தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள் !

அந்துமணி பதில்கள் !

அந்துமணி பதில்கள் !


PUBLISHED ON : டிச 05, 2010

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 05, 2010


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

** கே.மணவாளன், தேனி: பெண்களும் வேலைக்குச் செல்ல சம வாய்ப்பு இருக்கும் இக்காலத்தில், திருமணத்திற்குப் பின் பெண்ணை வேலைக்குப் போக வேண்டாம் எனக் கூறுவது சரியா?

சரியே இல்லை; புருஷன் ஆயிரம், ஆயிரமா சம்பாதித்தாலும், தன் பங்குக்கு மனைவியும் சம்பாதிக்கத்தான் வேண்டும். இதனால், ஐந்து பைசாவிற்கும், பத்து பைசாவிற்கும் கணவன் கையை எதிர்பார்க்க வேண்டியது இல்லை. மேலும், நாட்டு முன்னேற்றத்துக்கு உதவக் கூடிய கரங்களை கட்டிப் போட்டால், அதனால் நாட்டிற்கு ஏற்படும் நஷ்டம் எவ்வளவு என்றும் எண்ணிப் பாருங்கள்!

***

*இ.ஜனார்த்தனன், மதுரை: முதியோர் கல்வி பற்றி உங்கள் கருத்து என்ன?

தம்மையும் அறியாமல் அரசியல்வாதிகள் செய்த ஒரே உருப்படியான திட்டம்!

***

** ஏ.சம்பத், ஊட்டி: அரசியல்வாதிகளின் வாக்குறுதிகள், நடிகர், நடிகைகளின் பேச்சுக்கள் - ஒப்பிடவும்...

ஏனய்யா, வாக்குறுதிகளைக் கேட்டும், பேச்சுக்களைப் படித்தும், நேரத்தை வீணாக்குகிறீர்? போய் அந்த நேரத்தில் உருப்படியாக ஏதாவது செய்யும்!

***

*ச.சதீஷ், மணவூர்: அரசியல்வாதிகள் வெள்ளை ஆடையே அணிவது ஏன்?

உள்ளே இருக்கும் கறுப்பு வெளியே தெரியாமல் இருக்கவோ!

***

*எஸ்.ராமசுந்தர், தியாகதுருகம்: தமிழன் முன்னேற இப்போது மிக தேவையானது எது? தேவையற்றது எது?

பகுத்தறிவை தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பவர்களை அடையாளம் கண்டு கொள்வது - தேவையானது; கொடி பிடித்து, கோஷம் போட்டு, போஸ்டர் ஒட்டி, ஊர்வலம் போய் நேரத்தை வீணாக்குவது - தேவையற்றது!

***

*சி.பெருமாள், திருப்பூர்: பாஸ்போர்ட் வைத்திருக்கும் நான், வியாபார நிமித்தம் சிங்கப்பூர் செல்லும் கோஷ்டியுடன் இலவசமாக சென்று வருவதில் தீங்குள்ளதா?

நீங்கள் சொல்லும், 'இலவசம், கோஷ்டி' ஆகிய பதங்களைக் கேட்கும் போது, 'கொக்கு, குருவி' விவகாரமா தெரிகிறதே... முன்னெச்சரிக்கை தேவை; மாட்டிக் கொள்ளாதீர்கள்!

***

*ஜெ.பிரபாகரன், விருத்தாசலம்: திருமணத்திற்கு பின் காதலித்தவரை மறப்பதில் வல்லவர்கள் ஆண்களா? பெண்களா?

'மறந்து விட்டது போல நடிப்பவர்களேயன்றி, உள் மனதின் அடித்தளத்தில் பழைய நினைவுகள் இருந்து கொண்டே தான் இருக்கும் இருவருக்கும்!' என்கிறார் அனுபவ மிக்க உதவி ஆசிரியர் ஒருவர். இதே பதிலைப் போல கொஞ்சம் தயக்கத்துடன் கூறினார், விளம்பர நிறுவனம் ஒன்றில் அதிகாரியாக பணியாற்றும்  அம்மணி ஒருவர்!                         ***

*என்.கார்த்திகேயன், உடுமலைப்பேட்டை: தமிழன், தமிழன் என்று சொல்லிக் கொண்டு, தம் வாரிசுகளை ஆங்கிலம் மற்றும் இந்தி கற்பிக்கும் பள்ளிகளில் சேர்க்கும் நயவஞ்சகர்கள் பற்றி...

நயவஞ்சகர்கள் என்பதைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு நம்மிடம் விழிப்புணர்ச்சி வந்துள்ளது. இனி, தமிழ்நாடு உருப்படும்!                      ***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us