sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஏப்ரல் 07, 2026 ,பங்குனி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்துமணி பதில்கள்!

/

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : ஏப் 22, 2018

Google News

PUBLISHED ON : ஏப் 22, 2018


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜி.கலைவாணி, மதுரை: ஆண் - பெண், யாருக்கு காதல் எளிதில் கசந்து விடுகிறது?

முதலாமவருக்குத் தான்; நிலையில்லாத மனம் படைத்தவர்கள் ஆண்கள். மலர் விட்டு மலர் தாவும் வண்டின் குணம் கொண்டவர்களும் அவர்களே... ஆனால், பிடித்த பிடியை விட மாட்டாள் பெண்!

எம்.ஆனந்தன், திருவள்ளூர்: மனைவி சொல்லுக்கு கட்டுப்பட்டு நடக்கும் கணவன்மார்கள் தானே புத்திசாலிகள்?

பிழைக்கத் தெரிந்தவர்கள்; மீனாட்சி ஆட்சி நடைபெறும் வீடுகளில், மனைவியின் சொல்லை அப்படியே ஆமோதித்து நடக்கும் கணவன், குடும்ப நிம்மதியை முதலாவதாக எண்ணுபவன். எனவே, அவன் புத்திசாலியும் கூட!

ஆர்.இந்திரா, சிவகங்கை: இன்றைய மக்களின் அதிகபட்ச விருப்பமாக இருப்பது எது?

வம்புகள்; தங்களைத் தவிர, மற்றவர்கள் பற்றிய வம்புப் பேச்சுக்கள் பேசுவதையே விருப்பமான தொழிலாக கொண்டுள்ளனர்!

* அ.தினேஷ், ஊட்டி: வேலையில்லா பட்டதாரிகளுக்கு, உங்கள், 'அட்வைஸ்' என்ன?

டேபிள், - சேரில் அமர்ந்து பார்க்கும், 'ஒயிட் - காலர் ஜாப்'க்கு காத்திருந்து, வாழ்வின் முக்கிய கட்டத்தை வீணாக்கி விடாதீர்கள்... முதல் போட தேவையில்லாத எத்தனையோ தொழில் உள்ளது. அதில், ஆயிரக்கணக்கில் வருமானமும் கிடைக்கும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்!

சி.சுப்பையா, விருதுநகர்: கணவன் - மனைவி இருவருமே நல்ல வேலையில் இருந்து, கை நிறைய சம்பாதித்தாலும், மாதந்தோறும் பஞ்சப்பாட்டு பாடுகின்றனரே...

ஊதாரிகள், பணத்தின் அருமை தெரியாதவர்கள், ஊருக்காக வாழ்பவர்கள். இவர்களே ஒருவர் சம்பளம் தான் வருகிறது என எண்ணி, செலவு செய்யட்டும்... 'பேங்க் பேலன்ஸ்' எக்கச்சக்கமாகி விடும்; வீட்டைத் தேடி, கடன்காரன் வரும் தொல்லை நின்று விடும்; இரவில், தலையணையில் தலை சாய்த்ததும், உடனே துாக்கம் வரும்.

எம்.பத்மா, புதுச்சேரி: பச்சோந்திக்கும், மனித மனதிற்கும் ஒற்றுமை உண்டு என்பது உண்மையா?

உண்மை தான்; தன்னைச் சுற்றி உள்ள நிறத்திற்கு ஏற்றபடி தன் நிறத்தை மாற்றிக் கொள்கிறது, பச்சோந்தி; தான் பழகும் இடத்திற்கு ஒத்துப்போவது போல் குணத்தை மாற்றிக் கொள்கிறது, மனித மனம்!

* என்.ஸ்ரீதரன், சென்னை: தனி மனித சுதந்திரம் என்றால் என்ன?

இந்த செயல்கள் எல்லாம் மற்றவர்கள், நமக்கு செய்து விடக்கூடாது என்று எச்செயல்கள் பற்றியெல்லாம் எண்ணுகிறீர்களோ அவற்றை நீங்கள், அடுத்தவர்களுக்கு செய்யாதிருப்பதே தனி மனித சுதந்திரம்!






      Dinamalar
      Follow us