தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : ஜூலை 30, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 30, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* ஆ.ரவிக்குமார், ஒட்டன்சத்திரம்: நான், தனியார் நிறுவனத்தில் 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை பார்க்கிறேன். 'இன்னும் எத்தனை நாட்கள் இப்படியே இருப்பாய்...' எனக் கூறும் நண்பன், ஒரு கட்சியின் பெயரைக் கூறி, அதில் சேர சொல்கிறான்; சேரலாமா?

கட்சியில் சேருவதற்கு பதில், அந்த நண்பருடன் சேருவதை விட்டு விடுங்கள். வாங்கும் சம்பளம், 'கோவிந்தா'வாகி, கடன்காரனாகத் திரிய ஆசைபட்டால், கட்சியில் சேருங்கள்!

ஜி.செந்தில்முருகன், சென்னை: எனக்கு, அதிர்ஷ்டமே இல்லையே...

அதிர்ஷ்டம் என்பது பொருள் இல்லாத சொல். மூடநம்பிக்கை கொண்டவர்கள் தான், இந்த சொல்லை நம்புவர். இந்த நம்பிக்கை இருக்கும் வரை, வாழ்வில் முன்னேறவே முடியாது. ஏனெனில், அதிர்ஷ்டம் என்று ஒன்று இல்லவே இல்லை!

* கே.சாரதா, திருப்பூர்: பெண்கள் மீது உயர்ந்த கருத்து கொண்டுள்ளீர்களே... ஆனால், அவர்கள் விபசாரத்திலும், கள்ளச் சாராய வியாபாரத்திலும் ஈடுபடுவது குறித்து என்ன சொல்லப் போகிறீர்கள்?

பெண்ணான நீங்களே இப்படி ஒரு கேள்வி கேட்கலாமா... விபசாரத்தை விரும்பியா ஏற்றுக் கொள்கின்றனர்? சிந்தித்துப் பாருங்கள்... இதே போலவே கள்ளச்சாராயம்... வயிற்றுப் பிழைப்புக்காக, இவர்கள் இத்தொழிலில் தள்ளப்படுகின்றனர் என்பதே உண்மை. பேசிப் பாருங்களேன் அவர்களிடம்!

பி.கே.கண்மணி, ராமேஸ்வரம்: உங்கள் பாட்டி வைத்த வத்தல் குழம்பு, - நட்சத்திர ஓட்டல், 'சைனீஸ் டிஷ்...' எது உங்களுக்கு மிகவும் பிடித்தமானது?

பாட்டியிடம் கற்று, நானே தயாரிக்கும் சுண்டைக்காய் வத்தல் குழம்பு, அரைக்கீரை மசியல், சுட்ட அப்பளம்... அப்புறம், தொட்டு கொள்ள, நாரத்தங்காய் ஊறுகாய். (டாப் டக்கர்ம்மா... எழுதும்போதே, 'ஜொள்' ஊறுகிறது.)

ஆர்.தமிழ்வேணி, செங்கல்பட்டு: உடல் ஊனமுற்றோரைவிட கஷ்டம் யாருக்கேணும் வருமா?

ஓ... வருமே! எவன் ஒருவன் கடன் வாங்கி விட்டானோ, அவனுக்கு கை,- கால் இல்லாதவர்களை விட கஷ்டம் அதிகம். கடன் இல்லாதவனுக்கு வேதனையே இல்லை; கடன் வாங்கியவன், 'ஏசி'யில் இருந்தால் கூட வியர்க்கும்!

* எம்.ஜெயக்குமார், ராமநாதபுரம்: எதற்கெடுத்தாலும் வாதப் பிரதிவாதம் செய்யும், 'டீன்-ஏஜ்' பருவத்தினரை சமாளிப்பது எப்படி?

அனைத்தையும் அறியத் துடிக்கும் பருவம், இது. அதன் பொருட்டே வாதப் பிரதிவாதங்களில் இறங்குகின்றனர். இவை, இயற்கைக்கு முரணானது அல்ல. இந்த வயதில் அடக்குமுறையை பிரயோகிப்பது, எதிர்வாத பலனையே தரும். உள்ளவற்றை மறைக்காமல், தீயவற்றை அப்பட்டமாக கூறிவிட வேண்டும். அதேநேரம், உங்கள் கருத்துகள், அவர்கள் மீது திணிக்கப்படுகிறது என்று, அவர்கள் உணரா வண்ணம் செயல்பட வேண்டும்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us