தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்

அந்துமணி பதில்கள்

அந்துமணி பதில்கள்


PUBLISHED ON : டிச 18, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 18, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எஸ்.சந்தோஷ்குமார், வீரபாண்டி: மனிதர்கள் அனைவரும் ஒரே குலம், இனம் என்ற தத்துவத்தை, இந்தியாவில் இன்று எங்கேனும் பின்பற்றுகின்றனரா?

ஓ... பின்பற்றுகின்றனரே இந்தியா முழுவதும் உள்ள ஓட்டல்களில்! என்ன ஜாதி, என்ன இனம் என கேட்காமல், யார் வேலை தேடி வந்தாலும், சப்ளையர் முதல் கிளீனர் வரை வயதுக்கு ஏற்ற வேலையை கொடுக்கின்றனரே ஓட்டல் முதலாளிகள்! இன்னொன்றையும் சொல்லியாக வேண்டும்... 'நீ என்ன ஜாதி...' என கேட்காதது போலவே, 'உனக்கு என்ன வியாதி...' என்றும் கேட்காமல் வேலைக்கு சேர்த்துக் கொள்கின்றனர். ஓட்டல் சாப்பாடே கதி என்று இருப்பவர்களின் பாடு பரிதாபத்திற்கு உரியது தான்!

டி.ஜாஸ்மின், பெரியகுளம்: உங்களது எழுத்துகளை படிக்கும் போது, அடிக்கடி பீச்சுக்கு போவீர்கள் என தோன்றுகிறது. தினமும் பீச் ஏன்?

பல்வேறு காரணங்கள் இருந்தாலும், முக்கிய காரணம்; உடல் நலம்! கடல் காற்றில் அயோடின் இருக்கிறது. இக்காற்று உடல் மீது படுவதும், சுவாசிப்பதும், உடல் நலத்திற்கும், சரும வளத்திற்கும் நல்லது. கடலில் குளிப்பது, உடல்நலத்திற்கு மிக மிக நல்லது; ஆனால், நீச்சல் தெரிந்திருப்பது மிகவும் அவசியம்!

ஜி.ரத்தனவேல், கடலூர்: இக்கால மனிதன், அடுத்தவன் ஒருவனை மதிக்கிறான் என்றால், காரணம் என்னவாக இருக்கும்?

மதிக்கப்படுகிறவனின் மணி பர்ஸ் கனமானது என்பதை மதிக்கிறவன் அறிந்து வைத்திருக்கிறான் என்பது தான் காரணம். பணம் இல்லாதவனை எவனும் மதிப்பதில்லை இக்காலத்தில்!

ஆர்.ராஜசேகர், ஆண்டிபட்டி: 'தண்ணி' போட்ட பின், சிலர் சிரிப்பும், கும்மாளமும், கிண்டலும், கேலியுமாக தெருவில் ஜாலி செய்வது ஏன்?

இவர்கள் சொந்த பணத்தில் குடித்தவர்களாக இருக்க முடியாது. சொந்த பணத்தில் குடித்தவர்கள் சோகமாக அல்லவா இருப்பர்!

தொ.மாலவன், கோவை: எந்த மாதிரியான எதிர்கட்சிகளை வரவேற்கிறீர்கள்?

பொதுமக்களின் அன்றாட சமூக வாழ்வுக்கு உதவக் கூட வேண்டாம்; உபத்திரவம் தராத எதிர்கட்சிகளை வரவேற்கிறேன்.

எம்.ஷ்யாம் சுந்தர், மயிலாப்பூர்: லவ் அட் பர்ஸ்ட் சைட் - கண்டதும் காதல் என்கின்றனரே சிலர்... இது சாத்தியமா?

'லவ் அட் பர்ஸ்ட் சைட்' சாத்தியம் தான் என்கின்றனர், அனுபவப்பட்டவர்கள். புராணக் கதைகளிலும், 'புரூவ்' ஆகியுள்ளது. பர்சனல் அனுபவத்தில் என்னால் பதில் சொல்ல தெரியவில்லை; காரணம், அனுபவம் இல்லை.

எஸ்.வெங்கட், வடபழனி: பெண்களும், ஓரக்கண்ணால் ஆண்களை சைட் அடிப்பதை மறுக்க முடியுமா உங்களால்?

எதற்காக மறுக்க வேண்டும்... சைட் அடிப்பது என்ன தலையை சீவி விடும் அளவிற்கான குற்றமா என்ன... பெருசா குற்றம் கண்டுபிடிச்சுட்டு வந்துட்டீங்களே...

ஓ.செல்வகணேஷ், ஊட்டி: என் மனதுக்கு, 16 ஒன்றை ரொம்ப பிடிச்சுப் போச்சு; அவளும் என்னை விரும்ப வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இதற்கு ஒரு சீரியஸ் யோசனை கூறுங்களேன்...

ரெண்டுங்கெட்டான் வயசு, 16; சினிமா கதாநாயகன் போல ஏடாகூடமாக ஏதாவது முயன்று, 16ன் அப்பா, உங்கள் முதுகை புரோட்டா கல் ஆக்கி விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us