தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : பிப் 05, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 05, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ம.சரவணக்குமார், பொள்ளாச்சி: படித்தவர்கள் எல்லாம் அரசு வேலைக்கு அலைகின்றனரே...

இந்த கருத்து தவறோ என்று எண்ணும் விதத்தில் அமைந்துள்ளது, சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு சர்வே! பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்பு படித்தவர்களிடையே, எடுத்த சர்வேயில், தனியார் துறை வேலையையே, 79 சதவீதம் பேர் விரும்புவதாக கூறியுள்ளனர்!

ஜி.முரளிதரன், மயிலாடும்பாறை: தனக்கு வரப் போகும் மனைவியிடம் இன்றைய இளைஞன் எதை அதிகம் எதிர்பார்க்கிறான்?

'டப்பு!' அறிவு, படிப்பு, குணம், அழகு எல்லாவற்றையும் விட, நோட்டுக் கட்டுகளையும், தங்கக் கட்டிகளையுமே அதிகம் எதிர்பார்க்கிறான்!

எல்.கவுசிகன், சென்னை: அரசியலில் ஊழல் பெருக காரணம் என்ன?

கவுரவமானவர்கள் விலகி, கையெழுத்து மட்டுமே போடத் தெரிந்தவர்கள், அரசியலில் நுழைந்து விட்டது தான் காரணம்!

பொ.கனகராஜ், வேளச்சேரி: இந்தியாவில் சில தனியார் நிறுவனங்கள், சிறிய ஜெட் விமானங்களை வாடகைக்கு விடுகின்றனவாமே... வாடகை எவ்வளவு இருக்கும்?

ஒரு மணி நேரம் பறக்கும் செலவில், ஒரு, 'நானோ' கார் வாங்கி விடலாம். அதாவது, ஆறு சீட் உள்ள குட்டி விமானத்தில் பயணிக்க, ஒரு மணி நேரத்திற்கு, 2 லட்சம் ரூபாய் கட்டணம். குறைந்த பட்சம் இரண்டு மணி நேரம் வாடகைக்கு எடுக்க வேண்டும். இது போக, விமான நிலையத்தில் தரை இறங்க, ஏற, பார்க்கிங் கட்டணம் தனி. விமானிகள், பணியாளர்கள் நான்கு பேருக்கு தலைக்கு, 20 ஆயிரம் ரூபாய். என்ன... ஜாலியா ஒரு ரவுண்டு போய் வருவோமா?

க.தமிழ்ச்செல்வி, அரண்மனைபுதூர்: படிக்காத பெண்கள், கறுப்பாக உள்ள பெண்களுக்கு திருமணமாவது கஷ்டமாகி வருகிறதே...

படிக்காத பெண்களையாவது, படிக்காதவன் கட்டிக் கொண்டு போய் விடுகிறான். கறுப்பான பெண்கள் தான் திண்டாடுகின்றனர். ஆனால், கறுப்பு தான் நிஜமான அழகு என்பது, பல ஆண்களுக்கு ஏனோ புரிவதில்லை.

என்.பாரதபிரியா, குமுளி: பெண்களைக் கவர, இந்த ஆண்கள் படும் பாடென்ன... கவர்ந்தபின், எங்களைப் படுத்தும் பாடென்ன... ஏன் சார், இந்த ஆண்களின் போக்கு இப்படி இருக்கிறது?

'பழகப் பழக பாலும் புளிக்கும்' என்ற பழமொழியில் நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பரோ! பெண்களுக்கு இந்த பழமொழியில் நம்பிக்கை வராது என்ற எண்ணமும் காரணமாக இருக்கலாமே!

ஜெ.அரவிந்த், விழுப்புரம்: இப்போதெல்லாம் ஆண்களை, பெண்கள் மதிப்பதில்லையே...

ஆணுக்கு ஈடாக பேசினால், பதிலளித்தால், 'மதிக்கவில்லை' என்று சொல்லி விடுவீர்களே... கண் தெரியாத, காது கேட்காத, வாய் பேசாத, மண் புழுவாக, அடிமைகளாக பெண்கள் இருக்க வேண்டும் என்பது தானே, பெரும்பாலான ஆண்களின் விருப்பம்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us