தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்

அந்துமணி பதில்கள்

அந்துமணி பதில்கள்


PUBLISHED ON : செப் 04, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 04, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பி.வர்ஷினி, புதுச்சேரி: கறுப்பான பெண்ணை பெற்று வைத்திருக்கும் தாய்மார்கள், தங்களுக்கு வரும் மருமகள் மட்டும் சிவப்பாக இருக்க வேண்டும் என்று மாநிறமுள்ள பெண்களை ஒதுக்குகின்றனரே...

மறந்து விடுங்கள் அந்த தாய்களை! கறுப்பு தான் அழகு என்ற எண்ணம், நம் இளைஞர்களிடம் வேகமாக பரவி வருகிறது. மாநிறம், கறுப்பு பெண்களையே இப்போது அதிகம் விரும்புகின்றனர். கறுப்புக்கு போட்டியும், டிமாண்டும் அதிகமாகப் போகிறது; கவலையை விடுங்கள்!

என்.வசந்தா, கடலூர்: பிற பெண்களைப் பற்றி மனைவியிடம் வர்ணிக்கும் ஆண்களை திருத்துவது எப்படி?

அழகை ரசிக்கும் மனப்பக்குவம் மற்றும் முயற்சி உள்ளவர்களுக்கு மட்டுமே, வர்ணனை கலை, கை வந்தது. வர்ணிக்கும்படி ஒருவர் இருந்தால், அவரை வர்ணிப்பதில் தவறு இருப்பதாக தெரியவில்லை. அந்த மனைவியும், இதே போல, வர்ணிக்கும்படி உள்ள ஆண்களை, தன் கணவனிடம் வர்ணிக்கலாம்; விகல்பமில்லாமல் அழகை ரசிக்கும் திறனை அந்த ஆடவன் (கணவன்) பெற்று இருப்பதால், தவறாக எடுத்துக் கொள்ள மாட்டார்!

எம்.வித்யாசாகர், காங்கேயம்: திறமையானவர்கள் பலர் இருந்தும், சில தலைவர்கள், வாரிசுகளை ஊக்குவிப்பதன் காரணம் என்ன?

யாரை குறிப்பிட்டு கேட்கிறீர்கள் என்று புரிகிறது. பெட்டி பெட்டியாக அடித்த கோடிகளை இழக்க, எந்த அரசியல்வாதிக்கு தான் மனம் வரும்!

ஆர்.சிவசந்திரன், மயிலாடும்பாறை: சில சமயங்களில் நம்மை அறியாமலேயே மற்றவர் மனதை வார்த்தைகளால் புண்படுத்தி விடுகிறோம்; இதற்கு என்ன தண்டனை?

புண்படுத்தி விட்டதை உணர்ந்து வருந்துவதே தண்டனை தான்; இப்படிப்பட்ட மனம் இருக்கும்போது, புண்பட்டவரிடம் நேரடியாக மன்னிப்பு கோருவது சிறந்த மருந்தாக அமையும்!

கே.ரமணன், நீலிகோனம்பாளையம்: ஆண் - பெண் சுதந்திரமான நட்பு எந்த அளவு இருக்க வேண்டும்?

ஊருக்கு - ஊரு, நாட்டுக்கு - நாடு, இனத்திற்கு - இனம் வெவ்வேறு அளவுகோல்கள் இதற்கு உள்ளன. நம்மூரின் லிமிட் என்னவென்பது உங்களுக்கு தெரியாதா என்ன?

எஸ்.ஜார்ஜ், பீளமேடு: லஞ்சம் வாங்குவது எந்த நாட்டில் முதலில் ஆரம்பித்தது?

இஸ்ரேலில் என்பது, சரித்திரத்தில் பதிவு செய்யப்பட்டது. ஆண்டவராகிய இயேசுநாதரை, 30 வெள்ளி காசுகளை லஞ்சமாக வாங்கி, யூதாஸ் ஸ்காரியோத் காட்டிக் கொடுத்தானே... அதற்கும் முன், லஞ்சம் இருந்ததா என்று எனக்குத் தெரியவில்லை!

எஸ்.முகம்மது சுல்தான், அம்மாபாளையம்: அரசு அலுவலகங்களில் காலந்தவறாது வந்து வேலை பார்க்கிறவர்களை உற்சாகப்படுத்த சின்ன, 'இன்கிரிமென்டோ' ஊக்கத் தொகையோ ஆண்டுதோறும் கொடுக்கலாமே...

லஞ்சத்தை பெருக்கவல்லவா வழி சொல்கிறீர்கள்... நேரத்திற்கு யார் யார் வருகின்றனர் என கவனிக்க அதிகாரி போட வேண்டும்; அவரை கவனித்தால், 'ரெக்கமண்ட்' செய்வார். நேரத்திற்கு வராதவர்கள் அவரை கவனித்து, ஊக்கத் தொகையையும், இன்கிரிமென்டும் வாங்குவர். இருக்கும் ஊழல் போதாதா... இன்னொன்றுக்கும் வழி சொல்கிறீர்களே!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us