க ஹாரன் அடிக்காமல், அருகில், எதிரில், பின்னால், பக்கவாட்டில் ஏற்படும் டிராபிக் பிரச்னையை சாதுர்யமாக கையாண்டு, 99 சதவீதம் விபத்தே இல்லாமல், 'டிரைவ்' செய்வது பெண்கள் மட்டும் தான்; இதற்கு எதிர்மறை ஆண்களே!

பா.ஸ்ரீதரன், கடையநல்லூர்: உண்மையான நண்பன் எப்படி இருக்க வேண்டும்?

நட்ட நடு இரவில், காட்டுக்கு கூப்பிட்டால் கூட, உடன் வர வேண்டும். இக்கால நண்பர்கள் ஊட்டிக்கு கூப்பிட்டால் மட்டுமே வருகின்றனர்!

வி.ஜேம்ஸ், பாலமேடு: படிப்பு, செல்வாக்கு, அந்தஸ்து, பணம் இருந்தும், அரசியலில் ஈடுபடாத சிலர் உள்ளனரே... அவர்களைப் பற்றி...

நீங்கள் கூறிய, 'குவாலிபிகேஷன்'கள் இல்லாதவர்களுக்குத் தான், அரசியல் லாயக்கு என, அவை உள்ளவர்கள் ஒதுங்கி விட்டனர்!

பொ.சந்திரன், கொளத்தூர்: எத்தனை ஆண்களுக்கு கற்பனை செய்து வைத்தது போன்ற மனைவி அமைகின்றனர்?

'எதிர்பார்த்தது போல இல்லப்பா...' என்ற பதிலைத்தான், 99.99 சதவீத ஆண்கள் சொல்கின்றனர். 'கற்பனை செய்தது போலவே மனைவி அமைந்து விட்டாள்...' எனக் கூறும் அந்த, 0.1 சதவீத ஆளை சந்திக்கும் வாய்ப்பு, இன்னும் எனக்கு கிடைக்கவில்லை!

ம.ஆண்டியப்பன், திருப்பூர்: இயேசு பிறந்த மண்ணான இஸ்ரேலில், எந்த மதத்தைப் பின்பற்றுகின்றனர்?

'ஜூடிஸம்' எனும் மதத்தை பின்பற்றுகின்றனர். ஒளியை வணங்குகின்றனர். இம்மதம், மோசஸ் என்பவரால், கிறிஸ்துவுக்கு, 1,300 ஆண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப்பட்டது. இஸ்ரேல் மட்டுமல்லாமல், அமெரிக்கா உட்பட, உலகில் பல நாடுகளிலும் இம்மதத்தை பலரும் பின்பற்றுகின்றனர்.

எஸ்.ராமநாராயணன், பொள்ளாச்சி: 'டிவி' நேயர்களின் போக்கு இப்போது எப்படி உள்ளது?

போரடிக்கும் புரோக்ராம்கள் மற்றும் 20 செகண்டுகளுக்கு மேல் விளம்பரங்கள் வரும் நேரங்களில், சேனலை மாற்றி விடுகின்றனர். விளம்பரதாரர்களுக்கு பெருத்த நஷ்டம்!

எம்.சாருலதா, சிதம்பரம்: பாத்திரங்கள் தேய்த்து கழுவக் கூட, 'டிஷ் வாஷர்' என்ற பாத்திரம் துலக்கும் கருவி வந்துவிட்டதாமே!

எப்போதோ வெளிநாடுகளில் வந்துவிட்டது. நம் நாட்டில் இப்போது தான் பிரபலமாகி வருகிறது. ஏற்கனவே, நம்ம ஊர் பெண்மணிகள், 'போஷாக்'கானவர்கள்; இது, அவர்களை மேலும் செழுமையானவர்களாக மாற்றி விடும்!

க.வெங்கடேஷ், கண்டமனூர்: என்னைச் சுற்றி எப்போதும் ஏதாவது பிரச்னை இருந்து கொண்டே இருக்கிறதே...

இயற்கை, பொறுமை, காலம் இவை மூன்றும் சிறந்த மருந்துகள்; பொறுங்கள்... பிரச்னைகள் பறந்து போகும். பின்னர் பிரச்னை கொடுத்தவர்கள், தானே அதில் சிக்கிக் கொள்வர்!

வி.ஆர்.சுமத்திராதேவி, பெங்களூரு: உலகில், பொய்யே பேசாத மனிதர் யாராவது உண்டா?

ஏன் இல்லை... ஊமைகள் பேசுவது இல்லையே!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us