தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : மே 20, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 20, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

க.ராமசாமி, சிவகங்கை: தினமும் சூரியன் காலையில் உதிக்கிறதே... இது, திடீரென்று நின்று போய் விடாதா?

கவலையேபடாதீர்கள்... இன்னும், 50 ஆயிரம் லட்சம் ஆண்டுகள் ஒளி வீசும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அவ்வளவு காலமா நாம் உயிருடன் இருக்கப் போகிறோம்... இன்னொரு உபரி தகவல்; சூரியனின் ஒளி பூமியை அடைய, 8.3 நிமிடங்கள் ஆகிறதாம்!

* ஜெ.குமார், சென்னை: இன்றைய சமுதாய சூழலில், துணிச்சல் யாருக்கு அதிகம்... ஆணுக்கா - பெண்ணுக்கா?

இயற்கையிலேயே பெண்ணுக்கு துணிவு அதிகம்; அதனாலேயே அவர்களால் பல வேதனைகளையும், வலியையும் தாங்கி, சமாளிக்க முடிகிறது. ஆண், வெளிக்காட்டும் துணிவை பெண்ணாலும் வெளிக்காட்ட முடியும்; ஆனால், இந்த சமூகம் அவளை, 'தட்டி' வைத்துள்ளது!

எல்.ராஜகோபால், திருவள்ளூர்: உண்மை என்றால் என்ன?

பேஷ்... பேஷ்... பிழைக்கத் தெரிந்து விட்டது உங்களுக்கு... தேர்ந்த அரசியல்வாதி ஆகி விடுவீர்கள்!

* எம்.கண்ணன், சிதம்பரம்: பணம், அறிவு, படிப்பு, நாகரிகம் எல்லாம் இருக்கும் சிலர், அமைதியாக இருக்கும்போது, பணத்தை மட்டுமே வைத்திருக்கும் சிலர், ரொம்பவும் அலட்டிக் கொள்கின்றனரே... இவர்களை திருத்துவது எப்படி?

நீங்கள் கூறியுள்ள இரண்டாவது, மூன்றாவது, நான்காவது சமாசாரங்களை இவர்கள் பெறும்போது திருந்துவர்!

டி.அசோகன், கடலுார்: பணத்தை வெறுப்பதாக சிலர் அடிக்கடி கூறுகின்றனரே...

உண்மை; அவர்கள் பணத்தை விரும்புவதில்லை தான். ஆனால், அதில் ஒரு சின்ன திருத்தம்... அவர்கள் வெறுப்பது, அடுத்தவரிடம் உள்ள பணத்தை; தங்கள் பர்சில் உள்ள பணத்தை அல்ல!

ஆர்.ராகவன், திண்டுக்கல்: திருமணத்திற்கு பெண் பார்க்கச் செல்வோருக்கு என்ன அறிவுரை கூறுகிறீர்...

பெண் பார்க்க செல்லும் முன், புகைப்படம் வாங்கிப் பாருங்கள். சில பெண்கள், 'போட்டோவில் என் முகம் சரியாக இருக்காது...' என்ற குறை கொண்டவர்கள். அப்படிப்பட்டோரை, அவர்கள் அறியாமலேயே ஏதாவது பொது இடத்தில் பாருங்கள்; பிடித்திருந்தால் மட்டுமே நேரில் செல்லுங்கள். எடுத்த எடுப்பிலேயே நேரில் சென்று, 'பிடிக்கலை...' என்றோ, 'போய் கடுதாசி போடுகிறோம்...' என்றோ மனதை உடைக்கும், எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் செயலை செய்யாதீர்கள்!

வி.காயத்ரி, நீலகிரி: இல்லாமையைப் போக்க முதல் தேவை உழைப்பா, அறிவா?

அறிவுடன் கூடிய உழைப்பு. உழைக்கிறேன் பேர்வழி என மண்வெட்டிக் கொண்டிருந்தாலோ, கருங்கல் உடைத்துக் கொண்டிருந்தாலோ இல்லாமையை போக்க முடியாது. அதே நேரம், மண் வெட்டி,- கல் உடைத்து வியாபாரம் செய்வதில் அறிவையும் பயன்படுத்தினால், இல்லாமையே இல்லை என்றாக்கலாம்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us