தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : மார் 13, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 13, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

*பி.ராஜேஷ்குமார், சின்ன காஞ்சிபுரம்: ஓட்டலுக்கு செல்கிறீர். சர்வர், விரல் நனைய, தண்ணீர் கொண்டு வந்து வைக்கிறார். என்ன செய்வீர்?

சர்வரை கடிந்துரைப்பீரா? இன்சொல்லால் அறிவுரை சொல்வீரா?

ரெண்டுமே கிடையாது! 'டேய்... சர்வர்கிட்ட எதுவும் பேசிக்காதே... அவர், 'மூட்' எப்படி இருக்குமோ? ஆர்டர் பண்ணின தோசையிலே, எதையாவது போட்டுக் கொண்டு வந்துடப் போறாரு...' என்று, ஒரு நண்பன் எப்போதோ சிறு வயதில் தமாசாகச் சொன்னது நினைவுக்கு வந்து விடும்.

***

** எம்.கார்த்திகேயன், வடவள்ளி: 'பத்து வருடங்களுக்கு, ஜனநாயகத்தை மூட்டை கட்டி வைத்துவிட்டு, சாட்டையை கையில் தூக்கினால், மக்கள் திருந்துவர்!' என கவியரசு கண்ணதாசன் கூறினாரே... சாத்தியமா?

'எமர்ஜன்சி' நிலையை ஒரு உதாரணமாக எடுத்துக் கொண்டு, கவிஞரின் கூற்றை ஒப்பிட்டுப் பாருங்கள்; விடை கிடைக்கும்!

***

*கே.ராமச்சந்திரன், வாடிப்பட்டி: சர்வே செய்தி ஏதும் உண்டா?

ராணுவத்தினர் பற்றிய ஒரு சர்வே செய்தி இது... ராணுவத்தினரின் மனைவியர், 10 பேரில், 9 பேர் ராணுவ பணியில் தம் கணவர் இல்லாதிருந்தால், குடும்ப வாழ்க்கை இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும் என கூறுகின்றனராம்! தம் மகளை மிலிட்டரிகாரனுக்குத்தான் கொடுப்பேன் என ராணுவத்தினர் கூறினால், 10ல் மூன்று மனைவியர் தான், சம்மதம் கூறுகின்றனராம்!

***

*என்.ஜீவானந்தம், மேட்டுப்பாளையம்: பலமுறை முயன்றும், குறுக்கெழுத்துப் போட்டியில் நான் பரிசு பெற முடியவில்லையே... அதிர்ஷ்டம் தான் காரணம் என்று மட்டும் கூறி விடாதீர்கள்!

உங்களது விடா முயற்சியைப் பாராட்டுகிறேன். பாபரின் சரித்திரம் தெரியுமல்லவா? 17 முறை முயன்ற பின்தான் வெற்றி கனி அவர் கையில் விழுந்தது.

***

** ஜி.கே.லட்சுமணன், நெல்லிக்குப்பம்: சிலர், நம்மிடம் நேரம் போவது தெரியாமல், பேசுகின்றனரே... அவர்களை, 'அவாய்டு' பண்ண ஒரு உபாயம் தாருங்களேன்...

நைசாக கத்தரிக்கோல் போட வேண்டுமா? லேனா தமிழ்வாணன் வழியை கடைபிடியுங்கள். தன் ஆபிஸ் மேஜையில், 'எனக்கு அதிக வேலை உள்ளதே!' என எழுதி வைத்திருக்கிறாராம்.***

*பா.நாகராஜன், கடலூர்: வேலை இல்லாத் திண்டாட்டத்திற்கு காரணம் அரசா, இளைஞர்களா?

'நம்மால் முடியும் தம்பி, நம்பு!' என விபரம் தெரிந்தவர்கள் எத்தனை முறை எடுத்துச் சொல்லியும் கேட்காத இளைஞர்கள்தான் காரணம்!

***

*டி.பாலசுந்தரம், நெய்வேலி: பெண்கள், கூந்தலை முன்னே போட்டுக் கொள்வது, முதுகு அழகை காட்டவா, முடி அழகை காண்பிக்கவா?

முன்னே போடும் அளவுக்கு, இக்கால பெண்களுக்குக் கூந்தல் எங்கே இருக்கு!

***

** எம்.அன்பரசு, பெரியகுளம்: பத்திரிகை ஆசிரியரிடம் கேட்கக் கூடாத கேள்வி எது?

'உங்க பத்திரிகை சர்க்குலேஷன் எவ்வளவு?'

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us