sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்

அந்துமணி பதில்கள்

அந்துமணி பதில்கள்


PUBLISHED ON : ஏப் 02, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 02, 2017


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எம்.சபீனா, கம்பம்: பெண்கள் அளவுக்கதிகமாக நகை அணிவது ஏன்?

தற்பெருமையடித்துக் கொள்ள, தங்களிடம் உள்ள செல்வச் செழிப்பை வெளிப்படுத்தி, மற்ற பெண்களை,- தோழியரை - அக்கம், பக்கத்தாரை - உறவினர் பெண்களை பொறாமை கொள்ள வைக்க, - அதைப் பார்த்து இவர்கள் சந்தோஷம் கொள்ள, சில பெண்கள் இப்படி நகை அணிகின்றனர்! இதில், பரிதாபம் என்னவென்றால், இப்படி நகை அணிபவர்களில் பலருக்கு கழுத்தே இருப்பதில்லை. திருமணமானவர் என்றால், தாலி ப்ளஸ் ஒரு நெக்லஸ்... ஆகாதவர் என்றால், ஒற்றை சங்கிலி போதுமே - விசேஷ தினங்களில் அணிய!

என்.கனகலட்சுமி, திருவொற்றியூர்: உள்ளத்திலுள்ள ரகசியங்களை பரிமாறிக் கொள்ள ஏற்ற தோழியை எப்படி தேர்ந்தெடுப்பது?

சிறந்த தோழி, 40 பக்க நோட்டு; அதில் எழுதுங்கள்... ஒரு முறைக்கு இரு முறை படியுங்கள்! தீயிட்டு கொளுத்தி விடுங்கள். அந்தரங்க நண்பியாக எவரையும் கருத முடியாத காலம் இது!

பி.சந்திரகுமார், மதுரை: புதிய எழுத்தாளர்களை ஊக்குவிப்பதில் பத்திரிகைகள் ஆர்வம் காட்டுவதில்லையே...

அப்படி சொல்ல முடியாது. பல்வேறு ரூபங்களில், எல்லா பத்திரிகைகளும், சிறுகதை, கவிதை மற்றும் கட்டுரைப் போட்டிகளை அறிவிப்பது எதற்காக? புதுப்புது எழுத்தாளர்களை கண்டுபிடித்து, ஊக்குவிக்கவே! தாம் எழுதியது, அடுத்தடுத்து வெளியாக வேண்டும் என, எதிர்பார்க்கின்றனர் புதிய எழுத்தாளர்கள். அது, நடக்காதபோது, சோர்ந்து போய், மேற்கண்ட கேள்வியை கேட்கின்றனர்.

ஜி.கார்த்திக், பண்ணைப்புரம்: ஒரு குடும்பத்தை குதூகலமாக்குவது, கணவரின் வருமானமா, மனைவியின் நிர்வாகத் திறனா?

சந்தேகமில்லாமல் இரண்டா வதே! எவ்வளவு குறைந்த வருமானம் கொண்டு வந்தாலும், அதில் கூட மிச்சம் வைக்கத் தெரிந்தவர்கள் பெண்கள் தான். 99 சதவீத பெண்களுக்கு, இது கைவந்த கலை. பெண்களின் நிர்வாகத் திறமையே, குடும் பத்தில் குதூகலம் நிலவ காரணம்!

டி.ராஜசேகரன், கோவை: சம்பாத்தியம் இல்லாத இளைஞர்கள் திருமணம் செய்து கொள்வது சரியா?

சுய கவுரவம் இல்லை என்றால், திருமணம் செய்து கொள்ளலாம். மனைவியின் சோப்பு, சீப்பு, பவுடர், ப்ரா, பேன்ட்டிஸ் தேவைகளுக்கு கூட, மாமனாரிடமோ, தகப்பனாரிடமோ கையேந்தி நிற்க கூச்சப்பட வில்லை என்றால், உடனே தேதி குறிக்கலாம்!

எம்.சேக்முகம்மது, திருப்பூர்: காங்கிரஸ் தலைவர்கள், அடிக்கடி தங்களுக்குள் மோதிக் கொள்கின்றனரே... ஏதாவது மாற்றம் ஏற்படுமா?

ம்ஹூம்... எந்த மாறுதலும் வரப் போவதில்லை; நன்மையும் கிடைக்கப் போவதில்லை. பாறையும், கண்ணாடியும் மோதினால், ஏதாவது நிகழலாம். இங்கே, பஞ்சும், பஞ்சும் அல்லவா மோதிக் கொள்கிறது.

ஜெ.மித்ரா, காஞ்சிபுரம்: எப்போதுமே, என்னைப் புகழ்ந்து தள்ளுகின்றனரே என் தோழிகள்...

இப்படிப்பட்டவர்களிடம் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நம்மை அறியா மலேயே, நம்மிடம் மண்டைக் கனத்தையும், தற்பெருமையையும் உண்டாக்கி விடுவர். மண்டைக் கனம் ஏற்பட்டுவிட்டால், உங்களையே, நீங்கள் கெட்டிக்காரியாக நினைக்க ஆரம்பிப்பீர்கள்; அப்புறம். தலை, கால் புரியாது. அதேபோல, தற்பெருமை ஒரு மனிதனை அழித்து விடும்; ஜாக்கிரதை!

வ.எழிலன், கிருஷ்ணாபுரம்: எப்பேர்பட்ட ஆளையும், ஒரு பெண் நினைத்தால், 'வீழ்த்த' முடியும் எனும் கூற்று, எந்த அளவுக்கு உண்மை?

'வீழ்த்த' எனும் பதத்தை படிக்கும் போதே, நெகடிவ் சைடை நீங்கள் குறிப்பிடுவது போல் தோன்றுகிறது. இருந்தாலும், ஒரு பெண் நினைத்தால், 'வீழ்த்த' முடியும் என்பதில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனாலும், ஒரு ஆணை, 'திருத்த வேண்டும்; நல்வழிப்படுத்த வேண்டும்' என்று பெண் நினைத்தால், அன்றும், இன்றும் ஆண்களை கவரும், திரும்ப படிக்கவும், 'வீழ்த்தியும்' அல்ல - திறமை, பெண்களிடம் உண்டு என்பது நூற்றுக்கு நூறு உண்மையே!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us